200 ஆண்டு பழைய வீட்டை.. கிளீன் செய்தபோது கிடைத்த பொக்கிஷம்! பாதள அறையில்.. ஜாக்பாட்!

Subscribe to Oneindia Tamil

வாஷிங்டன்: தங்கள் கொள்ளு தாத்தா காலத்து வீட்டை விலைக்கு வாங்கி சுத்தம் செய்தவருக்கு.. 200 ஆண்டுகள் பழமையான விஸ்கி கிடைத்திருக்கிறது. இது தவிர சில பழமையான ஜாடிகளும் கிடைத்திருக்கின்றன. இருப்பினும் இந்த வீடியோவை பார்த்த பலரும், வீடியோவில் இருப்பது விஸ்கி கிடையாது என்று கூறுகின்றனர்.

அமெரிக்காவின் மிச்சிகன் மாகாணத்தில் 1834ம் ஆண்டு கட்டப்பட்ட தங்களது முன்னோர்களின் 200 ஆண்டு பழமையான வீட்டை சோமர் டுரான் மற்றும் அவரது கணவர் அன்டோனியா இருவரும் விலைக்கு வாங்கினர். விலைக்கு வாங்கி ரொம்ப நாட்களாக அதை சுத்தப்படுத்தாமல் வைத்திருந்தனர்.

200-Year-Old Whisky

ஓரிரு நாட்களுக்கு முன்னர் வீட்டை சுத்தப்படுத்தும் பணியை தொடங்கினர். எல்லாம் முடித்துவிட்டு கடைசியாக பாதாள அறைக்கு சென்றனர். அங்கு பழைய குப்பைகள் மட்டும்தான் இருக்கும் என்று நினைத்திருந்தனர். நினைத்தது மாதிரியே அங்கு பழைய குப்பைகள்தான் இருந்தன. ஆனால், அத்துடன் சில பொக்கிஷமும் இருந்திருக்கின்றது.

அலமாரிகளில் பல தலைமுறைகளாக பயன்படுத்தப்படாமல் இருந்த ஜாடிகள் கண்டெடுக்கப்பட்டன. இதில் Triple-L என்ற பழைய லோகோ பொறிக்கப்பட்ட நீல-பச்சை நிறத்திலான அபூர்வமான Ball Mason Jar ஒன்று கண்டெடுக்கப்பட்டது. இந்த ஜாடிகள் 1900-1910ம் ஆண்டுகாலக்கடத்தில் தயாரிக்கப்பட்டவை. Ball பிராண்ட் ஜாடிகளில்.. நிறுவனத்தின் பெயர் வித்தியாசமாக எழுதப்பட்டிருக்கும். உண்மையை சொல்ல வேண்டும் எனில் ஸ்பெல்லிங் மிஸ்டேக் உடன் பெயர் எழுதப்பட்டிருக்கும்.

பின்னர் கொஞ்ச காலத்தில் இந்த தவறு மாற்றப்பட்டு, சரியான ஸ்பெல்லிங்குடன் ஜாடி உற்பத்தி செய்யப்பட்டது. இருப்பினும் ஸ்பெல்லிங் மிஸ்டேக் கொண்ட ஜாடிகளுக்குதான் மவுசு அதிகம். இப்போது அதை விற்றால் நல்ல காசு பார்க்கலாம். அருமையான விலைக்கு போகும்.

இதையெல்லாம் விட முக்கியமானது 200 ஆண்டுகள் பழமையான விஸ்கி கண்டுபிடிக்கப்பட்டதுதான். ஒயின்தான் நீண்ட காலத்திற்கு வைத்து குடித்தால் சுவை நன்றாக இருக்கும் என்று கேள்விப்பட்டிருப்போம். ஆனால், விஸ்கியும் சரியான முறையில் சீல் செய்யப்பட்டிருந்தால்.. அது மது பிரியர்களுக்கு கிடைத்த ஜாக்பாட்தான்.

கார சுவை குறைந்து.. இனிப்பும், பழ நறுமணத்துடன் இந்த விஸ்கி இருக்கும். அந்த வகையில் 200 ஆண்டுகளுக்கு வீட்டை சுத்தம் செய்தவர்களுக்கு பெரிய பொக்கிஷம் கிடைத்திருக்கிறது. ஆனால் இந்த வீடியோவை பார்த்த பொதுமக்கள்.. அவர்கள் காட்டும் திரவம் விஸ்கி கிடையாது.. வேறு ஏதாவதாக இருக்கலாம் என்று கூறியுள்ளனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+