கிராம சபை கூட்டம் எங்கே? அமைச்சர் கேகேஎஸ்எஸ்ஆர் ராமச்சந்திரனிடம் பெண் ஆக்ரோஷம்! கடும் வாக்குவாதம்
விருதுநகர்: ‛‛கிராம சபை கூட்டம் நடத்தும் வேளையில் ஆர்ப்பாட்டம் நடத்துருகிறீர்களே. கிராம சபை கூட்டத்தை எப்படி ஆர்ப்பாட்டமாக மாற்றலாம்? கிராம சபை கூட்டம் எங்கே?'' என்று தமிழக வருவாய்த்துறை அமைச்சர் கேகேஎஸ்எஸ்ஆர் ராமச்சந்திரனிடம் நேருக்கு நேர் கையை நீட்டி பெண் ஒருவர் ஆக்ரோஷமாக கேள்வி கேட்டார். இதையடுத்து அமைச்சர் கேகேஎஸ்எஸ்ஆர் ராமச்சந்திரன் அங்கிருந்து அமைதியாக புறப்பட்டு சென்றார்.
மத்திய அரசு சார்பில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்த திட்டத்தின் கீழ் ஆண்டுக்கு 100 நாட்கள் வரை வேலை என்பது வழங்கப்பட்டு வருகிறது. இதற்கு தினமும் ரூ.319 சம்பளமாக வழங்கப்பட்டு வருகிறது.
இந்த சம்பளத்தை தற்போது மத்திய அரசு உயர்த்தி உள்ளது. அதன்படி தினசரி சம்பளத்தை ரூ.17 வரை உயர்த்தி அறிவித்துள்ளது. இதன்மூலம் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தில் பணிக்கு செல்வோருக்கு இனி தினமும் ரூ.336 சம்பளமாக கிடைக்கும்.

இதற்கிடையே தான் தான் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தில் தமிழகத்துக்கு மத்திய அரசு நிதியை வழங்கவில்லை என்று முதல்வர் ஸ்டாலின் குற்றம்சாட்டி வருகிறார். மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டம் தமிழ்நாட்டிற்கு தரவேண்டிய ரூ.4034 கோடியை வழங்க கோரியும், நிதி வழங்காத மத்திய அரசை கண்டித்தும் இன்று தமிழ்நாடு முழுவதும் திமுக ஒன்றியங்களில் ஆர்ப்பாட்டம் நடத்துவதாக அறிவிக்கப்பட்டது.
அதன்படி இன்று மாநிலம் முழுவதும் ஆர்ப்பாட்டம் என்பது நடந்தது. விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை அருகே பாலவனத்தம் கிராமத்தில் இன்று வருவாய்த்துறை அமைச்சர் கேகேஎஸ்எஸ்ஆர் ராமச்சந்திரன் தலைமையில் ஆர்ப்பாட்டம் என்பது நடந்தது. இதில் அமைச்சர் கேகேஎஸ்எஸ்ஆர் ராமச்சந்திரன் பங்கேற்றார். மத்திய அரசை கண்டித்து அவர்கள் கோஷமிட்டனர். இந்த வேளையில் அமைச்சர் கேகேஎஸ்எஸ்ஆர் ராமச்சந்திரனிடம் பெண் ஒருவர் கேள்விகள் கேட்டார். அப்போது அந்த பெண்ணுக்கும், அமைச்சர் கேகேஎஸ்எஸ்ஆர் ராமச்சந்திரனுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.
அதாவது அந்த பெண் கிராம சபை கூட்டத்தில் பங்கேற்க வந்தார். உலக தண்ணீர் தினம் கடந்த 22ம் தேதி கடைப்பிடிக்கப்பட்டது. இதையொட்டி உலக தண்ணீர் தினத்துக்கான சிறப்பு கிராமசபை கூட்டம் இன்று நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டது. அதில் பங்கேற்க வந்த பெண் ஆர்ப்பாட்டம் நடத்துவதை பார்த்தார். இதனால் கோபமடைந்த பெண் அமைச்சர் கேகேஎஸ்எஸ்ஆர் ராமச்சந்திரனிடம், ‛‛கிராம சபை கூட்டம் நடத்த வேண்டும். கிராம சபை கூட்டம் நடத்தும் வேளையில் எப்படி ஆர்ப்பாட்டம் நடத்துகிறீர்கள். இனி கிராம சபை கூட்டம் நடத்துவது இல்லையா'' என்று கேள்விகள் கேட்டார்.
இந்த பெண்ணை அமைச்சர் கேகேஎஸ்எஸ்ஆர் ராமச்சந்திரன் சமாதானம் செய்ய முயன்றார். ஆனால் அந்த பெண் கேட்கவில்லை. கிராம சபை கூட்டம் எங்கே? கிராம சபை கூட்டத்தை எப்படி ஆர்ப்பாட்டமாக மாற்றுனீர்கள்? என்று ஆக்ரோஷமாக கேள்விகள் கேட்டார். இதனால் வேறு வழியின்றி அமைச்சர் கேகேஎஸ்எஸ்ஆர் ராமச்சந்திரன் சம்பவ இடத்தில் இருந்து வெளியே சென்றார். இந்த சம்பவம் பாலவனத்தம் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
-
அரசியல் என்ட்ரி.. அதிகாரப்பூர்வமான அறிவிப்பை வெளியிட்ட திரிஷா.. சக நடிகை கமெண்ட் ஹைலைட் -
அனுபவத்தை விட அதிகாரமே மேலானது.. இதில் தான் திமுக தோற்றது.. குமுறும் திமுக நிர்வாகி -
மனைவி சங்கீதாவுடன் மீண்டும் சேர்ந்து வாழும் விஜய்? விவாகரத்தை கைவிட இருவரும் முடிவா? வெளியான மேட்டர் -
ஸ்டாலினையே தோற்கடித்த கொளத்தூர்.. சேகர்பாபு தான் காரணம்? குமுறிய உபிகள்.. கள ஆய்வில் கசிந்த தகவல்! -
ட்விஸ்ட்.. தமிழக பாஜக தலைவர் மாற்றம்? நயினாருக்கு பதில் இவரா? ரேசில் 4 பேர்.. டிக் அடிக்கும் டெல்லி! -
எங்க காணோம்..கடைசி நேரத்தில் காலைவாரிய கயல்விழி அழகிரி! தவெகவில் இன்னும் இணையாதது ஏன்? மெகா டிமாண்ட் -
அண்ணாமலை புரிதல் கொண்டவர்.. அரசியலுக்கு வருவதை வரவேற்கிறேன்.. பாராட்டி தள்ளிய ராகவா லாரன்ஸ் -
ஒரு இடம் விடக்கூடாது.. சென்னையில் தெரு தெருவாக ரெய்டு விடப்போகும் அதிகாரிகள்.. என்ன காரணம்? -
உலகத்திற்கே 'ஞாயிறு' மிக முக்கியமான நாள்.. கையெழுத்திடும் ஈரான்.. டிரம்ப் மிகப்பெரிய அறிவிப்பு -
பாரதிராஜா இறப்பின் போது தனியாக இருந்த காரணம்! கங்கை அமரன் கோபப்பட்ட பின்னணி.. தம்பி விளக்கம் -
அம்மா தான் முக்கியம்! செய்தியாளர் சந்திப்பை பாதியிலேயே நிறுத்தி போன் பேசிய நிதிஷ் ரெட்டி -
தம்பி வா.. தலைமையேற்க வா? அதிமுகவில் எடப்பாடி மிதுன்! முனுசாமியை விட்டு பல்ஸ் பார்த்த பழனிசாமி!












Click it and Unblock the Notifications