ஆத்தாடி! என்ன இது இவ்ளோ பெரிசா இருக்கு.. எங்க ஆரம்பிச்சி எப்படி சாப்பிடுறது.. உலகிலேயே பெரிசாமே!
வாஷிங்டன்: இஸ்ரேலில் வளர்ந்த மிகப் பெரிய ஸ்டிராபெர்ரி பழம் கின்னஸ் சாதனை படைத்துள்ளது.
மத்திய இஸ்ரேலை சேர்ந்தவர் சாஹி ஏரியல். இவர் விவசாயி. தனது நிலத்தில் ஸ்டிராபெர்ரி பழத்தை பயிரிட்டு வந்தார். பொதுவாக ஸ்டிராபெர்ரி பழங்கள் 7 கிராம் முதல் 27 கிராம் வரை இருக்கும்.
அதாவது சிறியது முதல் பெரியது வரை எடை போட்டு பார்த்தால் ஒவ்வொரு பழமும் 30 கிராம் எடைக்குள்தான் வரும். இந்த பழம் குழந்தைகளுக்கு மிகவும் பிடிக்கும்.

ஸ்டிராபெர்ரி
இதை வைத்து ஸ்டிராபெர்ரி ஐஸ்கிரீம், மில்க் ஷேக் செய்வதுடன் அப்படியே சாப்பிடலாம். இந்த நிலையில் ஏரியல் தனது நிலத்தில் உள்ளூர் ரகமான இல்லான் எனும் வகையை பயிரிட்டிருந்தார். இது மிக பெரிய அளவில் வளரும். இந்த ரகத்தை தனது நிலத்தில் பயிரிட்டார். அதில் ஒரு பழம் மட்டும் அதிக எடையுடன் இருப்பதை ஏரியல் கவனித்தார்.

கூடுதல் கவனம்
அந்த பழத்திற்கு கூடுதல் கவனம் செலுத்தி வளர்த்து வந்தார். கடந்த பிப்ரவரி 2021ஆம் தேதி அந்த பழத்தை பறித்த அவர் அன்று முதல் ப்ரீசரில் வைத்து பராமரித்து வந்தார். அதன் எடை 289 கிராமாக உள்ளது. இதையடுத்து இவரது நிலத்தில் வளர்ந்த பழம் கின்னஸ் சாதனையில் இடம்பெற்றது.

கின்னஸ் சாதனை முறியடிப்பு
ஏற்கெனவே இருந்த கின்னஸ் சாதனையையும் முறியடித்தது. 2015 ஆம் ஆண்டு ஜப்பானில் ஃபுகுவோகாவில் 250 கிராம் கொண்ட ஸ்டிராபெர்ரியே உலக சாதனை புத்தகத்தில் இடம்பெற்றிருந்தது. தற்போது அந்த சாதனையை ஏரியல் முறியடித்துவிட்டார். இதுகுறித்து அவர் கூறுகையில் கின்னஸ் சாதனை புத்தகத்தில் எனது ஸ்டிராபெர்ரி இடம்பெற்றுள்ளது மகிழ்ச்சி அளிக்கிறது.

கின்னஸ் புத்தக சாதனை
இந்த செய்தியை கேட்டவுடன் எனது கால் தரையில் நிற்கவே இல்லை. இந்த பழம் பறித்த போது இருந்த எடையை விட தற்போது ஓராண்டுக்கு பிறகு பாதியாக குறைந்துள்ளது. சாதனை புத்தகத்தில் இடம்பெறுமா என ப்ரீசரில் வைத்து காத்திருந்தோம். நல்ல வேளையாக கின்னஸில் இடம் பெற்றதுடன் பழைய சாதனையையும் முறியடித்துவிட்டது என்றார்.
-
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
கேட்கும்போதே நெஞ்சம் உறைகிறது.. சஹாரா பாலைவன மணலில் பழுதான லாரி. தாகத்துடன் அநியாயமாய் மாண்ட 49 பேர் -
விழுப்புரத்தில் திருமாவளவன் திறக்க இருந்த அம்பேத்கர் சிலை.. இரவோடு இரவாக அகற்றப்பட்டது ஏன்? -
சென்னை ரோட்டை கண்ணில் ஒத்திக்கலாம்.. பெங்களூர் நிலைமை படுமோசம்.. டிகே சிவகுமார் என்ன செய்வார்? -
"திமுக இல்லாதது கவலையளிக்கிறது.." ரொம்பவே வருத்தப்பட்டு பேசிய திருமாவளவன்.. என்ன மேட்டர்? -
வாண்டடா வண்டில ஏறிய செ.பா! ஹார்ட் டிஸ்க் திருட்டு என்றதும் பதற்றம் ஏன்? சிடிஆர் நிர்மல்குமார் கேள்வி -
விலகிய 113 ஒன்றிய செயலாளர்கள்.. தவெகவின் ஆபரேஷனால் மிரண்ட அறிவாலயம்! ஸ்டாலின் எடுத்த முக்கிய முடிவு -
"16 ஆண்டுகளுக்கு பின் தாய் வீட்டிற்கு.." வேல்முருகன் எமோஷ்னலாக சொல்ல.. சட்டென குறுக்கிட்ட அன்புமணி -
அதிமுக + திமுகவிற்கு ஷாக்.. 4 மாஜி அமைச்சர்கள் - 8 எம்எல்ஏக்கள் உள்பட 60 பேர் தவெகவில் ஐக்கியம் -
அன்னைக்கே சொன்னாரே டிடிவி தினகரன்! நெருங்கும் கிளைமாக்ஸ்? பாஜக ஸ்கெட்ச்? கொத்து கொத்தாக ஓடும் தலைகள்












Click it and Unblock the Notifications