விருதுநகரில் கிணற்றில் விழுந்த மகள்.. காப்பாற்ற குதித்த மாமியார்.. பின்னாடியே குதித்த மருமகன்
விருதுநகர்: விருதுநகர் மாவட்டம் வெம்பக்கோட்டை ஒன்றியம் ஏழாயிரம்பண்ணை அருகே உள்ள மடத்துப்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் ராசம்மாள், கிணற்றில் தவறி விழுந்த மகளை காப்பாற்றினார். ஆனால் நீச்சல் தெரியாத நிலையில், மனைவியை காப்பாற்றுவதாக நினைத்து மருமகன் குதித்துள்ளார். இதனால் அவரை காப்பாற்றும் முயற்சியில் இறங்கிய ராசம்மாள், மருமகனுடன் சேர்ந்து தண்ணீரில் மூழ்கினார்.
விருதுநகர் மாவட்டம் வெம்பக்கோட்டை ஒன்றியம் ஏழாயிரம்பண்ணை அருகே உள்ள மடத்துப்பட்டி கிராமத்தை சேர்ந்த 58 வயதாகும் ராசம்மாளுக்கு 33 வயதில் மகேஷ் என்ற மகள் உள்ளார். மகேஷின் கணவர் ராஜாவுக்கு 38 வயது ஆகிறது. இவர்களுக்கு 10 வயதில் பிரதீப் என்ற மகன் உள்ளான்.

விருதுநகர் மாவட்டத்தைச் சேர்ந்த தொழில் செய்வது கேரளாவில் தான்... ராஜா கேரளாவில் வேலை செய்து வருவதால், தனது மனைவி மற்றும் மகனை அவரது தாயார் வீட்டில் விட்டு சென்றிருக்கிறார். பின்னர் அப்பகுதியில் உள்ள கோவில் திருவிழாவில் கலந்து கொள்ள ராஜா கேரளாவில் இருந்து மடத்துப்பட்டிக்கு வந்துள்ளார்.
இந்தநிலையில் நேற்று காலை மடத்துப்பட்டி காளியம்மன் கோவில் அருகில் உள்ள கிணற்றில் துணி துவைக்க மகேஷ், தனது தாயார் ராசம்மாள், மகன் பிரதீப் ஆகியோருடன் சென்றிருக்கிறார். துணி துவைத்து கொண்டிருந்தபோது எதிர்பாராதவிதமாக கிணற்றுக்குள் மகேஷ் தவறி விழுந்ததாக சொல்லப்படுகிறது.
இதைபார்த்து அதிர்ச்சி அடைந்த தாயார் ராசம்மாள், மகேசின் கையை பிடித்து காப்பாற்ற முயன்றார். ஆனால் எதிர்பாராதவிதமாக ராசம்மாளும் கிணற்றுக்குள் தவறி விழுந்தார். இதனால் இருவரும் கிணற்றுக்குள் மூழ்கி தண்ணீரில் தத்தளித்து கொண்டிருந்தனர். இதற்கிடையே அங்கிருந்த மகேசின் மகன் பிரதீப், உடனடியாக வீட்டுக்கு ஓடி சென்று தந்தை ராஜாவிடம் தெரிவித்து, அவரை அழைத்து வந்துள்ளார்
அவரும் விரைந்து வந்து, நீச்சல் தெரியாத நிலையிலும், தனது மனைவி, மாமியாரை காப்பாற்றுவதற்காக கிணற்றுக்குள் குதித்திருக்கிறார்.. இதற்கிடையே ராசம்மாளுக்கு நீச்சல் தெரியும் என்பதால், தண்ணீரில் தத்தளித்த தனது மகள் மகேசை கரையில் பத்திரமாக ஏற்றிவிட்டார். நீச்சல் தெரியாமல் குதித்து கிணற்றுக்குள் தத்தளித்த மருமகன் ராஜாவை காப்பாற்ற முயற்சி செய்துள்ளார். ஆனால் 2 பேரும் தண்ணீரில் மூழ்கிவிட்டார்கள்.
இவர்களது அலறல் சத்தம் கேட்டு ஓடி வந்த அக்கம்பக்கத்தினர் ஏழாயிரம்பண்ணை தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் விரைந்து வந்த தீயணைப்பு படை வீரர்கள் கிணற்றுக்குள் இறங்கி தேடுதல் பணியில் ஈடுபட்டனர். சுமார் 1 மணி நேர தேடுதலுக்கு பிறகு ராஜா மற்றும் ராசம்மாள் ஆகியோரை பிணமாக மீட்டனர். இதுகுறித்து ஏழாயிரம்பண்ணை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
பதற்றத்தில் மருமகன் ராஜா கிணற்றில் குதிக்காமல் இருந்திருந்தால், இருவருமே பிழைத்திருப்பார்கள்.. நீச்சல் தெரியாதவர்கள் கிணற்றில் குதித்து காப்பாற்ற முயற்சிக்கக்கூடாது. அப்படி செய்தால் அவர்களும் , அவர்களை காப்பாற்ற முயல்பவர்களுக்கும் சிக்கல் ஏற்படும்.
-
மகளிர் உரிமைத்தொகை ரூ.3,000.. கல்வி கடன் தள்ளுபடி.. ராமதாஸ் வெளியிட்ட தேர்தல் வாக்குறுதிகள்! -
₹10 லட்சம் லோன் எடுத்தா ஒரு பகுதி இலவசமா? கூட்டுறவு வங்கியில் மானியம்.. பிசினஸ் லாபம் சூப்பர் சான்ஸ் -
சென்னையில் 2 லட்சம் பேருக்கு பறந்த நோட்டீஸ்.. வீடு, கட்டிடம் வைத்துள்ளவர்களுக்கு முக்கிய அறிவிப்பு -
பாதாளத்தில் விழும் தங்கம்.. "ரூ.10,000க்கு கூட போகலாம்.." மெகா இன்ப செய்தியை சொன்ன ஆனந்த் சீனிவாசன் -
சிறகடிக்க ஆசை: போலீஸ் சொன்ன விஷயம்! சந்தோஷத்தில் முத்து! அண்ணாமலை வீட்டில் கொண்டாட்டம்! விஜயா முடிவு -
லால்குடியில் களமிறங்கிய ஆதவ் அர்ஜுனா மாமியார்.. அதிமுகவில் இணைந்த 1 மாதத்தில் சீட் கொடுத்த எடப்பாடி -
ஆபரண தங்கம் 6 சவரன் 15 வருடம் முன் வாங்கினீங்களா? அப்போ ₹1 லட்சம், இப்ப ரேட் தெரிஞ்சா ஷாக் ஆவீங்க -
அண்ணாமலை கடும் ‘அப்செட்’.. தேர்தலில் போட்டியிட மறுப்பது ஏன்? எடப்பாடியால் கலங்கும் பாஜக! 2 மேட்டர் -
தெற்கு ரயில்வேயில் 827 கி. மீ தூரத்திற்கு நடந்த நல்ல விஷயம்.. பயணிகள், பொதுமக்களுக்கு இனி நிம்மதி -
சென்னையில் அதிமுகவுக்காக இறங்கும் 13 பேர்.. 3 பெண்களுக்கு வாய்ப்பு.. கொளத்தூரில் யாருக்கு வாய்ப்பு? -
ரசிகர்கள் எதிர்பார்த்த வீடியோவை வெளியிட்ட திரிஷா.. ஒரு வழியாக எல்லோரும் கேட்டது நடந்துடுச்சு.. குவியும் பாராட்டு -
"பதிலடி தாக்குதல் நடத்துவோம்.." ஈரானுக்கு எதிராக ஒன்றுகூடும் வளைகுடா.. 6 நாடுகள் கூட்டாக அறிக்கை












Click it and Unblock the Notifications