புதிய கேஸ்களின் எண்ணிக்கையில் மீண்டும் தொடர்ந்து முதலிடத்தில் அமெரிக்கா!
வாஷிங்டன்: உலகளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 55,928,368 ஆகும்.
உலகில் கொரோனா பாதிப்பு வேகமாக உயர்ந்து வருகிறது. அந்த வகையில் உலகளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 5.59 கோடியாகும்.

இதுவரை கொரோனாவால் மரணமடைந்தவர்களின் எண்ணிக்கை 1,342,840 ஆகும். கொரோனாவிலிருந்து மீண்டவர்களின் எண்ணிக்கை 3.89 கோடியாகும்.
இதுவரை ஆபத்தான கட்டத்தில் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 100,247 ஆகும். அமெரிக்காவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 1.16 கோடியாகும்.
இதுவரை கொரோனாவால் அமெரிக்காவில் இறந்தவர்களின் எண்ணிக்கை 2.54 லட்சமாகும். இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 8,912,704 ஆகும். இதுவரை கொரோனாவால் இறந்தவர்களின் எண்ணிக்கை 1.31 லட்சமாகும்.
பிரேசிலில் கொரோனாவுக்கு 5,911,758 பேர் பாதிக்கப்பட்டுள்ளார்கள். இதுவரை இறந்தவர்களின் எண்ணிக்கை 1.66 லட்சமாகும். அமெரிக்காவில் புதிதாக கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 154,592 ஆகும். இந்தியாவில் 38,532 பேர் புதிதாக கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இத்தனை நாட்களாக புதிய கேஸ்களின் எண்ணிக்கையில் இந்தியா தொடர்ந்து முன்னிலை வகித்து வந்த நிலையில் தற்போது அமெரிக்கா முதலிடத்தை பிடித்துள்ளது.












Click it and Unblock the Notifications