சோளக்காட்டில் சத்யபாமா.. சீரழித்தோம்.. கூச்சல் போட்டதால் கழுத்தை அறுத்தோம்.. 3 பேர் பரபர வாக்குமூலம்
விதவை பெண்ணை கொன்ற 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்
விருதுநகர்: சோளக்காட்டில் பிணமாக கிடந்த சத்யபாமா கொலை வழக்கில் திடீர் திருப்பம் ஏற்பட்டுள்ளது. மொத்தம் 3 பேர் சத்யபாமாவை சோளக்காட்டிலேயே மிரட்டி.. பலாத்காரம் செய்து.. கழுத்தை அறுத்து கொன்றுள்ளனர்.. இவர்கள் 3 பேரையும் போலீசார் கைது செய்துள்ளனர்.
அருப்புக்கோட்டை அருகே உள்ள ஊர் பரளச்சி ராணிசேதுபுரம்.. இங்கு வசித்து வந்தவர் சத்தியபாமா.. 48 வயதாகிறது.. கணவர் கனகராஜ் 2 வருடங்களுக்கு முன்பு இறந்துவிட்டார்.
இவர்களுக்கு ஒரே மகன்.. வெளிநாட்டில் வேலை பார்த்து வருகிறார்.. சத்யபாமாவுக்கு சொந்தமாக விவகாய நிலம் உள்ளது.. சோளக்காட்டிற்கு தினமும் சென்று வேலைகளை கவனித்து வருவார்.. காலையில் போனால் சாயங்காலம் வரை சோளக்காட்டில்தான் இருப்பார் சத்யபாமா.

சொந்த ஊர்
சில தினங்களுக்கு முன்பு அம்மாவை பார்க்க சொந்த ஊருக்கு வந்துள்ளார் மகன்.. சம்பவத்தன்று ஒரு கல்யாணத்துக்காக மகன் சென்றுவிட்டார். சத்தியபாமா வழக்கம்போல சோளக்காட்டுக்கு கிளம்பினார்.. விவசாயக் காட்டில் பாசிப்பயறு விளைந்து வருவதால், அதை பறிக்கும் வேலை அன்று இருப்பதாக சொல்லி இருந்தார். ஆனால் நடுராத்திரி ஆகியும் சத்யபாமா வீட்டுக்கு திரும்பவில்லை.

காட்டுப்பகுதி
இதனால், சந்தேகமடைந்த அக்கம்பக்கத்தினர் காட்டுப்பகுதியில் சத்யபாமாவை தேடி போனார்கள். வெளியூர் போயிருந்த மகனுக்கும் தகவலை சொன்னார்கள். பிறகு போலீசுக்கும் விஷயத்தை தெரிவித்தனர். மோப்பநாயுடன் விரைந்து விரைந்து வந்த போலீசாருடன், ஊர்மக்களும் சத்யபாமாவை தேடினர்.

சடலம்
ராத்திரியெல்லாம் தேடியும் சத்யபாமா கிடைக்காத நிலையில்.. செருப்பு மட்டும் தனியாக விழுந்து கிடந்தது.. விடிந்ததும்தான் சடலமாக கிடைத்தார்.. அவரது ஆடைகள் களைந்து கிடந்தன.. யாரோ பலாத்காரம் செய்து... கழுத்தையும் கொடூரமாக அறுத்துள்ளனர்.. சடலத்தை சோளக்கதிர்களை வைத்து மறைத்து விட்டு சென்றுள்ளனர் என்பது முதல்கட்டமாக தெரியவந்தது.

வாக்குமூலம்
இப்போது சத்யபாமாவை கொன்றவர்களையும் சேர்த்து போலீசார் கைது செய்துள்ளனர். கொலைக்கான காரணமும் தெரியவந்துள்ளது. அதே ஊரைச்சேர்ந்த சோலையப்பன் என்பவருக்கும், சத்யபாமாவுக்கும் கள்ள உறவு இருந்து வந்துள்ளது.. சோளக்காட்டில் சந்தித்து கொள்வதை இருவருமே வழக்கமாக வைத்திருந்துள்ளனர்.

அலறினார்
அப்படித்தான் சம்பவத்தன்றும் சந்தித்துள்ளனர். இவர்களை அழகர்சாமி என்பவர் பார்த்துவிட்டார்.. அதனால் தன்னுடைய நண்பர்கள் நாகநாதன், முத்துச்சாமியை அழைத்து கொண்டு, சோளக்காட்டில் புகுந்து சத்யபாமாவை பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர். இதில் சத்யபாமா அலறி கூச்சலிட்டுள்ளார்.. ஆத்திரமடைந்த அவர்கள், அவரது கழுத்தையும் அறுத்து கொன்றுள்ளனர்.

கைது
இவ்வளவும் சோலையப்பன் கண் முன்னிலையிலேயே நடந்தது.. "இதை வெளியே சொன்னால் உனக்கும் இந்த கதிதான்" என்று மிரட்டி விட்டு சென்றனர். இவர்களுக்கு பயந்து சோலையப்பனும் எதுவும் சொல்லாமல் இருந்துள்ளார்.. போலீசாரிடம் சோலையப்பன் அளித்த வாக்குமூலத்தின் அடிப்படையில், அழகர்சாமி, நாகநாதன் 2 பேரையும் போலீசார் கைது செய்துள்ளனர். முத்துமணி தலைமறைவாக உள்ளார்.. அவரையும் தேடி வருகிறார்கள்.
-
தோசைக்கல்லை எடுத்து வந்த மனைவி.. அடுத்த நொடியே வாயடைத்து போன வடமதுரை.. திடுக் திண்டுக்கல் -
நெல்லையில் பரபரப்பு.. ஜெராக்ஸ் எடுக்க வந்த பெண்களை ரகசியமாக படம் பிடித்த வாலிபர்! போலீஸ் வைத்த ஆப்பு -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி












Click it and Unblock the Notifications