சீக்கிரம் எலான் மஸ்க் செவ்வாய் கிரகத்தில் செட்டில் ஆவார் போலயே! மிக முக்கிய விஷயம் கண்டுபிடிப்பு.!
வாஷிங்டன்: செவ்வாய்க் கிரக ஆய்வுகள் ஒரு பக்கம் நடந்து வரும் நிலையில், அங்கே இருக்கும் பனிக்கட்டிகள் குறித்து ஆய்வாளர்கள் முக்கிய கண்டுபிடிப்பைச் செய்துள்ளனர்.
செவ்வாய் கிரகம் குறித்த ஆய்வுகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. ஒப்பீட்டளவில் மற்ற கிரகங்களைக் காட்டிலும் செவ்வாய்க் கிரகம் பூமியில் இருந்து அருகே உள்ளது. இதனால் செவ்வாய்க் கிரகம் குறித்த ஆய்வுகள் உலகெங்கும் தீவிரமாக நடந்து வருகிறது.

இதுவரை செவ்வாய் கிரகத்தை ஆய்வு செய்ய மட்டும் 20க்கும் மிஷன்களை ஆய்வாளர்கள் அனுப்பியுள்ளனர்.. இந்த மிஷன்களில் பல முக்கிய தகவல்கள் தெரிய வந்துள்ளது.
செவ்வாய் கிரகம்: சமீபத்தில் நடத்திய ரேடார் ஆய்வில், பல கிலோமீட்டர்கள் தடிமனான பனியின் ராட்சத அடுக்குகள் கண்டறியப்பட்டன. இந்த பனி என்பது ஆழமான செவ்வாய்க் கிரகத்தில் கடல் இருந்தால் அதை நிரப்ப போதுமான தண்ணீரைக் கொண்டுள்ளதாக ஆய்வாளர்கள் கூறுகின்றனர். இந்த கண்டுபிடிப்புகள் செவ்வாய்க் கிரகத்தைச் சுற்றி 20 ஆண்டுகளாக ஆய்வு செய்யும் மார்ஸ் எக்ஸ்பிரஸ் மிஷன் மூலம் கண்டுபிடிக்கப்பட்டது.
செவ்வாய் கிரகத்தில் பனியின் சான்றுகள் இருப்பதை விண்கலம் கண்டுபிடிப்பது இது முதல் முறையல்ல.. இருப்பினும், ஒரே இடத்தில் இந்தளவுக்குப் பெரிய தடிமனான பனி கண்டுபிடிக்கப்படுவது இதுவே முதல்முறையாகும். இவை 2.3 மைல் அதாவது 3.7 கிமீ தடிமனானதாக இருக்கிறது.
பனிக்கட்டிகள்: மேலும், ஏற்கனவே அங்கே பனிக்கட்டிகள் இருந்ததாகக் கண்டறியப்பட்ட ஆய்வுகளுடன் இந்த ஆய்வுகள் ஒத்துப்போவதாக ஆய்வாளர்கள் கூறுகின்றனர். இது குறித்து ஆய்வாளர்கள் கூறுகையில், "ரேடார் சிக்னல்கள் எடுத்துப் பார்க்கும் போது, அதில் பனி இருப்பதற்கான ஆதாரத்தைக் காட்டுகிறது. நாம் செவ்வாய்க் கிரகத்தில் அதன் துருவங்களை கவனிக்க வேண்டும்.. அங்கே பனி அதிகம் இருப்பது போலத் தெரிகிறது" என்று கூறுகின்றனர்.
இந்த பனிக்கட்டிகள் மிகவும் தடிமனாக இருக்கிறது. இவை செவ்வாய் கிரகத்தில் 3.7 கிமீ (2.3 மைல்) வரை நிலத்தடிக்குச் செல்வதாக ஆய்வாளர்கள் கூறுகின்றனர். அதேநேரம் அங்கே இருக்கும் பனிக்கட்டி தூய்மையானது இல்லை என்றும் ஆய்வாளர்கள் கூறுகின்றனர். அந்த பனிக்கட்டி பெரும்பாலும் தூசியால் மாசுபட்டு இருப்பதாக ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.
எங்கே இருக்கிறது: இந்த பனிக்கட்டிகள் செவ்வாய் கிரகத்தின் ஈக்குவேட்டார் ரேகைக்கு அருகில் அமைந்துள்ளது. வரும் காலத்தில் விண்வெளி வீரர்கள் ஆய்வுக்காகச் செவ்வாய் கிரகத்திற்கு செல்லும் போது, அந்த பனிக்கட்டிகள் அணுகக் கூடிய ஒன்றாக இருப்பதாக ஆய்வாளர்கள் கூறுகின்றனர். நிலத்திற்கு அடியில் புதைந்து கிடப்பதால் அதை அணுகுவதில் சிக்கல் இருப்பதாக ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.
கடந்த 2007ஆம் ஆண்டில் 2.5 கிலோமீட்டர் ஆழம் வரை பனிக்கட்டிகள் கண்டறியப்பட்டது.. இருப்பினும், அவை எந்தளவுக்கு ஆழமானது என்பதை அப்போது ஆய்வாளர்களால் உறுதி செய்யவில்லை. கடந்த 3 பில்லியன் ஆண்டுகளில் செவ்வாய்க் கிரகத்தில் எரிமலை இருந்ததாகவும் அதில் இருந்து பனிக்கட்டிகள் உருவாகி இருக்கலாம் என்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.
எலான் மஸ்க்: எலான் மஸ்க் செவ்வாய் கிரகத்தில் செட்டில் ஆக வேண்டும் என்று ஆய்வு செய்து வரும் நிலையில், அதையும் இதையும் ஒப்பீட்டு பலரும் கருத்துகளை கூறி வருகின்றனர்.
-
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர்












Click it and Unblock the Notifications