புதிதாக கொரோனா பாதித்தோர் எண்ணிக்கை தொடர்ந்து முதலிடத்தில் அமெரிக்கா!
வாஷிங்டன்: உலகளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 8.54 கோடி பேராகும். இதுவரை உலகளவில் கொரோனாவால் பலியானோரின் எண்ணிக்கை 18.50 லட்சமாகும்.
சீனாவிலிருந்து பரவிய கொரோனா இன்று உலக நாடுகளை பதம் பார்த்து வருகிறது. தற்போது இங்கிலாந்திலிருந்து உருமாறிய கொரோனா வேறு பரவி வருகிறது.

இந்த நிலையில் பழைய கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 8.54 கோடி பேராகும். உலகளவில் கொரோனாவால் பலியானோரின் எண்ணிக்கை 18.50 லட்சமாகும்.
அது போல் கொரோனாவால் மீண்டு வீடு திரும்பியோரின் எண்ணிக்கை 6.04 கோடி பேராகும். அமெரிக்காவில் 2.11 கோடி பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளார்கள். அமெரிக்காவில் இதுவரை 3.60 லட்சம் பேர் பலியாகிவிட்டனர். இதுவரை 1.24 கோடி பேர் நோயிலிருந்து மீண்டுள்ளனர்.
இந்தியாவில் 10,341,291 பேர் பாதிக்கப்பட்டுள்ளார்கள். இதுவரை 1.49 லட்சம் பேர் பலியாகிவிட்டனர். 99 லட்சம் பேர் மீண்டு வீடு திரும்பியுள்ளனர். பிரேசிலில் 77 லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளார்கள். அது போல் பலி எண்ணிக்கை 1.96 லட்சமாகும். இதுவரை மீண்டவர்களின் எண்ணிக்கை 68 லட்சமாகும்.
அமெரிக்காவில் கடந்த 24 மணி நேரத்தில் 1.91 லட்சம் பேர் புதிதாக கொரோனாவால் பாதிக்கப்பட்டனர். அது போல் இந்தியாவில் 21 ஆயிரம் பேரும் பிரேசிலில் 16 ஆயிரம் பேரும் புதிதாக பாதிக்கப்பட்டுள்ளனர். புதிதாக பாதித்தோரின் எண்ணிக்கையில் அமெரிக்கா தொடர்ந்து முன்னிலை வகிக்கிறது.
ரஷ்யாவில் 32 லட்சம் பேரும், பிரான்ஸில் 26 லட்சம் பேரும், பிரிட்டனில் 26 லட்சம் பேரும், துருக்கியில் 22 லட்சம் பேரும், இத்தாலியில் 21 லட்சம் பேரும் ஸ்பெயினில் 19 லட்சம் பேரும், ஜெர்மனியில் 17 லட்சம் பேரும் பாதிக்கப்பட்டுள்ளார்கள்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications