F 35 டூ பி-1 பாம்பர் வரை.. 150 விமானங்களை வைத்து வெனிசுலாவை கைப்பற்றிய டிரம்ப்! நள்ளிரவில் திக்திக்
வாஷிங்டன்: அமெரிக்கா தனது அண்டை நாடான வெனிசுலாவை கைப்பற்றி உள்ளது. அந்த நாட்டின் அதிபர் நிகோலஸ் மதுரோ மற்றும் அவரது மனைவி சிலியா ஃபுளோரஸை கைது செய்து அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் வெனிசுலாவை கைப்பற்றி உள்ளார். இதற்காக நள்ளிரவில் எஃப் 35 முதல் பி -1 பாம்பர் வரை 150க்கும் அதிகமான விமானங்களை அமெரிக்கா பயன்படுத்திய தகவல் வெளியாகி உள்ளது.
ஒரு நாட்டுக்குள் நுழைந்து தாக்குதல் நடத்த வேண்டும் என்றாலே பெரிய பிளான் வேண்டும். அப்படியென்றால் அண்டை நாட்டுக்குள் நுழைந்து அதன் பாதுகாப்பு அரண்களை உடைத்து அதிபரையே கைது செய்ய முடியுமா? என்றால் முடியும் என்கிறது அமெரிக்கா. அதோடு தற்போது வெற்றிகரமாக அதனை செய்து முடித்துள்ளது.

அமெரிக்கா, வெனிசுலாவுக்குள் நுழைந்து அந்த நாட்டின் அதிபர் நிகோலஸ் மதுரோ மற்றும் அவரது மனைவியை கைது செய்துள்ளது. அமெரிக்கா - வெனிசுலா இடையே நீண்டகாலமாக பிரச்சனை இருந்து வருகிறது. அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் உத்தரவின்பேரில் நள்ளிரவில் போர் விமானங்கள் மூலமாக வெனிசுலாவின் தலைநகர் கராகஸ் தாக்கப்பட்டது. 7 இடங்களில் குண்டுகள் வீசப்பட்டது.
வெனிசுலா அதிபர் நிகோலஸ் மதுரோ மற்றும் அவரது மனைவியை அமெரிக்க படைகள் கைது செய்து நாடு கடத்தியது. இது தான் தற்போது சர்வதேச அளவில் பேசும் பொருளாகி உள்ளது. வெனிசுலாவும், அமெரிக்காவும் பக்கத்து பக்கத்து நாடுகள். இருநாடுகளை கரிபீயன் கடல் தான் பிரிக்கிறது. வெனிசுலாவில் இருந்து அமெரிக்காவுக்கு போதைப்பொருள் சப்ளை இருப்பதோடு, சட்டவிரோத குடியேற்றமும் உள்ளது. இதனால் தான் அமெரிக்கா வெனிசுலா மீது கடும் கோபம் கொண்டது.
இந்நிலையில் வெனிசுலாவில் தாக்குதல் நடத்தி அதன் அதிபர் நிகோலஸ் மதுரோ மற்றும் மனைவி சிலியா ஃபுளோரஸை கைது செய்தது எப்படி என்பது பற்றி அமெரிக்க கூட்டு படை தளபதிகளின் தலைவரான ஜெனரல் டான் கெய்ன் விளக்கினார். இதுபற்றி அவர் கூறுகையில்,‛‛வெனிசுலா அதிபர் நிகோலஸ் மதுரோ, அவரது மனைவியை கைது செய்ய இரவோடு இரவாக நாங்கள் நடவடிக்கை எடுத்தோம். மக்களுக்கு ஏற்படும் பாதிப்பை குறைக்கும் வகையில் பல மாதங்களாக திட்டமிட்டு துல்லியமாக அதனை செயல்படுத்தி உள்ளோம்.
வெனிசுலாவை தாக்குவதற்கு அமெரிக்கப் படைகள் கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு முழுவதும் தயார் நிலையில் இருந்தது. ஆனால் சரியான காலநிலை வரவில்லை. நேற்று இரவு விமானங்கள் பறக்க சாதகமான வானிலை கிடைத்தது. இதனால் உயரம் குறைவாக ஹெலிகாப்டர்கள் பறந்தன. அதற்கு மேல்பகுதியில் போர் விமானங்கள் பறந்து பாதுகாப்பு வழங்கின.
இதற்காக 20 வெவ்வேறு தளங்களில் இருந்து 150க்கும் மேற்பட்ட போர் விமானங்கள் பயன்படுத்தப்பட்டது. விமானப் படையின் F-22, F-35 மற்றும் F-18 போர் விமானங்கள், B-1 குண்டுவீச்சு விமானங்கள், ட்ரோன்கள் உள்ளிட்டவை பயன்படுத்தப்பட்டன. மதுரோவையும் அவரது மனைவியையும் கைது செய்யும் பொறுப்பை கொண்ட ஹெலிகாப்டர்களுக்கு பாதுகாப்பு அளிப்பது தான் இந்த விமானங்களின் பணியாக இருந்தது.''என்றார்.
-
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
கேட்கும்போதே நெஞ்சம் உறைகிறது.. சஹாரா பாலைவன மணலில் பழுதான லாரி. தாகத்துடன் அநியாயமாய் மாண்ட 49 பேர் -
விழுப்புரத்தில் திருமாவளவன் திறக்க இருந்த அம்பேத்கர் சிலை.. இரவோடு இரவாக அகற்றப்பட்டது ஏன்? -
சென்னை ரோட்டை கண்ணில் ஒத்திக்கலாம்.. பெங்களூர் நிலைமை படுமோசம்.. டிகே சிவகுமார் என்ன செய்வார்? -
"திமுக இல்லாதது கவலையளிக்கிறது.." ரொம்பவே வருத்தப்பட்டு பேசிய திருமாவளவன்.. என்ன மேட்டர்? -
வாண்டடா வண்டில ஏறிய செ.பா! ஹார்ட் டிஸ்க் திருட்டு என்றதும் பதற்றம் ஏன்? சிடிஆர் நிர்மல்குமார் கேள்வி -
விலகிய 113 ஒன்றிய செயலாளர்கள்.. தவெகவின் ஆபரேஷனால் மிரண்ட அறிவாலயம்! ஸ்டாலின் எடுத்த முக்கிய முடிவு -
"16 ஆண்டுகளுக்கு பின் தாய் வீட்டிற்கு.." வேல்முருகன் எமோஷ்னலாக சொல்ல.. சட்டென குறுக்கிட்ட அன்புமணி -
அதிமுக + திமுகவிற்கு ஷாக்.. 4 மாஜி அமைச்சர்கள் - 8 எம்எல்ஏக்கள் உள்பட 60 பேர் தவெகவில் ஐக்கியம்












Click it and Unblock the Notifications