உளவு பார்க்கும் ஏலியன் ஸ்பேஸ் ஷிப்! பூமி பாதுகாப்பு சிஸ்டத்தை ஆக்டிவேட் செய்த நாசா? என்ன நடக்கிறது?
வாஷிங்டன்: நம்முடைய பூமிக்கும், சூரிய குடும்பத்திற்கும் கொஞ்சமும் சம்பந்தமே இல்லாத ஒரு விண்கல் திடீரென உள்ளே வந்திருக்கிறது. தற்போது நமது சூரிய குடும்பத்தில் ரவுண்டு அடித்துக்கொண்டிருக்கும் இந்த விண்கல், இன்னமும் மர்மமானதாகவே இருக்கிறது. ஏனெனில் இது ஏலியன் ஸ்பேஸ்ஷிப்பாக இருக்க வாய்ப்பு இருக்கிறது என்றும் இதை எதிர்கொள்ள பூமி பாதுகாப்பு சிஸ்டத்தை நாசா ஆக்டிவேட் செய்திருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்த விண்கல்லுக்கு 3I/ATLAS என பெயரிடப்பட்டிருக்கிறது. இது குறித்து வீடியோ ஒன்று வெளியாகியிருக்கிறது. அதில், அதில், 3I/ATLAS விண்கல்லுடன் ஒரு பெரிய கப்பல் செல்வதாகக் காட்டப்பட்டுள்ளது. இந்த விண்கல் இயற்கையானது அல்ல, இது வேற்று கிரக தொழில்நுட்பம் என்றும் சிலர் கருதுகின்றனர். இருப்பினும், இந்த வீடியோவின் உண்மை தன்மை இதுவரை உறுதிப்படுத்தப்படவில்லை.

நமது பூமியை விண்கற்கள் சில தாக்கியுள்ளன. இதுபோன்ற ஆபத்தான விண்கல்லை கண்காணிக்கும் பணியை மேற்கொண்டு வரும் 'விண்கல் எச்சரிக்கை வலையமைப்பும்', நாசாவும் 3I/ATLAS விண்கல்லைக் கண்காணிக்கும் பணியை தொடங்கியுள்ளன. ஒரு விண்கல்லை இவ்வாறு விரிவாகக் கண்காணிப்பது இதுவே முதல்முறை. இதில் ஆறுதல் அளிக்கக்கூடிய செய்தி என்னவெனில், இந்த விண்கல் பூமிக்கு எந்த அச்சுறுத்தலையும் ஏற்படுத்தாது என்பதுதான். நாசாவும் இதை உறுதி செய்திருக்கிறது.
3I/ATLAS விண்கல் கடந்த ஜூலை 1ம் தேதி ATLAS தொலைநோக்கி அமைப்பு மூலம் கண்டறியப்பட்டது. இதன் பாதை சூரிய மண்டலத்திற்கு வெளியே உள்ள ஒரு ஹைபர்போலிக் பாதை என்பதால், இது சூரிய மண்டலத்தைச் சாராத விண்கல் என உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இது அக்டோபர் 29-30 தேதிகளில் சூரியனை மிக அருகில் கடந்து செல்லும் என எதிர்பார்க்கப்படுகிறது. சூரியனை தாண்டி வரும் இது, டிசம்பர் 19ம் தேதி பூமிக்கு மிக அருகில் கடந்து செல்லும். ஜேம்ஸ் வெப் விண்வெளி தொலைநோக்கி மேற்கொண்ட ஆய்வில், இந்த விண்கல்லில் கார்பன் டை ஆக்சைடு அதிகமாகவும், நீர்ச்சத்து குறைவாகவும் இருப்பது தெரியவந்துள்ளது.
சில ஆராய்ச்சியாளர்கள் இது நம் சூரிய குடும்பத்தை விடப் பழமையானது என்றும், சுமார் 7 பில்லியன் ஆண்டுகள் பழமையானது என்றும் கருதுகின்றனர். இது சூரிய குடும்பத்திற்கு வெளியே இருந்து வருவதால், மற்ற நட்சத்திர மண்டலங்களில் உள்ள பொருட்களைப் பற்றிய அரிய தகவல்களை இது வழங்கலாம்.
ஏலியன்கள் குறித்த பேச்சுக்கள் வேடிக்கையாக தோன்றலாம். ஆனால் உண்மையில் ஏலியன்கள் இருப்பதற்கான வாய்ப்புகள் அதிகம் இருக்கிறது. ஏனெனில் இந்த பிரபஞ்சத்தில் பல லட்சம் கோடிக்கணக்கான நட்சத்திரங்கள் இருக்கின்றன. நமது சூரியனும் ஒரு நட்சத்திரம்தான். சூரியனை சுற்றி 8 கோள்கள் இருப்பதை போன்ற, மற்ற நட்சத்திரங்களை சுற்றி கோள்கள் இருக்கின்றன. இதில் சில கோள்களில் நீர் இருப்பதற்கான வாய்ப்புகள் அதிகம். அதில் உயிர்கள் இருக்கலாம். சிம்பிளாக சொல்வதெனில் ஏலியன்கள் இருக்க 100% வாய்ப்புகள் இருக்கின்றன என்று ஆய்வாளர்கள் கூறுகிறார்கள். அப்படியெனில் 3I/ATLAS விண்கல் நிச்சயம் கண்காணிக்கப்பட வேண்டிய ஒன்றுதான்.
-
டாஸ்மாக்கில் ரூ.3,600 கோடி ஊழல்.. லிஸ்ட் எடுத்த தவெக.. அமைச்சர் விக்னேஷ் திடுக் தகவல் -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தலை எதிர்கொள்ள திமுகவின் இரட்டை வியூகம்.. இள ரத்தத்திற்கு முக்கியத்துவம்! -
96,000 வாக்குகள் வித்தியாசத்தில்.. தவெக வேட்பாளரை ஜெயிக்க வைத்த தொகுதிக்கு இந்த நிலைமையா? -
இந்தியாவை தாக்கும் பெரிய ஆபத்து.. விஷயம் கேட்டு எலான் மஸ்க் கூட அதிர்ந்து போனார்! பேரழிவு கன்பார்ம்? -
அதிகாலையே கணக்கில் வரவு வைக்கப்பட்ட ரூ.3000.. வந்தது மே மாதம் பேமெண்ட்.. அரசின் அசத்தல் மூவ்! -
சொத்துகளை மறைக்கும் சென்னை மேயர் பிரியா.. துணை மேயர் உள்பட 75% கவுன்சிலர்கள் 4 ஆண்டுகளாக ‘டிமிக்கி' -
அதிமுக + திமுகவிற்கு ஷாக்.. 4 மாஜி அமைச்சர்கள் - 8 எம்எல்ஏக்கள் உள்பட 60 பேர் தவெகவில் ஐக்கியம் -
அடித்து ஆடும் விஜய்.. வருகிறது ராமநாதபுரம் புதிய விமான நிலையம்.. பொருளாதார புரட்சிக்கு அடித்தளம்! -
ரஷ்யா வச்ச ஆப்பு.. தள்ளுபடிலாம் தர முடியாது.. பிரீமியம் கட்டணம்! கச்சா எண்ணெய்க்கு 425% கூடுதல் தொகை -
ரூ.15 லட்சம் கோடி பஸ்பம் ஆகும்? சரிகிறது இந்தியாவின் தங்க’ சாம்ராஜ்யம்.. நாட்டையே உலுக்கும் சம்பவம் -
"அண்ணாமலை வந்ததால் பாஜக ஒன்னும் பலமாகவில்லை".. ஒரு இதழை கூட அசைக்க முடியாது.. தமிழிசை ‘அட்டாக்' -
நாங்க தோத்துட்டோம்.. ஆனா சாகலை! விஜய்க்கு ஏதாவது ஆச்சுனா கம்பெனி பொறுப்பில்லை! மாஜி கொடுத்த வார்னிங்












Click it and Unblock the Notifications