Nvidia நிறுவன சிஇஓவாகும் இந்தியர்? டாப் லிஸ்ட்டில் இருக்கும் 3 பேர்.. யார் இவர்கள்? பின்னணி

Subscribe to Oneindia Tamil

வாஷிங்டன்: கள்ளக்காதல் விவகாரத்தின் என்விடியா நிறுவனத்தின் சிஇஓ பொறுப்பில் இருந்து ஜென்சன் ஹுவாங் தனது பதவியை நேற்று ராஜினாமா செய்தார். இந்நிலையில் தான் ஜென்சன் ஹுவாங்கிற்கு பதில் அந்த நிறுவனத்தின் சிஇஓ பதவிக்கு இந்தியாவை பூர்வீகமாக கொண்ட 3 பேரின் பெயர்கள் முன்னிலையில் உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. அவர்கள் யார்? பின்னணி என்ன? என்பது பற்றி முக்கிய தகவல்கள் வெளியாகி உள்ளன.

3-indian-origin-names-rounds-for-nvidia-ceo-post-after-jensen-huang-resigns

என்விடியா நிறுவனம் அமெரிக்காவின் கலிபோர்னியாவில் உள்ள சாண்டா கிளாராவை தலைமையிடமாக கொண்டு செயல்பட்டு வருகிறது.

கம்ப்யூட்டருக்கான சிப்கள், 'கிராபிக்ஸ் புராஸஸிங் யூனிட் மற்றும் ஏஐ தொழில்நுட்ப கட்டமைப்புகள் சார்ந்த சேவைகளை வழங்கி வருகிறது.

சிஇஓ ராஜினாமா

இந்நிலையில் தான் என்விடியா நிறுவனத்தின் தலைவரும், சிஇஓமான ஜென்சன் ஹுவாங் கள்ளக்காதல் சர்ச்சையில் சிக்கினார். சீன பெண் உளவாளி மற்றும் பெண் அதிகாரியுடன் ஏற்பட்ட கள்ளக்காதல் வெளியுலகிற்கு தெரியவந்ததால் என்விடியா நிறுவனத்தின் தலைவர் மற்றும் சிஇஓவாக இருந்த ஜென்சன் ஹுவாங் நேற்று தனது பதவியை ராஜினாமா செய்தார்.

இடைக்கால சிஇஓ

என்விடியா நிறுவனத்தின் செயல் துணை தலைவராகவும், தலைமை நிதி அதிகாரியாகவும் இருக்கும் கோலேட் கிரெஸ் தற்காலிக சிஇஓவாக நியமனம் செய்யப்பட்டுள்ளார். நிறுவனத்துக்கு முழுநேர சிஇஓ தேர்வாகும் வரை கோலேட் கிரெஸ் தற்காலிக சிஇஓவாக நிறுவனத்தை நடத்த உள்ளார்.

நிறுவனத்தின் முழுநேர சிஇஓ பொறுப்புக்கு ஆட்கள் தேடும் பணி தொடங்கி நடந்து வருகிறது. என்விடியா நிறுவனத்தில் உயர்மட்டத்தில் உள்ளவர்களின் பெயர்களோடு, வெளிநிறுவனத்தில் பணியாற்றும் நபர்களின் பெயர்களும் இந்த பொறுப்புக்கு எடுத்து கொள்ளப்பட்டுள்ளது. அந்த வகையில் 3 இந்தியர்களின் பெயர்கள் டாப் லிஸ்ட்டில் உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

சஞ்சய் மெஹ்ரோத்ரா

இதில் முதலாவது பெயர் சஞ்சய் மெஹ்ரோத்ரா. உத்தர பிரதேசத்தை பூர்வீகமாக கொண்ட இவர் தற்போது அமெரிக்காவின் மைக்ரான் டெக்னாலஜி நிறுவனத்தின் சிஇஓவாக உள்ளார். இந்த மைக்ரான் நிறுவனம் சிப் தொழில்நுட்பத்தில் சிறந்து விளங்கி வருகிறது. இவர் கடந்த 2017 ம் ஆண்டில் இருந்து மைக்ரான் நிறுவனத்தின் சிஇஓவாக செயல்பட்டு வருகிறது. ஏஐ சிப் மார்க்கெட்டில் மைக்ரான் நிறுவனத்தின் செயல்பாட்டை அதிகரிக்கும் பணிகளில் தற்போது கவனம் செலுத்தி வருகிறார்.

இவர் மைக்ரான் நிறுவனத்தில் பணியாற்றுவதற்கு முன்பாக 'சான்டிஸ்க்' நிறுவனத்தின் இணை நிறுவனர், சிஇஓவாக செயல்பட்டார். செமிகண்டக்டர் மற்றும் சிப் தொழில்நுட்ப நிறுவனங்களில் உள்ள இவரது அனுபவத்தை என்விடியா நிறுவனம் பயன்படுத்தி கொள்ள நினைக்கலாம்.

நிகேஷ் ஆரோரா

அடுத்ததாக நிகேஷ் ஆரோரா. பஞ்சாபி குடும்பத்தை சேர்ந்த இவர் உத்தரபிரதேசத்தை பூர்வீகமாக கொண்டவர். இவர் அமெரிக்காவின் Palo Alto நெட்வொர்க் என்ற சைபர் செக்யூரிட்டி நிறுவனத்தின் தலைவராக உள்ளார். இந்த நிறுவனத்தின் தலைவராக அவர் 2018 ம் ஆண்டில் இருந்து செயல்பட்டு வருகிறார்.

அதற்கு முன்பாக சாப்ட்பேங்க் மற்றும் கூகுள் நிறுவனத்தின் முக்கிய பொறுப்புகளில் செயல்பட்டு வந்தார். இவருக்கும் சிப் மேக்கிங் பிரிவில் போதிய அளவில் அனுபவம் இல்லாமல் இருந்தாலும் கூட பெரிய தொழில்நுட்ப நிறுவனங்களை நிர்வகிப்பதில் உள்ள திறமை என்விடியாவிற்கு கைக்கொடுக்கலாம்.

தாமஸ் குரியன்

இதற்கு அடுத்ததாக தாமஸ் குரியன் பெயர் உள்ளார். கேரளாவை பூர்வீகமாக கெண்ட இவர் கூகுள் கிளவுட்டின் சிஇஓவாக உள்ளார். கூகுளின் கிளவுட் உள்கட்டமைப்பு, மென்பொருள் மற்றும் ஏஐ சேவைகளை மேற்பார்வையிடும் பணியை செய்து வருகிறார்.

பெரிய தொழில்நுட்ப செயல்பாடுகளை மேற்கொள்வது, பெரிய பெரிய நிறுவனங்களுடன் சேர்ந்து பணியாற்றுவது உள்ளிட்டவற்றில் தாமஸ் குரியனுக்கு நல்ல அனுபவம் உள்ளது. அதேவேளையில் நிகேஷ் ஆரோரா போல் தாமஸ் குரியனுக்கும் சிப் வடிவமைப்பில் அனுபவம் இல்லை.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+