பிரிட்டனில் வேகமாக பரவும் உருமாறிய கொரோனா.. பழைய வைரஸால் ஒரே நாளில் 40 ஆயிரம் பேர் பாதிப்பு
வாஷிங்டன்: உலகளவில் கொரோனாவால் பாதித்தோரின் எண்ணிக்கை 9.87 கோடியாக உயர்ந்துள்ளது. அது போல் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 21 லட்சமாக உயர்ந்துள்ளது.
சீனாவிலிருந்து பரவிய கொரோனா இன்று உலக நாடுகளை பதம் பார்த்து வருகிறது. தற்போது இங்கிலாந்திலிருந்து உருமாறிய கொரோனா வேறு பரவி வருகிறது.

இந்த நிலையில் பழைய கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 9.87 கோடி பேராகும். உலகளவில் கொரோனாவால் பலியானோரின் எண்ணிக்கை 21 லட்சமாகும்.
அது போல் கொரோனாவால் மீண்டு வீடு திரும்பியோரின் எண்ணிக்கை 7.08 கோடி பேராகும். அமெரிக்காவில் 2.53 கோடி பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளார்கள். அமெரிக்காவில் இதுவரை 4.24 லட்சம் பேர் பலியாகிவிட்டனர். இதுவரை 1.52 கோடி பேர் நோயிலிருந்து மீண்டுள்ளனர்.
இந்தியாவில் 10,640,544 பேர் பாதிக்கப்பட்டுள்ளார்கள். இதுவரை 153,221 பேர் பலியாகிவிட்டனர். 10,300,063 பேர் மீண்டு வீடு திரும்பியுள்ளனர். பிரேசிலில் 87 லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளார்கள். அது போல் பலி எண்ணிக்கை 2.15 லட்சமாகும். இதுவரை மீண்டவர்களின் எண்ணிக்கை 75 லட்சமாகும்.
அமெரிக்காவில் கடந்த 24 மணி நேரத்தில் 1.88 லட்சம் பேர் புதிதாக கொரோனாவால் பாதிக்கப்பட்டனர். அது போல் இந்தியாவில் 14 ஆயிரம் பேரும் பிரேசிலில் 55 ஆயிரம் பேரும் புதிதாக பாதிக்கப்பட்டுள்ளனர். உருமாறிய கொரோனா பரவி வரும் பிரிட்டனில் 40,261 பேருக்கு புதிதாக கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. புதிதாக பாதித்தோரின் எண்ணிக்கையில் அமெரிக்கா தொடர்ந்து முன்னிலை வகிக்கிறது.
ரஷ்யாவில் 36 லட்சம் பேரும், பிரிட்டனில் 35 லட்சம் பேரும், பிரான்ஸில் 30 லட்சம் பேரும், துருக்கியில் 24 லட்சம் பேரும், இத்தாலியில் 24 லட்சம் பேரும் ஸ்பெயினில் 26 லட்சம் பேரும், ஜெர்மனியில் 21 லட்சம் பேரும் பாதிக்கப்பட்டுள்ளார்கள்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications