அடேங்கப்பா.. 131 மாடியில் இப்படி ஒரு வீடா!. 360 டிகிரி கோண பார்வை.. வாய் பிளக்கும் நெட்டிசன்கள்
வாஷிங்டன்: அமெரிக்காவின் நியூயார்க்கில் உள்ள செண்ட்ரல் பார்க் டவர் என்ற அடுக்குமாடி குடியிருப்பு கட்டிடத்தில் 129 முதல் 131 மாடி வரை உள்ள வீடுகளில் 360 டிகிரி கோண பார்வை கிடைக்கும் வகையில் கட்டப்பட்டுள்ளது. இது தான் உலகிலேயே மிக காஸ்ட்லியான வீடு என்று கூறப்படுகிறது.
விமானத்தில் பறக்கும் போதும் ராக்கெட் மற்றும் செயற்கை கோள்களில் பயணிக்கும் போதும் மட்டுமே பூமியின் வளைவை (curvature) நம்மால் பார்க்க முடியும்.
இவற்றை தவிர, மிக உயரமான வணிக வளாகங்களிலும் உயரமான கோபுரங்களிலும் இத்தகைய பூமியின் வளைவுகளை நம்மால் காண முடியும்.

விலையை கேட்டாலே தலை சுற்றும்
ஆனால் இப்படி ஒரு காட்சியை நம் வீட்டில் இருந்தே பார்த்தால் எப்படி இருக்கும். பூமியின் அழகை மொத்தமாக ரசிக்கும் வகையில் அமைந்து இருக்கும் இத்தகைய மெய்சிலிர்க்கும் காட்சிகளை நம்மால் நமது வீட்டில் இருந்தே பார்க்க முடிந்தால் எப்படி இருக்கும். நினைத்தாலே மெய் சிலிர்க்கிறது அல்லவா.. ஆனால் அதை மெய்பிக்கும் வகையில் தான் கனவு இல்லத்தை அமெரிக்க நிறுவனம் ஒன்று கட்டியுள்ளது. இந்த கட்டிடத்தில் ஏறி பார்த்தால் மட்டும் அல்ல... விலையை கேட்டாலே பலருக்கும் தலை சுற்றும்.

17 ஆயிரம் கோடி
உலகிலேயே மிகவும் காஸ்ட்லியான வீடு இதுதானாம். நியூயார்க்கில் உள்ள செண்ட்ரல் பார்க் டவர் என்ற இந்த அடுக்குமாடி குடியிருப்பு கட்டிடத்தில் 129 வது மாடியில் இருந்து 131 மாடி வரை உள்ள வீடுகளில் இந்த காட்சிகளை காண முடியுமாம். இதன் விலை எவ்வளவு தெரியுமா 220 மில்லியன் டாலர். நம்ம ஊர் மதிப்புக்கு சொல்ல வேண்டும் என்றால் சுமார் 17 ஆயிரம் கோடியாகும். அமெரிக்க ஹவுசிங் மார்க்கெட் லிஸ்டில் அதிக மதிப்பு கொண்டதாக இந்த கட்டிடம் தான் பட்டியலிடப்பட்டுள்ளது.

உலகிலேயே உயரமான கட்டிடம்
இந்த குடியிருப்பு கட்டிடத்தில் இரண்டு நீச்சல் குளங்கள் உள்ளது. இதேபோல் இந்த வீட்டில் இருந்தபடி 360 டிகிரி கோணத்திலும் பரந்த காட்சிகளை காண முடியும், உலகின் மிக உயரமான கட்டிடங்களின் பட்டியலில் இதுதான் முதன்மை வகிக்கிறது. 7 பெட்ரூம்கள், 8 பாத்ரூம்கள், நடன அரங்குகள் என சகல வசதிகளுடன் இந்த வீடு வழங்கப்படுகிறது.

1416 அடி உயரம்
அதுபோக இந்த அடுக்குமாடி குடியிருப்பில் வசிப்பவர்களுக்காக கான்பரன்ஸ் ரூம், ஸ்பா, விளையாட்டு அரங்குகள் என இங்கு இல்லாத வசதிகளே இல்லை எனலாம். அத்தனை வசதிகளையும் கொண்ட இந்த அடுக்குமாடி குடியிருப்பு பற்றித்தான் சமூக வலைத்தளங்களில் பலரும் வியப்புடன் பேசி வருகின்றனர். உலகிலேயே மிகவும் உயரமான குடியிருப்பு கட்டிடமான இதன் உயரம் தோராயமாக 1,416 அடி உயரம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது! -
தவெக பெண் எம்எல்ஏவை அவமானப்படுத்திய சென்னை மேயர் பிரியா? குத்துவிளக்கேற்றுவதில் வெடித்த மோதல்! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்!












Click it and Unblock the Notifications