கொஞ்சம் கிட்ட வந்தா எல்லாமே காலி! சூரியனை விட 10 மடங்கு பெரியது! பூமிக்கு அருகே சுற்றும் "பிளக்ஹோல்"
வாஷிங்டன்: பூமிக்கு மிக அருகே உள்ள பிளாக் ஹோல் எப்படி இருக்கும் எந்தளவுக்கு வலிமையானது என்பதைச் சர்வதேச ஜெமினி கண்காணிப்பகம் கண்டறிந்து உள்ளது.
இந்த பால்வெளி மண்டலத்தில் உள்ள ஏகப்பட்ட நட்சத்திரங்களும் கோள்களும் எப்படி சுத்தி வருகிறதோ.. அதேபோல பிளாக் ஹோல்கள் எனப்படும் கருந்துளைகளும் பல உள்ளன.
இந்த பிளாக் ஹோல்களும் அப்படியே விண்வெளியில் சுற்றி வரும். இந்த பிளாக் ஹோல்களில் இருந்து மிக அதிக அளவில் வெளிவரும் ஆற்றல் கிரகங்களை அப்படியே அழித்து விடும்.

பிளாக் ஹோல்கள்
பிளாக் ஹோல்கள் குறித்து உலகெங்கும் ஆய்வுகள் தீவிரமாக நடந்து வருகிறது. சர்வதேச ஜெமினி ஆய்வகத்தைப் பயன்படுத்தி வானியலாளர்கள் பூமிக்கு மிக அருகில் உள்ள பிளாக் ஹோலை கண்டுபிடித்து உள்ளனர். அருகே என்றால் ரொம்பவும் அருகில் என நினைத்து அச்சப்படத் தேவையில்லை. இது பூமியிலிருந்து 1,560 ஒளி ஆண்டுகள் தொலைவில் உள்ளது. மேலும், இது நமது சூரியனை விட 10 மடங்கு பெரியதாகும்.

1,560 ஒளி ஆண்டுகள்
ஒளி ஆண்டு என்றால் ஓளியின் வேகத்தில் நாம் சென்றால் அந்த இடத்தை சென்றடைய எத்தனை காலம் ஆகுமோ அதைத் தான் நாம் ஒளி ஆண்டு என்கிறோம். அப்படித்தான் இந்த பிளாக்ஹோலை சென்றடைய 1,560 ஒளி ஆண்டுகள் ஆகும். பரந்த சுற்றுப்பாதையில் சூரியனைப் போன்ற இந்த பிளாக் ஹோலை கண்டறிந்து உள்ளது இதுவே முதல்முறையாகும். எனவே, அது முக்கியமானதாகப் பார்க்கப்படுகிறது.

கண்டுபிடிப்பு
நமது விண்மீன் மண்டலத்தில் பிளாக் ஹோலை சுற்றியுள்ள பரந்த சுற்றுப்பாதையில் சூரியனைப் போன்ற ஒரு நட்சத்திரத்தைத் தெளிவாகக் கண்டறிவது இதுவே முதல் முறையாகும். வானியலாளர்கள் ஹவாய் தீவில் உள்ள ஜெமினி நார்த் தொலைநோக்கியைப் பயன்படுத்தி இதைக் கண்டுபிடித்து உள்ளனர். விண்வெளியில் பிளாக் ஹோல்கள் கண்டுபிடிக்கப்படுவது மிகவும் அரிதான ஒரு நிகழ்வாகும்.

எத்தனை
இதுவரை வெகுசில பிளாக் ஹோல்கள் மட்டுமே உறுதி செய்யப்பட்டு உள்ளது. இப்போது பால்வீதியில் இந்த Gaia BH1 பிளாக் ஹோல் கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது. இதுதான் நமது கேலக்ஸியில் கண்டறியப்படும் ஒரே பிளாக் ஹோலாக இருக்கும் எனச் சிலர் கூறினாலும், அதை நம்மால் உறுதி சொல்ல முடியாது. இந்த கேலக்ஸியில் இதேபோல பல நூறு பிளாக் ஹோல்கள் இருக்கலாம் என வானியலாளர்கள் மதிப்பிடுகின்றனர்.

சூரியனை விட பெரியது
பல பிளாக் ஹோல்கள் சூரியனை விடவும் கூட 100 மடங்கு வரை பெரிதாக இருக்கும். இந்த பிளாக் ஹோல்களை சாதாரண தொலைநோக்கி மூலம் கண்டறிவது கடினம் ஆனால் ஈர்ப்பு-அலைகளைப் பயன்படுத்தி வெற்றிகரமாகக் கண்டறிய முடியும். இப்போது தான் இந்த பிளாக் ஹோலை கண்டுபிடித்து உள்ளதாகவும் இது குறித்த ஆய்வுகளைத் தொடர்ந்து மேற்கொண்டு வருவதாகவும் ஆய்வாளர்கள் தெரிவித்து உள்ளனர்.

ஆக்டிவ்
பிளாக் ஹோல்கள் எப்போதும் ஆக்டிவாகவே இருந்து கொண்டு இருக்கும். அவை எந்தவொரு கிரகத்தின் அருகே சென்றாலும் அதை அப்படியே அழித்துவிடும். பல நட்சத்திரங்களை இந்த பிளாக் ஹோல்கள் அளித்து உள்ளன. பொதுவாக பிளாக் ஹோல்கள் அளவில் சூரியனை விட பல நூறு மடங்கு பெரிதாக இருக்கும். ஆனால் இப்போது கண்டறியப்பட்டு உள்ளது ஸ்டெல்லார் வகை பிளாக் ஹோல். இவை ஒப்பீட்டளவில் சிறியதாக இருக்கும் எனவே, தான் இது பூமியை விட 10 மடங்கு மட்டுமே பெரிதாக உள்ளது.
-
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
எடப்பாடி வீட்டிற்கு வந்த எஸ்பி வேலுமணி.. சிவி சண்முகம் மட்டும் மிஸ்ஸிங்.. தனித்துவிடப்படுகிறாரா?












Click it and Unblock the Notifications