போலீஸ் வாகனம் மீது மோதிய திருட்டு கார்.. 13 வயது சிறுவனை சுட்டுக்கொன்ற அமெரிக்க போலீஸ்
வாஷிங்டன்: அமெரிக்காவின் சாண்டியாகோ மாகாணத்தில் ரோந்து காரில் மோதிய 13 வயது சிறுவனை போலீசார் சுட்டுக்கொன்றனர்.
சாண்டியாகோவில் உள்ள வார்கோல்ட் பகுதியில் நிறுத்தப்பட்டு இருந்த கார் ஒன்று காணாமல் போனது. இது தொடர்பாக காரின் உரிமையாளர் போலீசாரிடம் புகாரளித்தனர்.
உடனே கார் நிறுத்தப்பட்டிருந்த இடத்துக்கு சென்ற போலீசார் அங்கு தீவிர விசாரணை மேற்கொண்டனர்.

போலீஸ் வாகனம் மீது மோதிய கார்
இதனை தொடர்ந்து சந்தேகத்திற்கு உரிய நபர்களின் நடமாட்டத்தை கண்காணிப்பதற்காக சாண்டியாகோ போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுக் கொண்டு இருந்தனர். அப்போது அவ்வழியாக சந்தேகத்திற்குரிய வகையில் வந்த கார் அங்கு நிறுத்தப்பட்டு கிடந்த போலீசின் ரோந்து வாகனத்தின் மீது மோதியது.

துப்பாக்கிச்சூடு
இதனை கண்ட போலீசார் அவர்களை தடுத்து நிறுத்த முயன்றனர். காரை ஒட்டி வந்தவர்கள் போலீசார் தங்களை விரட்டி வருவதை கண்டு வேகமாக திருப்பிச்சென்று தப்ப முயன்றனர். இதனால் போலீசார் காரை நோக்கி துப்பாக்கியால் சுட்டனர். அதில் காரை ஒட்டி வந்தவர் உயிரிழந்தார். மேலும் இருவர் காயங்கள் இன்றி தப்பினர்.

13 வயது சிறுவன்
உடனடியாக காரின் அருகே சென்று கதவை திறந்தபோதுதான் காரில் இருந்தவர்கள் 3 பேரும் சிறுவர்கள் என்று தெரியவந்தது. போலீசார் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்த சிறுவனின் வயது 13 மட்டுமே. இதுகுறித்து நடத்தப்பட்ட தீவிர விசாரணையில் சிறுவன் ஓட்டி வந்த கார் வால்கோல்ட் பகுதியில் திருடப்பட்டது என்பது தெரியவந்துள்ளது.

போலீஸ் விளக்கம்
இதில் கொல்லப்பட்ட சிறுவனின் பெயரை போலீசார் இதுவரை வெளியிடவில்லை. போலீஸ் வாகனம் மீது வேண்டுமென்றே சிறுவர்கள் காரை மோதியதாகவும், அவர்களுக்கு அங்கு மேலும் சில போலீசார்கள் நிற்பது தெரியாது என்றும் போலீசார் தெரிவித்துள்ளனர். அமெரிக்காவில் 13 வயது சிறுவன் போலீசாரால் சுட்டுக்கொல்லப்பட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
-
Thirupparankundram Files: திருப்பரங்குன்றம் பைல்ஸ் ஆவணப்பட திரையிடலுக்கு அனுமதி மறுப்பு.. "மேலிட உத்தரவு" என்ற போலீஸ் -
முதல்வர் விஜய் வீடு அருகே பரபரப்பு: பனையூரில் ரத்தக் காயங்களுடன் ஆண் சடலம்.. போலீசார் தீவிர விசாரணை! -
ஆலங்குளம் அருகே 6 பேர் அரிவாளால் வெட்டப்பட்ட வழக்கில் ஷாக்.. ஒருவரை சுட்டுப் பிடித்தது போலீஸ்! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்!












Click it and Unblock the Notifications