உலகளவில் கொரோனாவால் 18.85 கோடி பேர் பாதிப்பு.. இறப்பு எண்ணிக்கை 40.65 லட்சமானது!
வாஷிங்டன்: உலகளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 188,572,292 ஆக உயர்ந்துள்ளது.
கொரோனா வைரஸ் கடந்த ஆண்டு உலக நாடுகளில் பரவிய நிலையில் இன்னும் அதன் பாதிப்புகள் அடுத்தடுத்த நிலைகள் அதிகரித்துக் கொண்டே தான் செல்கின்றன. இதை எதிர்கொள்ள கொரோனாவுக்கு எதிரான தடுப்பூசி போடும் பணிகள் தீவிரமடைந்துள்ளன.

இந்த நிலையில் உலகளவில் கொரோனா பாதிப்பு 188,572,292 ஆக உயர்ந்துள்ளது. அது போல் கொரோனாவிலிருந்து மீண்டோரின் எண்ணிக்கை 172,402,099 ஆக உள்ளது. கொரோனாவால் இது வரை உலகளவில் 4,065,208 பேர் இறந்துள்ளனர்.
கொரோனாவால் அமெரிக்காவில் 34,806,146 பேர் பாதிக்கப்பட்டுள்ளார்கள். இதுவரை 6.23 லட்சம் பேர் பலியாகியுள்ளனர். அமெரிக்காவில் கொரோனாவிலிருந்து மீண்டோரின் எண்ணிக்கை 29,304,110 ஆகும்.
இந்தியாவில் 30,944,949 பேர் கடுமையாக கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளார்கள். இதுவரை 411,439 பேர் பலியாகிவிட்டனர். இந்தியாவில் கொரோனாவிலிருந்து மீண்டோரின் எண்ணிக்கை 30,097,096 ஆகும். பிரேசிலில் 1.91 கோடி பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளார்கள். இதுவரை பிரேசிலில் 5.35 லட்சம் பேர் கொரோனாவுக்கு பலியாகிவிட்டனர்.
பிரான்ஸில் 58 லட்சம் பேரும், துருக்கியில் 54 லட்சம் பேரும் ரஷ்யாவில் 58 லட்சம் பேரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளார்கள். அமெரிக்காவில் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனாவால் 27 ஆயிரம் பேரும் இந்தியாவில் 40 ஆயிரம் பேரும் பிரேசிலில் 45 ஆயிரம் பேரும் பிரான்ஸில் 6 ஆயிரம் பேரும் புதிதாக பாதிக்கப்பட்டுள்ளார்கள்.
-
பாக்கெட் தோசை மாவு வாங்கறீங்களா? பிரிட்ஜில் இட்லி மாவு வைக்கிறீங்களா? இதை முதல்ல தெரிஞ்சுக்கோங்க -
கூண்டோடு காலியாகிறது.. விசிக டாப் தலைகள் மொத்தமாக திமுகவில் ஐக்கியம்? சில்லு சில்லாக சிதறுது! -
ஒரு கூட்டு கிளியாக ஒரு தோப்பு குயிலாக! கோபத்தில் குட்டி சிறுத்தைகள்! வெள்ளைக் கொடியோடி தாய் சிறுத்தை -
சஞ்சு சாம்சன் மூலமாக சிஎஸ்கே அணிக்குள் நுழைய முயற்சிக்கும் அஸ்வின்.. பின்னணியில் நடப்பது என்ன? -
கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் பெற்ற பயிர்க்கடன் 100 சதவீதம் தள்ளுபடி! யாருக்கெல்லாம் கிடைக்கும்? -
Kerala Lottery: கடனை கட்ட முடியாததால் வீடு ஜப்தியாக இருந்தது.. 12 கோடி லாட்டரியில் வென்ற முதியவரின் சோக பின்னணி -
கோவை சூலூர் சிறுமியை கொன்றது ஏன்? குற்றவாளி கார்த்தி பரபரப்பு வாக்குமூலம் -
நடிகை ரம்பா வீட்டில் ஏற்பட்ட துயரம்.. "உலகமே வெறுமையாகி விட்டது” என உருக்கமான பதிவு -
திருச்சி கிழக்கு உள்பட 4 தொகுதிகளுக்கும் சேர்த்து இடைத்தேர்தல் நடைபெற வாய்ப்பு -
சென்னையில் செய்கூலி, சேதாரம் கட்.. திடீரென தங்கத்திற்கு வழங்கப்படும் பிரம்மாண்ட தள்ளுபடி.. ஏன்? -
சரண்டரான சி.வி.சண்முகம் டீம்.. மீண்டும் இணைகிறது அதிமுக.. எடப்பாடி போட்ட கண்டிஷன்! -
விவசாயிகளுக்கு விழுந்த சர்ப்ரைஸ்.. வேளாண் நகைக்கடன் ரூ.40000-ல் இருந்து 2 லட்சமாக உயர்வு












Click it and Unblock the Notifications