வாஷிங்டன் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

கொரோனாவால் மோசமாகும் பிரேசில்.. 10 லட்சத்தை தாண்டிய பாதிப்பு எண்ணிக்கை

Google Oneindia Tamil News

வாஷிங்டன்: உலகளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 90 லட்சத்தை தாண்டியது. பலியானோரின் எண்ணிக்கை 4.69 லட்சமாகும்.

உலக நாடுகள் கொரோனாவால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. இந்த நிலையில் உலகளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 90,38,807 ஆக உயர்ந்தது. அது போல் பலியானோரின் எண்ணிக்கை 4,69,604 ஆக உயர்ந்தது. இதுவரை குணமடைந்தோரின் எண்ணிக்கை 48,33,629 ஆகும். கொரோனாவால் ஆபத்தான நிலையில் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 54,737 ஆகும்.

90 lakhs people were infected globally

அமெரிக்காவில் கொரோனாவால் 23 லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை 1.22 லட்சம் பேர் பலியாகிவிட்டனர். 9.79 லட்சம் பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

அது போல் பிரேசிலில் 10 லட்சத்திற்கு மேலானோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். 50,659 பேர் இறந்துவிட்டனர். 5.79 லட்சம் பேர் குணமடைந்து வீடு திரும்பிவிட்டார்கள். உலக கொரோனா பாதிப்பில் 7 அல்லது 8 இடங்களுக்கு பின்னரே பிரேசில் இருந்தது. இந்த நிலையில் தற்போது 2 ஆவது இடத்திற்கு முன்னேறி சென்றுள்ளது அந்நாட்டு மக்களை கவலையடையச் செய்துள்ளது.

தென் மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு, பலி இரு மடங்கு அதிகரிப்பு- எச்சரிக்கும் எம்.பி. சு. வெங்கடேசன் தென் மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு, பலி இரு மடங்கு அதிகரிப்பு- எச்சரிக்கும் எம்.பி. சு. வெங்கடேசன்

ரஷ்யாவில் 5.84 லட்சம் பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளார்கள். இதுவரை 8,111 பேர் பலியாகிவிட்டனர். இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 4.26 லட்சத்தை தாண்டியது. பலியானோரின் எண்ணிக்கை 12,970 ஆகும். கடந்த 3 நாட்களாக மிக அதிக அளவில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது.

Recommended Video

    குணமானவர்களின் ரத்தத்தில் கொரோனாவை தடுக்கும் Antibody.. விஞ்ஞானிகள் கண்டுபிடிப்பு

    பிரிட்டனில் 3,01,815 பேரும் ஸ்பெயினில் 2,92,655 பேரும், பெருவில் 2.47 லட்சம் பேரும், இத்தாலியில் 2.38 லட்சம் பேரும் சிலியில் 2.31 லட்சம் பேரும், ஈரானில் 2,00,262 பேரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளார்கள்.

    English summary
    90 lakhs people were infected globally and 4.69 lakhs casualities.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X