எப்ப பார்த்தாலும்.. ஓயாமல் தொல்லை வேற.. கள்ளக்காதலியை வெட்டியே கொன்ற நபர்.. ராஜபாளையத்தில் பரபரப்பு

கள்ள காதலியை அரிவாளால் வெட்டி கொன்றார் நபர் ஒருவர்.

Subscribe to Oneindia Tamil

விருதுநகர்: எப்பவுமே பணம்.. பணம்.. என்று ஓயாமல் நச்சரித்து கொண்டிருந்த ராமலட்சுமியை, கீழே தள்ளி.. வாயை பொத்தி.. கத்தியால் சரமாரியாக வெட்டி கொன்றுவிட்டார் கள்ளக்காதலன்!

விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்தில் வசித்து வந்தவர் முருகன்.. 39 வயதாகிறது.. திருநெல்வேலியை சேர்ந்தவர்.. இவருக்கும் தென்காசி மாவட்டம் இலஞ்சியை சேர்ந்த ராமலட்சுமி என்பவருக்கும் கல்யாணமாகி 10 வருடமாகிறது.

ராமலட்சுமிக்கு 35 வயதாகிறது.. கோமதிநாயகம் என்ற 9 வயது மகனும், சந்தனமாரி என்ற 6 வயது மகளும் இருக்கிறார்கள்.

கள்ள உறவு

கள்ள உறவு

5 வருஷத்துக்கு முன்பு ராஜபாளையம் எம்ஆர் நகரில் ஒரு வாடகை வீட்டில் குடியிருந்தனர்.. அந்த சமயம் முருகன், கோவையில் ஒரு தனியார் கம்பெனியில் வேலை பார்த்து வந்தார்.. அப்போதுதான் ராமலட்சுமிக்கு சண்முகத்துடன் கள்ள உறவு பற்றிக் கொண்டது.. அதேபகுதியில்தான் இவர் வசித்து வருகிறார்.. ராமலட்சுமியின் சொந்தக்காரர்தான் சண்முகம்.. 40 வயதாகிறது.. சண்முகத்துக்கும் ஏற்கனவே கல்யாணமாகி 2 குழந்தைகள் உள்ளனர்.

தகராறு

தகராறு

கள்ள உறவு இருப்பதால், இதையே சாக்காக வைத்து கொண்டு, அடிக்கடி சண்முகத்திடம் ராமலட்சுமி பணம் கேட்டு வந்துள்ளார்.. ஓரளவு பணம் தந்து சமாளித்த சண்முகத்தால், அதற்கு மேல் முடியவில்லை.. அதனால் பணம் தராத சமயங்களில் இருவருக்குள்ளும் தகராறு வெடித்தது.

கொலை

கொலை

நேற்றும் ராமலட்சுமி பணம் கேட்க.. திரும்பவும் சண்டை வந்துள்ளது.. இப்படியே விட்டால் தொல்லை என்று கருதிய சண்முகம், மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து ராமலட்சுமியை கீழே தள்ளி அவரது வாயைப்பொத்தி கழுத்தை அறுத்துவிட்டார். இதில் ராமலட்சுமி அதே இடத்தில் ரத்த வெள்ளத்தில் உயிரிழந்தார்.. பின்னர், சண்முகம், ராஜபாளையம் தெற்கு போலீசில் சரண் அடைந்துவிட்டார்.. இந்த சம்பவம் ராஜபாளையம் பகுதியில் பெரும் பரபரப்பை தந்துள்ளது.

பரபரப்பு

பரபரப்பு

அவரது தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த தெற்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் மாரியப்பன் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்தில் விசாரணை மேற்கொண்டனர். பின்னர் ராமலட்சுமியின் உடலை பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பட்டப்பகலில் நடந்த இந்த பயங்கர கொலை அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+