விருதுநகரில் ரூ.100 கோடி முதலீடு.. திருப்பூர், கோவை போலவே ஜவுளி ஆலை.. ஜெர்மனி போகும் தமிழக துணிகள்

Subscribe to Oneindia Tamil

விருதுநகர்: தமிழகத்தில் ஜவுளி தொழில் என்றாலே திருப்பூர், கோவை பகுதிகள்தான் நமக்கு நினைவுக்கு வரும். ஆனால், விருதுநகரிலும் ரூ.100 கோடி முதலீட்டில் புதிய ஜவுளி உற்பத்தி ஆலை அமைய போகிறதாம்.. மதுரையைச் சேர்ந்த தியாகராஜர் மில்ஸ் குழுமமும், ஜெர்மனியைச் சேர்ந்த யூரோ டெக்ஸ்டைல்ஸ் நிறுவனமும் இணைந்து இந்த புதிய தொழில் முயற்சியில் இறங்கியுள்ளன. இதை பற்றி இங்கே சுருக்கமாக பார்ப்போம்..!!

விருதுநகரில் அமைய உள்ள இந்த தொழிற்சாலையில் 100 சதவீதம் பருத்தியால் தயாரிக்கப்படும் ஜக்கார்டு ரக துணிகள் உற்பத்தி செய்யப்பட உள்ளன. துணிகளில் பூக்கள், கோடுகள் உள்ளிட்ட அழகான டிசைன்களை நெய்ய உதவும் இந்த தொழில்நுட்பம் மூலம், வெளிநாட்டு சந்தைகளுக்கு ஏற்ற உயர்தர துணிகளை தயாரிக்க திட்டமிட்டுள்ளனர். இதற்காக 2 நிறுவனங்களும் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளன.

Virudhunagar Textile Factory

இந்த ஆலை மூலம் உயர்தர பருத்தி துணிகள் தயாரிக்கப்பட்டு, முதலில் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட உள்ளன. இந்த திட்டத்தின் ஸ்பெஷாலிட்டி என்னவென்றால், இப்போதுள்ள டெக்னாலஜியை பயன்படுத்தி துணிகளை தயாரிப்பதுடன், படிப்படியாக உற்பத்தியையும் அதிகரிக்க திட்டமிட்டிருப்பதுதான்..

48 நவீன தறிகள்

இந்த தொழிற்சாலையில் 100 சதவீதம் பருத்தியால் தயாரிக்கப்படும் ஜக்கார்டு ரக துணிகள் உற்பத்தி செய்யப்பட உள்ளன., ஜக்கார்டு என்பது துணிகளில் பூக்கள், கோடுகள் உள்ளிட்ட சிக்கலான டிசைன்களை நேரடியாக நெசவு செய்ய உதவும் தொழில்நுட்பமாகும்.. இதனால் சாதாரண துணிகளை விட வித்தியாசமான டிசைன்களில் துணிகளை தயாரிக்க முடியுமாம்.

இதற்காக ஜக்கார்டு தொழில்நுட்பத்துடன் கூடிய 48 நவீன ஏர் ஜெட் தறிகளும் நிறுவப்பட உள்ளன. இந்த தறிகள் காற்றின் உதவியுடன் நூல்களை வேகமாக நெய்து துணியாக மாற்றும். மேலும், நூல்களை நெசவு செய்வதற்கு முன்பு அவற்றை தயார்படுத்தும் வசதிகளும் இந்த ஆலையில் அமைக்கப்பட உள்ளன.

30 லட்சம் மீட்டர் துணி

முதல் கட்டமாக, இந்த ஆலையில் வருடத்துக்கு 30 லட்சம் மீட்டர் துணி தயாரிக்கப்பட உள்ளது. இதற்கு தேவையான நூல்களை தியாகராஜர் மில்ஸ் நிறுவனம் வழங்கும். தயாரிக்கப்படும் துணிகள் முதலில் ஜெர்மனி உள்ளிட்ட வெளிநாடுகளுக்கு அனுப்பப்படும். அதன்பிறகு, இந்தியாவிலும் இந்த துணிகளை விற்பனை செய்ய திட்டமிட்டுள்ளனர்.

இதில் இன்னொரு முக்கியமான விஷயமும் உள்ளது.. அதாவது, முதல் கட்டத்தில் வருடத்துக்கு 30 லட்சம் மீட்டர் துணி தயாரிக்கப்பட உள்ளது. இரண்டாவது கட்டத்தில் உற்பத்தியை இரட்டிப்பாக்கி, வருடத்துக்கு 60 லட்சம் மீட்டர் துணி தயாரிக்கவும் திட்டமிட்டுள்ளனர்.. இதனுடன் சிறப்பு தொழில்நுட்பத்தில் தயாரிக்கப்படும் துணிகள், குறிப்பிட்ட பயன்பாடுகளுக்கான மதிப்பு கூட்டப்பட்ட துணிகள் போன்றவற்றையும் தயாரிக்க திட்டம் உள்ளது.

ரூ.100 கோடி முதலீடு

இந்த புதிய தொழிற்சாலையில் அடுத்த 8 முதல் 10 மாதங்களுக்குள் உற்பத்தி தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. ரூ.100 கோடி முதலீட்டில் அமையும் இந்த தொழிற்சாலையில், தியாகராஜர் குழுமம் பெரும்பான்மை பங்குகளை வைத்திருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜெர்மனியை சேர்ந்த யூரோ டெக்ஸ்டைல்ஸ் நிறுவனம் வெளிநாடுகளில் ஜவுளி விற்பனை செய்வதில் அனுபவம் கொண்டது. தியாகராஜர் குழுமத்தின் துணி தயாரிப்பு அனுபவமும், இந்த நிறுவனத்தின் வெளிநாட்டு விற்பனை தொடர்புகளும் இணைவதால், இந்திய துணிகளை ஐரோப்பிய நாடுகளில் விற்பனை செய்ய திட்டமிட்டுள்ளனர்.

ஐரோப்பிய மார்க்கெட்டில் இந்தியாவுக்கு சான்ஸ்

ஐரோப்பிய நாடுகளில் துணிகளுக்கு நல்ல டிமாண்டு இருப்பதால், அந்த சந்தையில் இந்திய துணிகளின் விற்பனையை அதிகரிக்கவும் இந்த திட்டம் உதவும் என எதிர்பார்க்கப்படுகிறது. 2025-ம் வருடத்தில் ஐரோப்பிய ஒன்றிய நாடுகளுக்கு இந்தியா ஏற்றுமதி செய்த துணிகளின் மதிப்பு சுமார் 8 கோடி அமெரிக்க டாலராக இருந்தது.

ஐரோப்பிய நாடுகள் மற்ற நாடுகளிலிருந்து நிறைய துணிகளை வாங்குகின்றன. ஆனால், இந்தியாவிலிருந்து வாங்கும் துணிகளின் அளவு அதைவிட குறைவாக உள்ளது. அதனால் ஐரோப்பிய நாடுகளுக்கு இந்திய துணிகளை அதிக அளவில் விற்பனை செய்ய இந்த திட்டம் உதவலாம். இந்த தொழிற்சாலை மூலம் விருதுநகர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள மக்களுக்கு வேலை கிடைக்கவும் வாய்ப்பு உள்ளது. குறிப்பாக, கிராமப்புற பெண்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்கலாம் என்று நம்பப்படுகிறது.

மொத்தத்தில், ரூ.100 கோடி முதலீட்டில் அமைய உள்ள இந்த தொழிற்சாலை மூலம் விருதுநகரில் புதிய வேலைவாய்ப்புகள் உருவாகவும், இந்திய துணிகள் வெளிநாடுகளில் அதிக அளவில் விற்பனையாகவும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+