அடேங்கப்பா இத்தனை வசதிகளா! டிரெண்ட் ஆகும் 66 ஆண்டு பழமையான ஃபிரிட்ஜ் விளம்பரம்.. சுவாரசிய தகவல்!
வாஷிங்டன்: 1956-ம் ஆண்டு வெளியிடப்பட்ட பழமையான ஃப்ரிட்ஜ் விளம்பரம் ஒன்று தற்போது சமூக வலைத்தளத்தில் டிரெண்ட் ஆகி வருகிறது. பலரும் இந்த வீடியோவை சேர் செய்து வருகின்றனர்.
தொழில்நுட்ப கண்டுபிடிப்புகள் மனிதனின் வேலைப்பளுவை கணிசமாக குறைக்கின்றது என்பதில் எள்ளளவும் சந்தேகம் இல்லை.
தொழிற்சாலைகள் தொடங்கி வீட்டு வேலைகள் வரை மனித சமூகத்திற்கு உதவும் வகையில் ஏராளமான கண்டுபிடிப்புகள் புதுப்புது அப்டேட்களுடன் வந்து கொண்டிருக்கின்றன.

ஏராளமான அப்டேட்
ஆரம்பத்தில் ஒரு பொருள் கண்டுபிடிக்கப்படும் சமயத்தில் குறைந்த திறன்களுடன் இருந்து இருக்கும். ஆனால் ஆண்டுகள் செல்ல செல்ல அதில் இருந்து கூடுதல் அப்டேட் செய்யப்பட்டு ஏராளமான வசதிகளுடன் இன்று கிடைக்கக் கூடியதாக மாறி நமக்கு கிடைக்கின்றன. இதற்கு சிறந்த எடுத்துக்காட்டாக மெமரி கார்டு ஆகியற்றைக் கூட சொல்லலாம். ஏனெனில், மெமரி கார்டு கண்டுபிடிக்கப்பட்ட புதிதில் 5 எம்.பி கொண்ட மெமரி கார்டை இரண்டு, மூன்று பேர் சேர்ந்து நகர்த்தி செல்லும் பதிவுகளும், தற்போது பல டிபி(டெரா பைட்) சேமிக்கும் திறன் கொண்ட மெமரி கார்டு கையடக்கத்திற்குள் கிடைப்பதையும் சமூக வலைத்தளங்களில் நாம் அடிக்கடி பார்த்து இருப்போம்.

குளிர்சாதன பெட்டி விளம்பரம்
அதேபோல், தான் கேமிரா தொடங்கி பல பொருட்களும் இன்றைய ஸ்மார்ட் உலகிற்கு தகுந்தவாறு பல அப்டேட்களுடன் வெளி வருகின்றன. எத்தனை புதுப்புது அம்சங்கள் வந்தாலும் ஓல்டு இஸ் கோல்டு என்று நம்மில் பலரும் சொல்லத் தவறுவது இல்லை. அதை மெய்பிக்கும் வகையில் தான் கடந்த சில தினங்களாக 1956- ஆம் ஆண்டு வெளியான ஃப்ரிட்ஜ்(குளிர்சாதன பெட்டி) விளம்பரம் ஒன்று தற்போது நெட்டிசன்கள் மத்தியில் டிரெண்ட் ஆகி வருகிறது.

டிரெண்ட் ஆகும் பழைய விளம்பரம்
''வரலாற்றில் தொலைந்து போனது" என்ற பெயருடன் உள்ள ட்விட்டர் பக்கத்தில், 66 ஆண்டுகள் பழமையான ஃபிரிட்ஜ் வீடியோ வெளியிடப்பட்டுள்ளது. இந்த வீடியோ வெளியான சிறிது நேரத்தில் 1 கோடிக்கும் மேற்பட்ட வியூவ்ஸ்களை கடந்துள்ளது. நெட்டிசன்கள் மத்தியில் இவ்வளவு டிரெண்ட் ஆவதற்கு காரணம் என்னவென்று பார்த்தால், பழமையான அந்த ஃபிரிட்ஜில் ஏராளமான இட வசதிகளுடன் பிரத்யேக சிறிய ரேக்குகளும் உள்ளன. விளம்பரத்தில் வரும் பெண், ஃபிரிட்ஜில் உள்ள இட வசதி குறித்து தெளிவாக செய்முறை விளக்கம் அளிக்கிறார்.

தாராள இட வசதி
பழங்கள் வைப்பதற்கு தனி சூட்கேஸ் போன்ற பெட்டி, பாட்டில்கள் வைக்க தனி இடம், புதிதாக வைக்கப்படும் உணவுகளுக்கு ஒரு இடம் என தாராள இட வசதி உள்ளது. 1956-ல் இவ்வளவு வசதிகளுடன் கூடிய ஃபிரிட்ஜ் உள்ளதே. . என பார்த்த நெட்டிசன்கள் "வாவ்" போட்டுள்ளனர். மேலும் பலர் இந்த ஃபிரிட்ஜ் எங்கு கிடைக்கும் என்றும், ஓல்டு இஸ் கோல்டு என்றும் பதிவிட்டுள்ளார். இதேபோல் மற்றொரு நெட்டிசன் ஒருவர் புதிய ஃபிரிட்ஜ்களை விட இந்த ஃபிரிட்ஜ் அருமையாக உள்ளது என்றும் கருத்து தெரிவித்தப்படி சேர் செய்து வருகின்றனர். இந்த வகையில் 66 ஆண்டுகளுக்கு முன்பான பழைய விளம்பரம் நெட்டிசன்கள் மத்தியில் வலம் வந்துகொண்டிருக்கிறது.
-
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா? -
அமித் ஷா நோ சொன்னதால்.. கடைசி வரை ராகுல், சோனியாவை சந்திக்காமல் திரும்பிய விஜய்.. என்ன நடந்தது? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
கிளாம்பாக்கத்திற்கு பதில் கோயம்பேடு... ஆம்னி பஸ் போல் அரசு பஸ்சும் புறப்படுமா? அமைச்சர் தந்த பதில் -
கிரிக்கெட் கடவுளே சொல்லிட்டாரு.. வைபவ் சூர்யவன்ஷியின் பேட்டிங் ஸ்டைலை புகழ்ந்த சச்சின் டெண்டுல்கர்! -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
மரண ஓலம்.. 5 லட்சம் பேர் உயிரிழப்பு.. எங்கு திரும்பினாலும் கதறும் பொதுமக்கள்.. நிலைமை மோசம் -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
தவெகவில் இணையும் 2 அதிமுக எம்எல்ஏக்கள்! ஒருவர் சி.வி.சண்முகம்! இன்னொருவர்.. வெல்லமண்டி நடராஜன் தகவல் -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
இந்த வாரம் ஓடிடியை கலக்க வரும் 11 படங்கள், வெப் சீரிஸ்கள்.. தனுஷின் ‘கர’ முதல் ‘ஸ்பைடர்-நுவார்’ வரை












Click it and Unblock the Notifications