டீச்சரோடு கசமுசா பண்ண மகன்.. "ஆப்" ரூபத்தில் வந்த ஆப்பு.. தாயிடம் சிக்கியது எப்படி?
வாஷிங்டன்: அமெரிக்காவின் டீச்சருடன் காரில் உடலுறவில் இருந்த மகனை அவரது தாய் ‛‛ஆப்'' ஒன்றின் மூலம் கண்டுபிடித்ததோடு, டீச்சரை போலீசில் சிக்க வைத்த சம்பவம் நடந்துள்ளது.
அமெரிக்காவை சேர்ந்தவர் கேப்ரியலா கார்டயா நியூஃபெல்ட். இவருக்கு வயது 26. இவர் அமெரிக்காவின் தெற்கு மெக்லென்பர்க் உயர்நிலைப் பள்ளியில் ஆசிரியையாக பணியாற்றி வருகிறார். மாணவர்களுக்கு அறிவியல் பாடம் நடத்தி வருகிறார்.

அமெரிக்காவில் உள்ள பள்ளியில் 18 வயது நிரம்பிய மாணவர் ஒருவர் படித்து வருகிறார். இவர் பள்ளி முடிந்த பிறகும், விடுமுறை நாட்களிலும் ரக்பி விளையாட்டுக்கான பயிற்சியில் ஈடுபட்டு வருகிறார். இந்நிலையில் தான் சமீபகாலமாக மாணவரின் நடத்தையில் மாற்றம் ஏற்பட்டது.
அதாவது வீட்டில் இருந்து ரக்பி பயிற்சி எடுக்க செல்வதாக கூறி விட்டு செல்லும் மாணவன் பயிற்சிக்கு செல்லாமல் இருந்துள்ளார். இதுபற்றி பயிற்சியாளர் சார்பில் மாணவனின் தாய்க்கு புகாராக வந்தது. இதையடுத்து அவர் தனது மகனிடம் கேட்டுள்ளார். ஆனால் அவர் அதுபற்றிய தகவல்களை சொல்லாமல் மறைத்துள்ளார்.
இதனால் மாணவனான தனது மகன் மீது அவரது தாய்க்கு சந்தேகம் எழுந்தது. எங்கே தனது மகன் தவறான பாதையில் சென்றுவிடுவானோ என அவர் பயந்தார். இத்தகைய சூழலில் தான் அவரது காதுக்கு ஒரு தகவல் வந்தது. அதாவது தெற்கு மெக்லென்பர்க் உயர்நிலைப் பள்ளியில் அறிவியல் ஆசிரியையாக பணியாற்றி வரும் 26 வயது நிரம்பிய கேப்ரியலா கார்டயா நியூஃபெல்ட்டும், மாணவருக்கும் இடையே தகாத உறவு இருப்பதாக அவருக்கு ஒரு தகவல் வந்தது. இதனை கேட்டு அவர் மனம் உடைந்து போனார்.
இதையடுத்து தனது மகனின் நடவடிக்கையை கண்காணிக்க அவர் முடிவு செய்தார். ஆனால் மகனை பாலோ செய்து பின்னால் செல்வது என்பது சரியாக இருக்காது. மேலும் அது முடியாத காரியம் என்பதை அவர் உணர்ந்தார். இந்த வேளையில் தான் அவருக்கு Life360 என்ற செயலி (ஆப்) பற்றிய விபரம் கிடைத்தது. இந்த செயலியை குடும்பத்தினர், நண்பர்கள் அனைவரும் பயன்படுத்தும்போது அவர்கள் இருக்கும் லோகேஷனை எளிமையாக தெரிந்து கொள்ள முடியும். மக்களின் பாதுகாப்புக்காக இந்த செயலி உருவாக்கப்பட்டு உள்ளது.
இத்தகைய சூழலில் தான் Life 360 செயலியை வைத்து தனது மகனின் இருப்பிடத்தை கண்காணிக்க அந்த தாய் முடிவு செய்தார். அதன்படி மகனின் செல்போனில் அவர் அந்த செயலியை டவுன்லோட் செய்து லோகேஷனை ஆன் செய்து வைத்தார். இதன்மூலம் மகன் எங்கு செல்கிறான்? என்பதை அவர் வீட்டில் இருந்தபடியே கண்காணிக்க தொடங்கினார். இந்நிலையில் தான் சம்பவத்தன்று அவரது மகன் ரக்பி பயிற்சியை புறக்கணித்து பார்க் ரோட்டில் உள்ள பூங்காவுக்கு சென்றது தெரியவந்தது.
இதையடுத்து அவரது தாய் உடனடியாக பார்க் ரோட்டில் உள்ள பூங்காவுக்கு சென்றார். அங்கு தனியாக கார் ஒன்று நின்றது. அந்த காரின் உள்ளே எட்டிப்பார்த்தார். அப்போது காரின் உள்ளே அவரது மகன், பெண் ஒருவருடன் தகாத உறவில் இருந்தார். இதை பார்த்து ஷாக்கான மாணவனின் தாய் உடனடியாக அதனை தனது செல்போனில் வீடியோவாக பதிவு செய்தார். மேலும் காரின் பதிவெண் உள்ளிட்டவற்றையும் அவர் செல்போனில் வீடியோ மற்றும் போட்டாவாக எடுத்து கொண்டார்.
அதன்பிறகு இந்த ஆதாரங்களோடு அவர் பள்ளி நிர்வாகம் மற்றும் போலீசில் ஆசிரியை கேப்ரியலா கார்டயா நியூஃபெல்ட் மீது புகார் அளித்தார். இதுபற்றி விசாரணை நடத்திய பள்ளி நிர்வாகம் அவரை பணியில் இருந்து நீக்கியது. அதோடு போலீசும் கேப்ரியலா கார்டயா நியூஃபெல்ட்டை கைது செய்து சிறையில் அடைத்தது.












Click it and Unblock the Notifications