வாஷிங்டன் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

தொட்டிலில் தூக்கம்.. டயாபர் அணியும் பழக்கம்.. குழந்தை போல் செயல்படும் 25 வயது இளம்பெண்!

Google Oneindia Tamil News

வாஷிங்டன்: அமெரிக்காவில் 25 வயது இளம் பெண் ஒருவர் குழந்தை போல் வாழ்க்கை வாழ்ந்து வருவது ஆச்சரியத்தையும் அதிர்ச்சியையும் அளிக்கிறது.

வீடுகளில் குழந்தைகள் இருந்தாலே அந்த வீடு கலகலவென ஆனந்த வீடாக இருக்கும். அவர்கள் நடக்கும் நடை, பேசும் மழலை கொஞ்சும் பேச்சு, செய்யும் சேட்டைகள், அழுகை என அவர்களது ஒவ்வொரு அசைவுகளும் அழகாக இருக்கும்.

இந்த நினைவுகள் பலர் தன் மகளுக்கோ மகனுக்கோ திருமணம் ஆகும் வரையும் அதற்கு மேலும் அசை போடுவதுண்டு. இன்னும் சிலர் குழந்தையாகவே இருந்திருக்கலாமே என ஆசைப்படுவதுண்டு.

பொம்மை

பொம்மை

குழந்தை குழந்தையாக இருந்தால் எல்லாம் சரி. இதே 25 வயது பெண் ஒருவர் குழந்தை போல் வாழ்க்கை வாழ்கிறார் என்றால் அது எப்படி அவரது குடும்பத்தினருக்கு சந்தோஷத்தை அளிக்கும்? ஆம் அமெரிக்காவில் பேகி மில்லர் என்ற 25 வயது இளம்பெண்தான் இவ்வாறு நடந்து கொள்கிறார். தொட்டிலில் தூங்குவது, எழுந்தவுடன் டயாபரை மாற்றுவது பின்னர் வீட்டிலிருந்து பொம்மைகளுடன் விளையாடுவது என குழந்தை போல் செயல்படுகிறார்.

426 பேர்

426 பேர்

பேஜி மில்லர் இதற்காக மாதத்திற்கு சுமார் 250 டாலர்களை செலவிடுகிறார். அடல்ட் பேபி டயாபர் விரும்பிகள் என்ற ஒரு யூ டியூப் சேனலை வைத்திருக்கிறார். சந்தா மூலம் கிடைக்கும் பணத்தையே தனது பராமரிப்பிற்காக செலவிடுகிறார். இவரது சேனலை 426 பேர் சப்ஸ்கிரைப் செய்துள்ளார்கள். அதில் குழந்தை போல் எப்படி வாழ்வது என்பது குறித்து கூறுகிறார். இவரது கடந்த ஆண்டு 2018-ஆம் ஆண்டு முதல் அவர் இவ்வாறு நடந்து கொள்கிறார்.

ஆட்சேபம்

ஆட்சேபம்

மற்றவர்களும் இதை போல் இயல்பாக இருக்க வேண்டும் என எண்ணுகிறார். வீட்டில் மட்டுமே இவ்வாறு நடந்து கொள்கிறார். வெளியிடங்களில் இவ்வாறு நடந்து கொள்வதில்லை. இதுகுறித்து அவர் கூறுகையில் எனக்கு பொம்மைகளை சேகரிப்பது என்றால் மிகவும் பிடிக்கும். இது போல் நடந்து கொள்வதை எனது குடும்பத்தினரும் நண்பர்களும் ஆட்சேபம் தெரிவிப்பதில்லை.

கவலை

கவலை

இது ஒன்றும் பெரிய பிரச்சினையாக இல்லை. என்னை போல் நடந்து கொள்பவர்கள் யாரும் கவலைப்பட வேண்டாம் என்கிறார். இவருக்கு திருமணமும் நிச்சயிக்கப்பட்டுள்ளதாம். அவரது வருங்கால கணவரும் இதுகுறித்து எந்த கவலையையும் கொள்ளவில்லை. குழந்தைகள் சேட்டைகள் அதிகம் செய்யும். இவருக்கு திருமணம் ஆகி குழந்தை பிறந்தால் அந்த பிரச்சினை இல்லை. அவரும் குழந்தையோடு குழந்தையாக விளையாடி மகிழ்வார். இதனால் சேட்டைகள் குறையும்.

English summary
25 years old woman lives like a baby with cupboard full of diapers in US. she plays with toys.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X