பிரிட்டனில் பரவும் உருமாறிய கொரோனா.. 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக 60 ஆயிரம் பேர் வைரஸால் பாதிப்பு

Subscribe to Oneindia Tamil

வாஷிங்டன்: உலகளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 8.68 கோடி பேராகும். இதுவரை உலகளவில் கொரோனாவால் பலியானோரின் எண்ணிக்கை 18.74 லட்சமாகும்.

சீனாவிலிருந்து பரவிய கொரோனா இன்று உலக நாடுகளை பதம் பார்த்து வருகிறது. தற்போது இங்கிலாந்திலிருந்து உருமாறிய கொரோனா வேறு பரவி வருகிறது.

இந்த நிலையில் பழைய கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 8.68 கோடி பேராகும். உலகளவில் கொரோனாவால் பலியானோரின் எண்ணிக்கை 18.74 லட்சமாகும்.

8.68 crore were affected for corona globally

அது போல் கொரோனாவால் மீண்டு வீடு திரும்பியோரின் எண்ணிக்கை 6.15 கோடி பேராகும். அமெரிக்காவில் 2.15 கோடி பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளார்கள். அமெரிக்காவில் இதுவரை 3.65 லட்சம் பேர் பலியாகிவிட்டனர். இதுவரை 1.28 கோடி பேர் நோயிலிருந்து மீண்டுள்ளனர்.

இந்தியாவில் 10,375,477 பேர் பாதிக்கப்பட்டுள்ளார்கள். இதுவரை 1.50 லட்சம் பேர் பலியாகிவிட்டனர். 99 லட்சம் பேர் மீண்டு வீடு திரும்பியுள்ளனர். பிரேசிலில் 78 லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளார்கள். அது போல் பலி எண்ணிக்கை 1.97 லட்சமாகும். இதுவரை மீண்டவர்களின் எண்ணிக்கை 69 லட்சமாகும்.

அமெரிக்காவில் கடந்த 24 மணி நேரத்தில் 2.22 லட்சம் பேர் புதிதாக கொரோனாவால் பாதிக்கப்பட்டனர். அது போல் இந்தியாவில் 17 ஆயிரம் பேரும் பிரேசிலில் 57 ஆயிரம் பேரும் புதிதாக பாதிக்கப்பட்டுள்ளனர். உருமாறிய கொரோனா பரவி வரும் பிரிட்டனில் 60,916 பேருக்கு புதிதாக கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. புதிதாக பாதித்தோரின் எண்ணிக்கையில் அமெரிக்கா தொடர்ந்து முன்னிலை வகிக்கிறது.

ரஷ்யாவில் 32 லட்சம் பேரும், பிரிட்டனில் 27 லட்சம் பேரும், பிரான்ஸில் 26 லட்சம் பேரும், துருக்கியில் 22 லட்சம் பேரும், இத்தாலியில் 21 லட்சம் பேரும் ஸ்பெயினில் 19 லட்சம் பேரும், ஜெர்மனியில் 18 லட்சம் பேரும் பாதிக்கப்பட்டுள்ளார்கள்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+