பாதிப்பு எண்ணிக்கையிலும் பாதி.. பலி எண்ணிக்கையிலும் பாதி.. அமெரிக்காவை பின்தொடரும் பிரேசில்
வாஷிங்டன்: உலகளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 1,05,83,882 ஆக உயர்ந்துள்ளது. பலி எண்ணிக்கை 5.13 லட்சமாகும்.
உலகம் முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே செல்கிறது. உலகளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 1,05,83,882 ஆகும். கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 5,13,861 ஆகும்.

கொரோனாவால் குணமடைந்தோரின் எண்ணிக்கை 57 லட்சமானது. கொரோனாவால் பாதிக்கப்பட்டு 42 லட்சம் பேர் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளார்கள். அவர்களில் 57,787 பேர் அபாய கட்டத்தில் உள்ளார்கள்.
அமெரிக்காவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 27,27,853 ஆக உயர்ந்துள்ளது. பலி எண்ணிக்கை 1.30 லட்சமானது. அது போல் பிரேசிலில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 14,08,484 ஆனது. இங்கு பலியானோர் எண்ணிக்கை 59 ஆயிரமாகும்.
ரஷ்யாவில் 6.47 லட்சம் பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளார்கள். இங்கு பலி எண்ணிக்கை 9,320 ஆகும். இந்தியாவில் 5.85 லட்சம் பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளார்கள். பலி எண்ணிக்கை 17,410 ஆகும். பிரிட்டனில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 3,12,654 ஆகும். இங்கு 43,730 பேர் பலியாகிவிட்டனர்.












Click it and Unblock the Notifications