மனைவி வீட்டில் காதலன்.. வெளியே காத்திருந்த கணவன்.. அருப்புக்கோட்டை இரட்டை கொலையின் பகீர் பின்னணி

Subscribe to Oneindia Tamil

விருதுநகர்: விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை அருகே நடந்த இரட்டைக் கொலை சம்பவத்தின் அதிர்ச்சி இன்னமும் நீங்கவில்லை.. மனைவியிடமும், கள்ளக்காதலனிடம் எத்தனையோ முறை அறிவுறுத்தி பார்த்துவிட்டார் கணவர்.. ஆனால், கள்ளக்காதல் ஜோடி, அவரது பேச்சை கொஞ்சமும் மதிக்கவேயில்லை.. கடைசியில் இப்படியொரு கொடூரத்தை கணவன் நடத்தியிருக்கிறார்.. இப்போது இந்த சம்பவத்தில் கூடுதல் தகவல்கள் வெளியாகியுள்ளன. மனைவியையும் அவருடன் நெருக்கமாகப் பழகிய ஆனந்தராஜையும் கொலை செய்ய சரவணக்குமார் எடுத்த நடவடிக்கைகள், அதற்கு முன்பு நடந்த சம்பவங்கள் குறித்த விவரங்களைப் பார்ப்போம்.

பாளையம்பட்டி கொத்தனார் காலனியைச் சேர்ந்தவர் சரவணக்குமார் (26). இவரது மனைவி பொன்னழகு (21). இந்தத் தம்பதிக்கு 2 ஆண் குழந்தைகள், ஒரு பெண் குழந்தை என 3 குழந்தைகள் உள்ளனர். இருவரும் கட்டிட வேலைக்குச் சென்று வந்துள்ளனர்.

Aruppukottai virudhunagar Double Murder Saravanakumar

அருப்புக்கோட்டை தம்பதி

அதே பகுதியைச் சேர்ந்த ஆனந்தராஜ் (30) என்பவரும் கட்டிட தொழிலாளியாக வேலை செய்து வந்துள்ளார். இவருக்கு காஞ்சனா என்ற மனைவியும், 2 ஆண் குழந்தைகளும் உள்ளனர். கட்டிட வேலைக்குச் சென்ற இடத்தில் ஆனந்தராஜுக்கும் பொன்னழகுக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது. நாளடைவில் இந்தப் பழக்கம் நெருக்கமாக மாறியதாக கூறப்படுகிறது. இதுபற்றி சரவணக்குமாருக்குத் தெரியவந்ததும் கணவன், மனைவிக்கு இடையே அடிக்கடி பிரச்சினை ஏற்பட்டுள்ளது.

மனைவியை கண்டித்ததுடன், ஆனந்தராஜையும் சரவணக்குமார் கண்டித்துள்ளார். ஆனாலும் அவர்களது தொடர்பு நிற்கவில்லை.. இவ்வளவு சொல்லியும், இருவரும மீண்டும் பழகுவதாகவே சரவணக்குமாருக்கு தெரிந்துள்ளது.. இந்த சந்தேகம் வலுவடைந்த நிலையில், அவர்களை என்ன செய்வதென்றே தெரியாமலும் கையை பிசைந்து நின்றுள்ளார்..

Aruppukottai virudhunagar Double Murder Saravanakumar

மறைந்திருந்து நோட்டம்

இந்நிலையில்தான், சம்பவத்தன்று ஆனந்தராஜை வீட்டுக்கு வரவழைத்து, நெருக்கமாக இருந்துள்ளார் பொன்னழகு.. இதை கண்ணாலேயே பார்த்து அதிர்ச்சியும், ஆத்திரமுமடைந்த சரவணக்குமார், அவர்கள் மீது பெரிய கல்லைத் தூக்கிப் போட்டுள்ளார். பிறகு அரிவாளால் இருவரையும் சரமாரியாக வெட்டியுள்ளார். இதில் பொன்னழகும் ஆனந்தராஜும் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் உயிரிழந்தனர்.

இந்த தகாத உறவினால்தான் மனைவியை பிரிந்து வாழும் நிலை சரவணக்குமாருக்கு ஏற்பட்டுள்ளது. இந்த ஜோடியை கையும் களவுமாக பிடித்து விட வேண்டும் என்பதற்காகவே, தனது 3 குழந்தைகளையும் சம்பவத்தன்று பாட்டி வீட்டுக்கு அனுப்பி வைத்தாராம்.. அத்துடன், அன்றைய தினம் இரவு, வெளியே செல்வதாக பொன்னழகுவிடம் சொல்லிவிட்டு, வீட்டுக்கு அருகிலேயே மறைந்திருந்து, என்ன நடக்கிறது என்பதையும் கண்காணித்துள்ளார்.

Aruppukottai virudhunagar Double Murder Saravanakumar

கணவனின் பக்கா பிளான்

அந்த நேரத்தில்தான், கணவர் வெளியே சென்றுவிட்டதாக கூறி, உடனே ஆனந்தராஜை, பொன்னழகு வீட்டுக்கு வரவழைத்துள்ளார்.. கள்ளக்காதல் ஜோடி இருவரும் ஒன்றாக இருப்பதை உறுதி செய்த பிறகே,. சரவணக்குமார் வீட்டுக்குள் மீண்டும் நுழைந்துள்ளார். இருவரையும் கொலை செய்த பிறகு வீட்டின் கதவை வெளிப்பக்கமாக பூட்டிவிட்டு சென்றுவிட்டாராம் சரவணக்குமார், அந்த பகுதியிலேயே இரவு முழுவதும் சுற்றித் திரிந்துவிட்டு, மறுநாள் அதிகாலை அருப்புக்கோட்டை டவுன் போலீஸ் ஸ்டேஷனுக்கு சென்று விஷத்தை சொல்லி, சரணடைந்துள்ளார்.

ஒரு குடும்பப் பிரச்சனை 2 உயிர்களைப் பறித்ததுடன், இரண்டு குடும்பங்களைச் சேர்ந்த 5 குழந்தைகளின் வாழ்க்கையையும் பாதித்துள்ளது. கள்ளக்காதல் விவகாரங்களில் பெரும்பாலும் பாதிக்கப்படுவது எந்தத் தவறும் செய்யாத குழந்தைகள்தான்... பெரியவர்கள் எடுக்கும் தவறான முடிவுகளால், பல இடங்களில் குழந்தைகள் தாய் அல்லது தந்தையை இழந்து ஆதரவற்ற நிலைக்குத் தள்ளப்படுவது வேதனையாக உள்ளது..!!!

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+