ஸ்டைலா.. கெத்தா.. சன் கிளாசுடன் சிம்பன்சி குரங்கு என்ன செய்யுதுனு பாருங்க.. வியந்த நெட்டிசன்கள்!

Subscribe to Oneindia Tamil

வாஷிங்டன்: அமெரிக்காவில் சிம்பன்சி வகை குரங்கு ஒன்று சன் கிளாஸ் அணிந்தபடி கெத்தாக இளநீர் குடிக்கும் வீடியோ ஒன்று சமூக வலைத்தளத்தில் தீயாக பரவி வருகிறது.

வாலில்லா மனித குரங்கு இனமான சிம்பன்சி, மனித இனத்துடன் நெருங்கியது என்று விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.

மனிதனை போலவே இரு கால்களால் நடக்கும் திறன் கொண்ட சிம்பன்சிகள் செய்யும் சேட்டைகள் பலவும் இணையத்தில் அடிக்கடி டிரெண்டிங் ஆகும்.

சிம்பன்சி குரங்குகள்

சிம்பன்சி குரங்குகள்


தனது அறிவார்ந்த செயல்கள் மூலம் நம்மை வெகுவாக சிம்பன்சி வகை குரங்குகள் ரசிக்க வைக்கும். பொதுவாக விலங்குகளின் நடவடிக்கையை அனைவருமே ரசிப்போம். ஆனால், சிம்பன்சி வகை குரங்குகள் மனிதனை போலவே நடந்து கொள்வது இன்னும் கூடுதலாக ரசிக்க வைக்கும். இப்படித்தான் தற்போது அமெரிக்காவின் ஒரு சிம்பன்சி குரங்கு செய்த செயல் இணையத்தில் தீயாக பரவி வருகிறது.

சன் கிளாஸ் அணிந்துகொண்டு

சன் கிளாஸ் அணிந்துகொண்டு

அமெரிக்காவின் புளோரிடா மாகாணம் மியாமில் உள்ள வனவிலங்குகள் சரணாலயத்தில் உள்ள லிம்பனி என்ற சிம்பன்சி குரங்கு சன் கிளாஸுடன் இளநீர் சாப்பிடும் வீடியோ தான் அது.. இந்த வீடியோ தற்போது இணையத்தில் டிரண்ட் ஹிட் அடித்து வருகிறது. சில வினாடிகளே ஓடும் இந்த வீடியோவில், மனிதர்களை போல ஸ்ட்ரா மூலமாக இளநீர் சாப்பிடும் சிம்பன்சி, சன் கிளாஸும் அணிந்து கொண்டு செம கெத்தாக காட்சி தருகிறது.

அதற்கென தனியாக இன்ஸ்டாகிராம்

அதற்கென தனியாக இன்ஸ்டாகிராம்

இந்த வீடியோவை லட்சக்கணக்கானவர்கள் பார்த்துள்ளனர். லைக் மற்றும் கமெண்ட்களும் இந்த பதிவுக்கு குவிந்து வருகிறது. லிம்பனி என்ற பெயர் வைக்கப்பட்டுள்ள இந்த சிம்பன்சி சமூக வலைத்தளங்களில் மிகவும் பிரபலமானது. இந்த சிம்பசிக்கு என்றே தனியாக ஒரு இன்ஸ்டாகிராம் பக்கத்தையே சரணாலயத்தில் உள்ள அதிகாரிகள் உருவாக்கியுள்ளனர் என்றால் பார்த்துக்கொள்ளுங்கள்..

கூல் டிரிங்ஸ் குடிக்கும் வீடியோ

கூல் டிரிங்ஸ் குடிக்கும் வீடியோ

அந்த இன்ஸ்டாகிராம் பக்கத்தில் சரணாலயத்தில் உள்ள அதிகாரிகள், அந்த லிம்பனியின் செய்யும் குட்டிச்சேட்டைகளையும், மனிதர்களை போல நடந்து கொள்ளும் பதிவுகளையும் வெளியிட்டு வருகின்றனர். இது மட்டுமல்ல... கூல் டிரிங்ஸ் குடிக்கும் வீடியோ... லேப்டாப் பயன்படுத்தும் வீடியோ என மனிதர்களை போல அந்த லிம்பனி பல அட்டகாசங்களை செய்து நெட்டிசன்களை வியப்பில் வீழ்த்தியுள்ளது.

இவ்வளவு பேர் பாலோ செய்கிறார்களா?

இவ்வளவு பேர் பாலோ செய்கிறார்களா?

லிம்பனியை இன்ஸ்டகிராம் பக்கத்தில் 704 k பேர் பாலோ செய்கிறார்கள். அதாவது சுமார் 7 லட்சத்திற்கும் மேற்பட்டோர் பின் தொடர்கிறார்கள். அதேபோல், லிம்பனி செய்யும் அட்டகாசங்கள் மற்றும் விநோத செயல்கள் என ஆயிரத்திற்கும் மேற்பட்ட வீடியோ பதிவுகள் பதிவிடப்பட்டுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+