அமெரிக்காவில் புதிதாக பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை நாளுக்கு நாள் குறைவு!
வாஷிங்டன்: உலகளவில் கொரோனாவால் பாதித்தோரின் எண்ணிக்கை 10.82 கோடியாக உயர்ந்துள்ளது. அது போல் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 23.77 லட்சமாக உயர்ந்துள்ளது.
சீனாவிலிருந்து பரவிய கொரோனா இன்று உலக நாடுகளை பதம் பார்த்து வருகிறது. தற்போது இங்கிலாந்திலிருந்து உருமாறிய கொரோனா வேறு பரவி வருகிறது.

இந்த நிலையில் பழைய கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 10.82 கோடி பேராகும். உலகளவில் கொரோனாவால் பலியானோரின் எண்ணிக்கை 23.77 லட்சமாகும்.
அது போல் கொரோனாவால் மீண்டு வீடு திரும்பியோரின் எண்ணிக்கை 8.04 கோடி பேராகும். அமெரிக்காவில் 2.79 கோடி பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளார்கள். அமெரிக்காவில் இதுவரை 4.86 லட்சம் பேர் பலியாகிவிட்டனர். இதுவரை 1.79 கோடி பேர் நோயிலிருந்து மீண்டுள்ளனர்.
இந்தியாவில் 10,880,413 பேர் பாதிக்கப்பட்டுள்ளார்கள். இதுவரை 155,195 பேர் பலியாகிவிட்டனர். 10,587,351 பேர் மீண்டு வீடு திரும்பியுள்ளனர். பிரேசிலில் 97 லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளார்கள். அது போல் பலி எண்ணிக்கை 2.36 லட்சமாகும். இதுவரை மீண்டவர்களின் எண்ணிக்கை 86 லட்சமாகும்.
அமெரிக்காவில் கடந்த 24 மணி நேரத்தில் 98,983 பேர் புதிதாக கொரோனாவால் பாதிக்கப்பட்டனர். அது போல் இந்தியாவில் 9,353 பேரும் பிரேசிலில் 53 ஆயிரம் பேரும் புதிதாக பாதிக்கப்பட்டுள்ளனர். உருமாறிய கொரோனா பரவி வரும் பிரிட்டனில் 13,494 பேருக்கு புதிதாக கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. புதிதாக பாதித்தோரின் எண்ணிக்கையில் அமெரிக்கா தொடர்ந்து முன்னிலை வகிக்கிறது.
ரஷ்யாவில் 40 லட்சம் பேரும், பிரிட்டனில் 39 லட்சம் பேரும், பிரான்ஸில் 34 லட்சம் பேரும், துருக்கியில் 25 லட்சம் பேரும், இத்தாலியில் 26 லட்சம் பேரும் ஸ்பெயினில் 30 லட்சம் பேரும், ஜெர்மனியில் 23 லட்சம் பேரும் பாதிக்கப்பட்டுள்ளார்கள்.
-
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது! -
தவெக பெண் எம்எல்ஏவை அவமானப்படுத்திய சென்னை மேயர் பிரியா? குத்துவிளக்கேற்றுவதில் வெடித்த மோதல்! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்!












Click it and Unblock the Notifications