ஐய்யோ! 50 அடி நீள ராட்சத பாம்பின் எலும்புக்கூடு?.கூகுள் மேப் புகைப்படத்தால் மக்கள் பீதி..உண்மை என்ன?

Subscribe to Oneindia Tamil

வாஷிங்டன்: கூகுள் மேப் செயற்கைகோள் புகைப்படத்தை பார்த்த போது அதில் ஒரு 50 அடி நீள பாம்பின் எலும்புக்கூடு இருந்ததாக டிக்டாக்வாசி ஒருவர் வெளியிட்டார். உண்மையில் இது என்ன? என்ற தகவல் வெளியாகியுள்ளது.

கூகுள் மேப்ஸ் ஃபன் என்ற பக்கத்தில் ஒரு வீடியோ வெளியானது. இது பகிரப்பட்ட உடனேயே அதிக பார்வையாளர்களை கவர்ந்தது. 2 மில்லியன் பார்வையாளர்கள் குவிந்தனர்.

இந்த வீடியோவில் அப்படி என்னதான் இருந்தது என கேட்கிறீர்களா? கூகுள் மேப் வீடியோவில் 50 அடி நீள மிகப் பெரிய வளைந்து நெளிந்து காணப்படும் ஒரு எலும்புக்கூடு இருந்தது.

பெரிய பாம்பு

பெரிய பாம்பு

இதை பார்த்த நெட்டிசன்கள் ஆஹா எவ்ளோ பெரிய பாம்பு, இது பாம்பா இல்லை ராட்சத விலங்கா என்றெல்லாம் கேள்வி எழுப்பியிருந்தனர். இந்த எலும்புக்கூடு எப்படி தொல்லியல்துறையினருக்கோ அல்லது விலங்குகள் நலத் துறையினருக்கோ தென்படவில்லை என்றெல்லாம் கேட்கப்பட்டது.

பெர்முடா முக்கோணம்

பெர்முடா முக்கோணம்

பெர்முடா முக்கோணம், ஏலியன்ஸ் என சுவாரஸ்யங்களும் திகிலும் நிறைய தகவல்கள் மக்களுக்கு கிடைத்துள்ள நிலையில் இந்த வீடியோவும் விவாதத்திற்குள்ளானது. ராட்சத பாம்புகள் எல்லாம் கிராபிக்ஸ் காட்சி மூலம் நாம் சினிமாவில் பார்த்துள்ளோம். அண்மையில் கூட சந்திரமுகி படத்தில் ஒரு நீளமான பாம்பு இருக்கும்.

புராணக் கதை

புராணக் கதை

அது போல் புராணக் கதைகளில் கூட மிகப் பெரிய பாம்புகள் இருந்ததாக தெரிகிறது. தேவர்களும் அசுரர்களும் கடலில் அமுதை கடையும் போது வாசுகி எனும் பாம்பு மிக பெரிய அளவில் இருந்ததாக புராணங்கள் கூறுகின்றன. இந்த நிலையில் அந்த பொருள் என்ன என்பது குறித்து விஞ்ஞானிகள் உண்மையை தெரிவித்துள்ளனர்.

பாம்பு அல்ல

பாம்பு அல்ல

அதாவது அது பாம்பு அல்ல, பாம்பின் எலும்புக்கூடும் அல்ல, எந்த வித வித்தியாசமான ராட்சத மிருகமும் அல்ல. இது தி செர்பண்ட் இன் தி ஓஷன் எனப்படும் உலோக சிற்பமாகும். இது பிரான்ஸ் பகுதியில் உள்ளது. இந்த உலோக சிற்பம் பிரான்ஸின் மேற்கு கடலோரத்தில் காணப்படுகிறது.

உருவாக்கியவர்கள் யார்

உருவாக்கியவர்கள் யார்

இது 2012 ஆம் ஆண்டு எஸ்துயர் கலை கண்காட்சியின் ஒரு பகுதி என கண்டுபிடிக்கப்பட்டது. இதை உருவாக்கியவர்கள் சீன- பிரான்ஸ் கலைஞர் ஹுயாங் யாங் பிங் ஆவார். இதன் நீளம் 130 மீட்டராகும். அலைகள் வெளியே வந்தால் அந்த சிற்பம் செயற்கைகோள் மூலம் தெரியும்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+