விருதுநகரில் சொத்துவரி ரசீதில் பெயர் மாற்றத்துக்கு ரூ.4000 லஞ்சமா? வருவாய் ஆய்வாளர் சிக்கிய பின்னணி

Subscribe to Oneindia Tamil

விருதுநகர்: வீடு வாங்கிய பிறகு சொத்துவரி ரசீதில் பெயர் மாற்றம் செய்யவும் லஞ்சம் கொடுக்க வேண்டுமா?விருதுநகரில் நடந்துள்ள ஒரு சம்பவம் இந்த கேள்வியை எழுப்பியுள்ளது. ஏற்கனவே அரசு அலுவலகங்களில் லஞ்சப் புகார்கள் அதிகரித்து வரும் நிலையில், தவெக அரசு ஆட்சிக்கு வந்த 100 நாட்களில் ஊழலை ஒழிப்போம் என்று அளித்த வாக்குறுதி என்ன ஆனது என்ற கேள்வியும் பரவலாகவே எழுகிறது.

விருதுநகர் ஆவலப்பசாமி கோவில் தெருவை சேர்ந்தவர் மைக்கேல்ராஜ்.. இவர் அதே பகுதியில் வீடு மற்றும் இடம் ஒன்றை வாங்கியுள்ளார். இதையடுத்து, சொத்துவரி ரசீதில் தனது பெயரை மாற்றுவதற்காக நகராட்சி வருவாய் ஆய்வாளர் ஹென்றி டேவிட்டை அணுகியுள்ளார்.

virudhunagar vao

விருதுநகர் வருவாய் ஆய்வாளர்

அப்போது பெயர் மாற்றம் செய்வதற்கு ரூ.4,000 லஞ்சம் தர வேண்டும் என்று ஹென்றி டேவிட் கேட்டதா கூறப்படுகிறது. இதனால் அதிர்ச்சியடைந்த மைக்கேல்ராஜ், வேறு வழியின்றி ரூ.3,000 கொடுப்பதாக ஒப்புக்கொண்டுள்ளார். எனினும், அந்த லஞ்ச பணத்தையும் எதுக்காக தர வேண்டும? ரசீதில் பெயர் மாற்றவும் லஞ்சமா? என்று தயங்கினார்..

லஞ்சம் கொடுக்க விரும்பாத அவர் இதுகுறித்து விருதுநகர் மாவட்ட லஞ்ச ஒழிப்புத்துறை போலீசாரிடமும் புகார் தந்துவிட்டார்.. இதையடுத்து ரசாயனம் தடவிய ரூ.3,000 பணத்தை மைக்கேல்ராஜிடம் கொடுத்து அனுப்பிய போலீசார், பணத்தை வாங்கிய ஹென்றி டேவிட்டை கையும் களவுமாகப் பிடித்து கைது செய்தனர்.

சொத்துவரி பெயர் மாற்றத்துக்கே லஞ்சமா?

வீடு, நிலம் வாங்குவது என்பது சாதாரண மக்களின் நீண்டகாலக் கனவு. அதற்காக தங்களுடைய சேமிப்பையும், சில நேரங்களில் வங்கிக் கடனையும் பயன்படுத்துகின்றனர். ஆனால், சொத்து வாங்கிய பிறகும் பெயர் மாற்றம், பட்டா மாற்றம் போன்ற அரசு அலுவலக வேலைகளுக்காக லஞ்சம் கேட்கப்பட்டால் பொதுமக்கள் என்ன செய்வார்கள்?

குறிப்பாக வருவாய்த்துறை, பதிவுத்துறை போன்ற துறைகளில் பொதுமக்கள் தினமும் பல்வேறு தேவைகளுக்காகச் செல்ல வேண்டியுள்ளது. இங்கு லஞ்சம் கேட்கப்படும் புகார்கள் தொடர்ந்து வெளிவருவது கவலையை ஏற்படுத்துகிறது.

லஞ்சம் - பெண் அதிகாரிகள்

லஞ்சம் வாங்கியதாக கைது செய்யப்படும் அரசு ஊழியர்களில் பெண்களும் இடம்பெறுவது கவனிக்கத்தக்கதாக உள்ளது. வருவாய்த்துறை, பதிவுத்துறை உள்ளிட்ட பல்வேறு அரசு அலுவலகங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் நடத்தும் சோதனைகளில் ஆண் அதிகாரிகள் மட்டுமல்லாமல், இளம் பெண் அதிகாரிகளும் சிக்கி வருவது கவலையையும், வேதனையையும் தருகிறது.

100 நாட்களில் லஞ்சத்தை ஒழிப்போம்

தவெக ஆட்சிக்கு வந்தபோது ஊழல் ஒழிப்பு முக்கியமான எதிர்பார்ப்பாக இருந்தது. முதல் 100 நாட்களில் லஞ்ச ஊழலை ஒழிப்போம் என்ற வாக்குறுதியும் மக்களிடையே எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது. ஆனால், அரசு அலுவலகங்களில் லஞ்சம் கேட்கப்படுவதாக வரும் புகார்கள் முழுமையாக முடிவுக்கு வந்ததாகத் தெரியவில்லை.

லஞ்சம் வாங்கும் அதிகாரிகளை கைது செய்வது அவசியமான நடவடிக்கைதான். அதே நேரத்தில், பொதுமக்கள் தங்களுடைய நியாயமான அரசு வேலைகளைச் செய்ய லஞ்சம் கொடுக்க வேண்டிய நிலை ஏற்படாமல் தடுப்பதுதான் முக்கியம்.

விருதுநகரில் சொத்துவரி பெயர் மாற்றத்துக்காக ரூ.3,000 லஞ்சம் வாங்கியதாக வருவாய் ஆய்வாளர் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம், அடிமட்ட அரசு அலுவலகங்களில் ஊழலைத் தடுக்க இன்னும் என்ன செய்ய வேண்டும் என்ற கேள்வியை எழுப்பியுள்ளது....!!

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+