24 மணி நேரத்தில் 97,570 பேருக்கு புதிதாக நோய் தொற்று.. புள்ளி விவரம் வெளியிட்டது மத்திய அரசு!

Subscribe to Oneindia Tamil

டெல்லி: இந்தியாவில் 24 மணிநேரத்தில் 97,570 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

உலக நாடுகள் கடந்த 7 மாதங்களாக கொரோனா வைரஸை எதிர்த்து போராடி வருகின்றன. சில நாடுகள் மருந்து கண்டுபிடிக்கும் முயற்சியிலும் ஈடுபட்டு வருகிறார்கள்.

2.86 crore people were infected with coronavirus globally

ரஷ்யா ஒரு தடுப்பு மருந்தை கண்டுபிடித்து விட்டது. ஆனால் அதுகுறித்த விஞ்ஞானிகளின் சந்தேகங்களுக்கு அந்நாடு பதிலளிக்கவில்லை. இந்த நிலையில் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்த வண்ணம் உள்ளது.

உலகளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 2.86 கோடியாக உயர்ந்துள்ளது. இதுவரை கொரோனாவால் பலியானோரின் எண்ணிக்கை 9.18 லட்சமாகும். கொரோனாவிலிருந்து இதுவரை 2.05 கோடி பேர் மீண்டுள்ளனர். 61,005 பேர் அபாய கட்டத்தில் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளார்கள்.

அமெரிக்காவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 66 லட்சமாகும். இதுவரை 1.97 லட்சம் பேர் பலியாகிவிட்டனர். கடந்த 24 மணி நேரத்தில் 46,286 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.

இந்தியாவில் 46,59,985 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதுவரை 77,472 பேர் பலியாகிவிட்டனர். இந்தியாவில் கொரோனாவிலிருந்து குணமடைந்தோரின் எண்ணிக்கை 36,24,197 ஆக உயர்ந்துள்ளது. ஒரே நாளில் 97,570 பேருக்கு புதிதாக தொற்று ஏற்பட்டுள்ளது.

இதுவரை இல்லாத அளவுக்கு இந்த 24 மணி நேரத்தில் தொற்று அதிகரித்துள்ளது. உலக நாடுகளில் புதிதாக கொரோனா பாதித்தோரின் எண்ணிக்கை இந்தியா தொடர்ந்து முதலிடத்தில் இருந்து வருகிறது. இந்தியாவில் கடந்த 24 மணிநேரத்தில் 1,201 பேர் கொரோனாவால் மரணமடைந்துள்ளார்கள். இந்தியாவில் கொரோனாவுக்கு தற்போது சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 9,58,316 ஆகும். இந்த தகவலை மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

Recommended Video

    கொரோனா வைரசுக்கான மனித பரிசோதனையை நிறுத்திய சீரம் இன்ஸ்டிடியூட்

    பிரேசிலில் 40 லட்சம் பேருக்கு கொரோனா பாதிப்பு உள்ளது. இதுவரை 1.25 லட்சம் பேர் பலியாகிவிட்டனர். கடந்த 24 மணி நேரத்தில் 45,651 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இந்தியாவில் 40 லட்சம் பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டது. இதுவரை 69,635 பேர் பலியாகிவிட்டனர். இதுவரை தொற்று பாதித்த நாடுகளில் உலகளவில் 2ஆவது இடத்தில் இருந்த பிரேசில் தற்போது 3ஆவது இடத்திற்கு வந்துள்ளது.

    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+