Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

உலகின் தலை சிறந்த 50 இடங்கள்.. 2 இந்தியாவில் இருக்காம்.. எந்த பகுதிகள் தெரியுமா? டைம்ஸ் இதழ் லிஸ்ட்!

Subscribe to Oneindia Tamil

வாஷிங்டன்: உலகின் தலைசிறந்த 50 இடங்களின் பட்டியலை டைம்ஸ் இதழ் வெளியிட்டுள்ளது. இந்த பட்டியலில் இந்தியாவின் கேரளா மற்றும் அகமதாபாத் ஆகிய இடங்களும் இடம்பெற்றுள்ளன.

அமெரிக்காவை சேர்ந்த பிரபல இதழ் டைம்ஸ். உலக அளவில் செல்வாக்கு மிக்க நபர்கள், தலைசிறந்த இடங்கள், சிறந்த கல்வி நிறுவனங்கள் ஆகியவற்றை தேர்வு செய்து பட்டியலிட்டு டைம்ஸ் இதழ் வெளியிட்டு வருகிறது.

டைம்ஸ் இதழின் அட்டைப் படத்தில் இடம் பெறுபவர்கள் குறித்த தகவல்களும் சர்வதேச அளவில் பகிரப்படும். அந்த அளவுக்கு பிரபலம் மிக்க டைம்ஸ் இதழ், நடப்பு 2022-ம் ஆண்டில் உலகின் தலைசிறந்த 50 இடங்களை தேர்வு செய்து தரவரிசை பட்டியலை வெளியிட்டுள்ளது.

 இந்தியாவின் 2 இடங்கள்

இந்தியாவின் 2 இடங்கள்

டைம்ஸ் இதழ் வெளியிட்ட இந்த பட்டியலில் இந்தியாவின் இரண்டு இடங்கள் இடம் பிடித்துள்ளன. இயற்கை எழில் கொஞ்சும் மாநிலமாகவும், கடவுளின் தேசம் என்று வர்ணிக்கப்படும் கேரளாவும், பாரம்பரியம் மிக்க புராதன சின்னங்களை கொண்ட குஜராத்தின் அகமதாபாத் நகரும் இடம் பிடித்துள்ளன.

இந்தியாவின் இரண்டு இடங்களை தவிர, ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள ராசல் கைமா, உடா மாகாணத்தில் உள்ள பார்க் சிட்டி, தென்கொரியாவின் தலைநகர் சியோல், ஆஸ்திரேலியாவில் உள்ள கிரேட் பாரியர் ரீப், ஆர்டிக், ஸ்பெயினின் வலென்சியா, பூடானில் உள்ள டிரான்ஸ் பூடான் பாதை, சர்வதேச விண்வெளி நிலையம், கொலம்பியா தலைநகரம் போகொடோ, ஜாம்பியாவில் உள்ள லோயர் ஜாம்பேசி தேசிய பூங்கா, துருக்கி தலைநகரம் இஸ்தான்புல், ரவண்டா தலைநகரம் கிகாலி ஆகிய இடங்களும் டைம்ஸ் இதழின் பட்டியலில் இடம் பிடித்துள்ளன.

 இயற்கை எழில் கொஞ்சும் கேரளா

இயற்கை எழில் கொஞ்சும் கேரளா

இந்தப் பட்டியலை வெளியிட்டுள்ள டைம்ஸ் இதழ், இயற்கை எழில் கொஞ்சும் கேரளாவின் அழகையும் வர்ணித்துள்ளது. இதில், இந்தியாவின் தென் மாநிலமான கேரளாவை சுற்றுலாப்பயணிகள் கண்டு களிக்க மிகச்சிறப்பான இடம் எனவும் வர்ணித்துள்ளது. மேலும், இந்தியாவின் மிகச்சிறந்த மாநிலங்களில் ஒன்றான கேரளா, அழகான கடற்கரைகளையும், ரம்மியமான இயற்கை சூழல், கோவில்கள், அரண்மனைகள் ஆகியவற்றை கொண்டுள்ளது.

கடவுளின் தேசம் என்று அழைக்கப்படுவதற்கு தகுதியான இடம். நடப்பு ஆண்டில் மோட்டார்-ஹோம் சுற்றுலாவை கேரளா மேம்படுத்தியிருக்கிறது. மாநிலத்தின் முதல் கேரவன் பூங்கா, புல்வெளிகள் ஆகியவற்றை இயற்கை எழில் கொஞ்சும் மலைவாசஸ்தலமான வாகமனில் திறந்துள்ளது எனவும் டைம்ஸ் இதழ் தெரிவித்துள்ளது.

 பல்வேறு சிறப்புகளுடன் அகமதாபாத் நகரம்

பல்வேறு சிறப்புகளுடன் அகமதாபாத் நகரம்

அகமதாபாத் நகரம் பற்றி குறிப்பிட்டுள்ள டைம்ஸ் இதழ், "குஜராத்தின் அறிவியல் நகரமான அகமதாபாத், பொழுதுபோக்கு அம்சங்கள் நிறைந்த பரந்த இடம். தீம் பார்க் ஆகியவற்றை கொண்டுள்ளது. மேலும் கடந்த ஆண்டு சுற்றுலாப்பயணிகளை கவர 20 ஏக்கர் பரப்பளவில் இயற்கை பூங்காவை திறந்துள்ளது. இந்த பூங்காவில் உள்ளூர் தாவரங்கள் இடம் பெற்றுள்ளன. அங்குள்ள மக்கள் அறிந்து கொள்ளக்கூடிய வகையில் அது அமைக்கப்பட்டுள்ளது. இந்த பூங்காவில் செஸ் மற்றும் யோகா செய்வதற்கான இடங்களும் ஒதுக்கப்பட்டுள்ளன" என தெரிவித்துள்ளது.

மேலும் இந்த நகரை பற்றி கூறுகையில், 'இந்தியாவின் முதல் யுனெஸ்கோ உலக பாரம்பரிய நகரமான, அகமதாபாத் பண்டைய அடையாளங்கள் மற்றும் சமகால கண்டுபிடிப்புகள் இரண்டையும் கொண்டுள்ளது, சபர்மதி ஆற்றின் கரையில் 36 ஏக்கரில் அமைந்துள்ள அமைதியான காந்தி ஆசிரமம் முதல் உலகின் நீண்ட நாள் பண்டிகை கொண்டாட்டங்களில் ஒன்றாக உள்ள நவராத்திரி வரை பல்வேறு சிறப்புகளை உள்ளடக்கியது' என்று தெரிவித்துள்ளது.

 இயல்பு வாழ்க்கை தொடக்கம்

இயல்பு வாழ்க்கை தொடக்கம்

கொரோனா பெருந்தொற்று காரணமாக 2 ஆண்டுகளுக்கும் மேலாக சர்வதேச அளவில் போக்குவரத்து பெருமளவு பாதிக்கப்பட்டது. இதன் காரணமாக சுற்றுலாத்துறையும் கணிசமாக முடங்கியது. நடப்பு ஆண்டில் பெருந்தொற்றுக்கு எதிராக பெரும்பாலானோர் தடுப்பூசி போட்டுக்கொண்டதால் இயல்பு வாழ்க்கை கிட்டத்தட்ட நெருங்கிவிட்டது.

மீண்டும் சுற்றுலாப்பயணிகள் வான்வழியாகவும், சாலை வழியாகவும் பயணிக்கத் தொடங்கியிருக்கின்றனர். சுற்றுலாப்பயணிகளை வரவேற்று உபசரித்து சுற்றுலாத்துறைக்கு புது புத்துயிர் ஊட்ட நடப்பு ஆண்டு தயராகி வருவதாகவும் டைம்ஸ் இதழ் தெரிவித்துள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+