பூமிக்கடியில் தனி உலகம்.. 15 தளத்தில் பிரம்மாண்டம்! சினிமாவில் கூட இப்படி பார்த்திருக்க மாட்டோம்
வாஷிங்டன்: அமெரிக்காவில் பூமிக்கடியில் 15 தளத்தில் பிரமாண்ட கட்டிடங்கள் கட்டப்பட்டுள்ளன. ஹாலிவுட் படங்களில் பாதாளத்தில் தனி உலகமே இருப்பது போல இந்த கட்டிடங்கள் காட்சியளிக்கின்றன. நாம் ஷாப்பிங் மால் எதிலும் இருக்கிறோமோ? என நினைக்க தோன்றும் அளவுக்கு எந்த வேறுபாடும் இல்லாமல் பூமிக்கடியில் இந்த கட்டிடம் உள்ளது.
வானுயர்ந்த கட்டிடங்களை பிரமித்து பார்த்த காலம் மாறி தற்போது பூமிக்கடியில் கூட கட்டுமானங்கள் தொடங்கிவிட்டன. உலகம் முழுவதும் வல்லரசுகளின் போட்டி, புவிசார் அரசியல் என பல்வேறு காரணங்களால் போர் பதற்றம் அதிகரித்துள்ளது. அணு ஆயுத நாடுகளுக்கு இடையே நிலவும் போர் பதற்றம் ஆகியவற்றால், சில இடங்களில் மக்களை தற்காத்துக்கொள்ள வீடுகளை ஒட்டியே பங்கர்கள் எனப்படும் பதுங்கு குழிகளை அமைக்கப்படுவது அதிகரித்து வருகிறது.

பங்கர்கள் என்றால் ஒரு சிலரே பதுங்கியிருக்கும் வகையில் சிறிய அளவில் கட்டப்பட்டு இருக்கும் என அனைவரும் நினைத்து இருப்போம். ஆனால் இது அப்படியல்ல.. சில ஹாலிவுட் படங்களில் பாதாளத்தில் தனி உலகமே இருப்பது போல காட்டியிருப்பார்களே.. அதே போலவே, அதே வியப்புடன் நாம் பார்த்து ரசிக்கும் அளவுக்கு நிஜத்திலும் அமெரிக்காவில் இருக்கின்றன. அதாவது, அமெரிக்காவில் பூமிக்கடியில் 15 தளங்களுடன் பிரமாண்ட பில்டிங் கட்டப்பட்டு இருக்கிறதாம்.
அணு ஆயுத தாக்குதல்கள் நடந்தால் மக்களை கதிர்வீச்சு பாதிப்பு ஏற்படாமல் பாதுகாக்கும் நோக்கத்துடன் இந்த கட்டிடம் கட்டப்பட்டுள்ளதாக அமெரிக்க ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. பெரிய இரும்புக் கதவுகளுடன் கூடிய இந்த பாதாள கட்டிடத்தில் மொத்தம் 15 தளங்கள் இருக்கிறதாம். இந்த கட்டிடத்திற்குள் நீச்சல் குளம், சூப்பர் மார்க்கெட், சினிமா ஹால், காய்கறிகளை சேமித்து வைக்க இடங்கள், மருத்துவமனை என மனிதன் வசதியாக வாழத் தேவையான அனைத்து வசதிகளும் அடங்கியுள்ளது.
பூமிக்கடியில் 200 அடி பரப்பளவில் இந்த கட்டிடம் 15 தளங்களாக உள்ளதாம். 4 வது தளத்தில் சூப்பர் மார்க்கெட்டுகள் உள்ளதாம். நூலகம், விளையாட்டு பகுதி என பூமிக்கடியில் தனி உலகமே இருக்கும் என சொல்லும் வகையில் நவீன வசதிகளுடன் அமைந்து இருக்கிறதாம். இந்த அடுக்குமாடி தளத்தில் ஒரு அபார்ட்மண்ட் விலை ரூ.25 கோடியாம். அமெரிக்காவில் உள்ள கன்சாஸ் மாகாணத்தில் இந்த கட்டிடம் உள்ளதாம்.
சுரங்கப் பாதையின் வாசல் மட்டும் 8 டன் ஸ்டீலால் அமைக்கப்பட்டு இருக்கிறது. ஹாலிவுட் படங்களை மிஞ்சும் அளவுக்கு அதி நவீன வசதிகளுடன் இந்த கட்டிடம் உள்ளது. அமெரிக்காவில் உள்ள பல யூடியூபர்களும் இதை வீடியோ எடுத்து பதிவிட்டு கல்லா கட்டி வருகிறார்கள்.. ஷாப்பிங் மால் எதிலும் இருக்கிறோமோ என நினைக்க தோன்றும் அளவுக்கு எந்த வேறுபாடும் இல்லாமல் பூமிக்கடியில் இந்த கட்டிடம் உள்ளது.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது












Click it and Unblock the Notifications