வானில் ஒன்றொடொன்று மோத போன 2 விமானங்கள்.. நூலிழையில் தப்பியது எப்படி? திக்திக் வீடியோ

Subscribe to Oneindia Tamil

வாஷிங்டன்: அமெரிக்காவை சேர்ந்த அமெரிக்கன் ஏர்லைன்ஸ் என்ற நிறுவனத்தின் 2 விமானங்கள் நேற்று நள்ளிரவில் ஒரே நேர்க்கோட்டில் சென்ற நிலையில் கட்டுப்பாட்டு அலுவலக அதிகாரியின் சொன்ன அட்வைஸால் நூலிழையில் இருமாவினங்களும் வானிலேயே மோதுவது தவிர்க்கப்பட்டது. என்ன நடந்தது? இருவிமானங்களும் ஒரே நேர்க்கோட்டில் எப்படி வந்தது? என்பது பற்றிய திடுக்கிட வைக்கும் தகவல் மற்றும் வீடியோ வெளியாகி உள்ளது.

2-american-airlines-flights-close-to-each-other-in-us-after-mistakenly-assigned-same-number

அமெரிக்காவில் அமெரிக்கன் ஏர்லைன்ஸ் என்ற விமான நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இந்த விமான நிறுவனத்தின் ஒரு விமானம் நேற்று நள்ளிரவில் சிகாகோவில் இருந்து புறப்பட்டது. இந்த விமானம் அரிசோனாவில் உள்ள பீனிக்ஸ் ஸ்கை ஹார்பர் சர்வதேச விமான நிலையத்தின் வான்வெளிக்குள் நுழைந்தது. இந்த விமானம் அமெரிக்கன் ஏர்லைன்ஸ் 2482 என்ற எண்ணில் பறந்து கொண்டிருந்தது.

இந்த விமானம் பீனிக்ஸ் ஸ்கை ஹார்பர் சர்வதேச விமான நிலையத்தில் தரையிறங்கிய பிறகு மீண்டும் சிகாகோ நகருக்கு பயணிகளை ஏற்றி கொண்டு செல்ல வேண்டும். ஆனால் மோசமான வானிலை காரணமாக இந்த விமானம் தாமதமாக பறந்து கொண்டிருந்தது. இதனால் விமான நிலையத்தில் காத்திருந்த பயணிகளை அமெரிக்கன் ஏர்லைன்ஸ் நிறுவனம் இன்னொரு விமானத்தில் ஏற்றியது. அந்த விமானத்திற்கும் அமெரிக்கன் ஏர்லைன்ஸ் 2482 என்ற எண் வழங்கப்பட்டது.

இதனால் இரு விமானங்களுக்கும் கட்டுப்பாட்டு அறையில் இருந்து ஒரே மாதிரியான தகவல்களை பெற்றது. இருவிமானங்களும் நேர்க்கோட்டில் பறந்தது. அப்போது தான் கட்டுப்பாட்டு அறையில் உள்ள அதிகாரி இருவிமானங்களும் நேர்க்கோட்டில் செல்வதை கண்டறிந்தார். இதையடுத்து அதோடு இருவிமானங்களும் ஒரே எண்ணில் பறப்பதால் அதற்கு வழங்கப்படும் அறிவுரைகளை இருவிமானிகளும் பின்பற்றி நேர்க்கோட்டில் செல்வதை உணர்ந்தார்.

இருவிமானங்களும் ஒன்றுக்கொன்று மிக அருகே நெருங்கி சென்றன. இதையடுத்து சுதாரித்த கட்டுப்பாட்டு அறையின் அதிகாரி உடனடியாக தலையீடு செய்தார். இரு விமானங்களின் பைலட்டுகளையும் அவர் தொடர்பு கொண்டு பேசினார். இருவிமானங்களும் நேர்க்கோட்டில் வருவது பற்றி அவர் கூறியதோடு, இருவிமானங்களின் வழிப்பாதைகளையும் மாற்ற அறிவுரை வழங்கினார். வானில் இரு விமானங்களுக்கும் இடையே சில கிலோமீட்டர் தொலைவு இருக்கும்போதே இதுபற்றி அவர் விமானிகளுக்கு தகவல் தெரிவித்து விபத்தை தவிர்ப்பதற்கான அறிவுரைகளை வழங்கினார்.

அதன்படி சிகாகோவில் இருந்து வரும் விமானத்தின் உயரத்தை குறைக்க வேண்டாம். அதே உயரத்தில் பறக்கும்படியும் கூறினார். அதேபோல் பீனிக்ஸில் விமான நிலையத்தில் இருந்து புறப்பட்ட விமானத்தின் உயரத்தை சற்று குறைக்கும்படி கூறிய அவர் எந்த காரணம் கொண்டு விமானத்தின் உயரத்தை அதிகரிக்க வேண்டாம் என்று கூறினார். இதனால் வானில் ஒரே வழிப்பாதையில் சிகோகோவில் இருந்து வந்த கொண்டிருந்த விமானம் மேல்புறமாகவும், பீனிக்ஸ் விமான நிலையத்தில் புறப்பட்ட விமானம் அதே வழிப்பாதையில் கீழேயும் பறந்தன. இதனால் இருவிமானங்களும் மோதிக்கொள்வது தவிர்க்கப்பட்டு பெரிய விமான விபத்து அதிர்ஷ்டவசமாக நடக்காமல் போனது.

இருவிமானங்களும் ஒன்றையொன்று பாதுகாப்பாக கடந்து சென்ற பிறகு சிகோகாவில் இருந்து வந்த விமானத்தின் பைலட், கட்டுப்பாட்டு அறை அதிகாரியை பாராட்டினார். சிறப்பாக பணி செய்தீர்கள் என்று கூறினார். இதற்கு அந்த அதிகாரி, ''உண்மையில் இது பேரிழிவு சம்பவமாக இருந்திருக்கும். ஆனால் எல்லாவற்றையும் நல்லபடியாக முடித்ததில் எனக்கு மகிழ்ச்சி'' என்றார். இந்த விபத்தை தவிர்த்த கட்டுப்பாட்டு அறையின் அதிகாரி 25 ஆண்டுகளாக அங்கு பணியாற்றி வரும் நிலையில் ''இதுபோன்ற சம்பவங்கள் நடப்பது மிகவும் அரிதானது. ஒரே கால் சைன், ஒரே எண்ணில் விமானங்கள் பறப்பது அரிதான ஒன்று. இப்படி நடந்ததை நம்பவே முடியவில்லை'' என்றார்.

இதற்கிடையே தான் இருவிமானங்களும் வானில் நெருக்கமாக பறந்து செல்வதை flighttradar24 என்ற வான்வெளி கண்காப்பு தளம் வீடியோ வெளியிட்டுள்ளது. அந்த வீடியோ இணையதளங்களில் வேகமாக பரவி வருகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+