ஸ்டியரிங்கை தொடவே வேண்டாம்.. வளைவே இல்லாமல் 256 கிமீ நேராக செல்லும் ஹைவே.. எங்கே இருக்குது தெரியுமா?
வாஷிங்டன்: வளைவே இல்லாமல் நேர் ரோடாக நீண்ட தூரத்துக்கு சாலை இருந்தால் எப்படி இருக்கும் என்று பல வாகன ஓட்டிகளும் நினைத்திருப்பார்கள். அப்படியான ஒரு ஹைவே தான் சவுதி அரேபியாவில் உள்ளது. உலகில் மீக நீண்ட தூரத்திற்கு அதாவது 256 கி.மீ தூரம் வளைவே இல்லாதபடி இந்த ஹைவே அமைக்கப்பட்டுள்ளது.
தொலை தூர பயணங்களுக்கு செல்லும் போது அடிக்கடி வளைந்து செல்லும் சாலைகள் என்றால் வாகன ஓட்டிகளுக்கு கொஞ்சம் சிரமமாக இருக்கும். அதிலும் இந்தியா போன்ற நாடுகளில் சில கிலோமீட்டர் தாண்டினாலே சாலைகள் வளைந்து நெளிந்து சென்று கொண்டிருக்கும். மேலும் பள்ளம் மேடு என்று இருப்பதனால் அடிக்கடி கியரை மாற்றி மாற்றி வாகன ஓட்டிகள் வாகனத்தை இயக்க வெண்டி இருக்கும்.

வளைவே இல்லாத சாலை: சில கிலோ மீட்டருக்கு சாலைகள் எந்தவித வளைவும் இன்றி, பள்ளம் மேடு இல்லாமல் இருந்தால் அந்த சாலைகளில் செல்லும் போது.. அட.. இப்படியே இந்த சாலைகள் இருந்தால் எப்படி இருக்கும்? என வாகன ஓட்டிகள் மனதில் நினைத்துக்கொள்வார்கள்... அப்படி வாகன ஓட்டிகள் நினைக்கும் அளவுக்கு தான் 256 கி.மீ தூரத்திற்கு எந்த வித வளைவும் இல்லாம, பள்ளம் மேடும் இல்லாமல் ஒரே நேர் ரோடாக ஹைவே அமைத்துள்ளது சவுதி அரேபியா.
அரபு நாடுகளில் ஒன்றான சவுதி அரேபியாவில் உள்கட்டமைப்பு வசதிகள் வாயை பிளக்க வைக்கும் வகையில் உள்ளன. எண்ணெய் வளம் மிக்க செல்வ செழிப்பான நாடான சவுதி அரேபியா தற்போது சுற்றுலா பயணிகளை ஈர்க்கும் விதமாக உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தி வருகிறது. அந்த வகையில் தற்போது, உலகிலேயே மிக நீளமான நேரான சாலையை சவுதி அரேபியா கட்டமைத்துள்ளது.
கின்னஸ் சாதனை புத்தகத்தில்: சவுதி அரேபியாவின் நெடுஞ்சாலை 10 என்ற இந்த சாலை ஹராத் முதல் அல் பத்தா வரை 256 கி.மீ. தூரத்திற்கு வளைவே இல்லாமல் உள்ளது. ரப் அல் - காலி பாலைவனத்தின் வழியாக செல்லும் இந்த சாலை வளைவே இல்லாத நேரான நெடுஞ்சாலையாக உள்ளது. இந்த சாலை தற்போது கின்னஸ் சாதனையிலும் இடம் பெற்றுள்ளதாம். இந்த சாலையில் பயணம் செய்யும் பயணிகளுக்கு அருமையான அனுபவத்தை கொடுக்கும் வகையில் அமைக்கப்பட்டுள்ளதாம்.
ஆஸ்திரேலியாவில் 146 கி.மீ: உலகில் மிகப்பெரிய மணல் பாலைவனப்பகுதியாக அறியப்படும் ரப் அல் காலி பாலைவன பகுதி வழியாக இந்த சாலை செல்கிறது. இதற்கு முன்பாக மேற்கு ஆஸ்திரேலியா மற்றும் தெற்கு ஆஸ்திரேலியாவை இணைக்கும் 146 கி.மீ. நீளமுள்ள ஐர் நெடுஞ்சாலை உலகின் மிகவும் நேரான சாலை என்ற சாதனையை பெற்றிருந்தது.
தற்போது இந்த பெருமையை சவுதி அரேபியாவில் உள்ள சாலை பிடித்துள்ளது. இந்த சாலை எண்ணெய் மற்றும் எரிவாயுக்களை அதிக அளவில் இருப்பு வைத்திருக்கும் ஹராத் நகரில் இருந்து, ஐக்கிய அரபு நாடுகளின் எல்லைக்கு அருகில் உள்ள அல் ஃபத்தா வரை நீள்கிறது. இந்த சாலை அமைக்கப்படதற்கான உண்மையான காரணம் தெரியவில்லை.
ஸ்டியரிங்கை பிடிக்கவே வேண்டாம்: 256 கி.மீ. தூரம் அமைக்கப்பட்டுள்ள இந்த ஹைவேயில், எந்த இடத்திலும் வளைவுகளே கிடையாது. இதேபோல் எந்த இடத்திலும் ஏற்றமோ அல்லது இறக்கமோ கிடையாது. இப்படியே 256 கி.மீட்டருக்கு நேராக அமைக்கப்பட்டுள்ள இந்த சாலை தான் தற்போது உலகின் மிகவும் நேரான நீண்ட சாலை என்ற பெயரை பெற்றுள்ளது. எனவே இந்த சாலையில் செல்லும் வாகன ஓட்டிகள் ஸ்டியரிங்கை பிடிக்கவே தேவையில்லை. அதேபோல் கியரையும் மாற்ற தேவையில்லை. 256 கி.மீ சும்மா பறக்கலாம்.












Click it and Unblock the Notifications