உறவினர்கள் 3 பேரை கொலை செய்து, அதில் ஒருவரின் இதயத்தை சமைத்து சாப்பிட்ட சைக்கோ கொலைகாரன்!
வாஷிங்டன்: அமெரிக்காவில் 3 கொலைகளை செய்த ஒருவர் அதில் ஒருவரின் இதயத்தை தனியே எடுத்து சமைத்து சாப்பிட்ட சம்பவம் நடந்துள்ளது.
இதில் 2 பேரை கொலை செய்வதற்கு முன்பு அவர்களுக்கும் சமைத்த இதயத்தை சாப்பிட கொடுத்துள்ளார் இந்த கொடூர கொலைகாரன்.

அமெரிக்காவின் ஓக்லஹோமா மாகாணத்தை சேர்ந்தவர் லாரன்ஸ் பால் ஆண்டர்சன். போதைப்பொருள் குற்றச்சாட்டில் 2017 ஆம் ஆண்டில் அவருக்கு 20 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது. இந்த நிலையில் லாரன்ஸ் பால் ஆண்டர்சன் சிறையில் இருந்து விடுவிக்கப்பட்டார்.
பின்னர் வீட்டுக்கு வந்த லாரன்ஸ் பால் ஆண்டர்சன் பக்கத்து வீட்டில் உள்ள தனது உறவினரை அடித்துக் கொலை செய்தார். பின்னர் வெறி அடங்காத பால் ஆண்டர்சன், அவரது உடலில் இருந்து இதயத்தை தனியே எடுத்தார். பின்னர் தனது மாமா வீட்டுக்கு சென்ற அவர் அங்கு உருளைக்கிழங்குடன் கொலை செய்யப்பட்டவரின் இதயத்தை சமைத்து மாமாவுக்கும், அவரது மனைவிக்கும் கொடுத்துள்ளார்.அவரும் சாப்பிட்டுள்ளார்.
தொடர்ந்து தனது மாமாவையும், அவரது நான்கு வயது பேத்தியையும் பால் ஆண்டர்சன் கொடுரமாக கொலை செய்தார். அவரது மனைவியை அவர் கடுமையாக தாக்கி காயப்படுத்தியதாகவும் தெரிகிறது. இந்த கொடூர கொலை சம்பவம் அமெரிக்காவில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. தான் செய்த செயல்கள் அனைத்தையும் நீதிமன்றத்தில் பால் ஆண்டர்சன் ஒப்புக்கொண்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
-
அண்ணாமலை கடும் ‘அப்செட்’.. தேர்தலில் போட்டியிட மறுப்பது ஏன்? எடப்பாடியால் கலங்கும் பாஜக! 2 மேட்டர் -
கோவையில் 2022ல் சரவணம்பட்டியில் இடம் வாங்கி போட்டிருந்தால் இன்று நீங்கள் கோடீஸ்வரன்.. மாறிய மதிப்பு -
சென்னையில் அதிமுகவுக்காக இறங்கும் 13 பேர்.. 3 பெண்களுக்கு வாய்ப்பு.. கொளத்தூரில் யாருக்கு வாய்ப்பு? -
இந்தியாவை உலுக்கும் "ஜாம்பி" போதை மருந்து.. 2 மணி நேரமா இன்ச் கூட அசையல.. திகிலூட்டும் வீடியோ! -
"பதிலடி தாக்குதல் நடத்துவோம்.." ஈரானுக்கு எதிராக ஒன்றுகூடும் வளைகுடா.. 6 நாடுகள் கூட்டாக அறிக்கை -
ஆபரண தங்கம் 6 சவரன் 15 வருடம் முன் வாங்கினீங்களா? அப்போ ₹1 லட்சம், இப்ப ரேட் தெரிஞ்சா ஷாக் ஆவீங்க -
"எங்க இப்போ கை வை பார்க்கலாம்.." ஹார்முஸை முடக்கிய ஈரான் தளபதி படுகொலை.. இஸ்ரேல் அறிவிப்பு! -
தோழமை கட்சிகள்.. காங்கிரஸ் பெயரை தவிர்த்த ஸ்டாலின்.. கோபம் உச்சத்தில்.. சத்தமின்றி சொன்ன மெசேஜ்! -
பழம் விழுந்தால் லாபம் எடப்பாடி பழனிசாமிக்கு.. அதிமுக வைத்த செக்கில் சிக்கிய கூட்டணி, திமுக விஐபிகள்! -
ஸ்டாலின் VS எடப்பாடி VS விஜய்.. எந்தெந்த ஜாதியினர் யாருக்கு ஆதரவு! News 18 சர்வே ரிசல்ட் இதோ -
சொத்து வைத்திருப்போர் அலர்ட்! 5 நாளில் இதை செய்யாவிட்டால் நில பத்திரப்பதிவில் லட்சக்கணக்கில் நஷ்டம்? -
"கோடம்பாக்கம் ஏரியா.. ஓட்டு கேட்டு வரியா".. விஜய் பாடலுக்கு நடனமாடிய அரசு பள்ளி தலைமையாசிரியை.. இப்போ வேலை போச்சே












Click it and Unblock the Notifications