Lip Filler: அழகான உதடுக்கு ஆசைப்பட்ட மாடல் அழகி.. லிப்ஸ் பெரிதாக்கி படுபயங்கரத்தால் கதறும் பெண்
வாஷிங்டன்: அமெரிக்காவை சேர்ந்த சமூக ஊடகவியலாளரும் மாடலுமான ஜெசிகா புர்கோ தனது உதட்டை அழகாக்க மேற்கொள்ளப்பட்ட சிகிச்சையால் அவரது உதடுகள் வீங்கி காணப்படுகிறது.
ஆண்டவன் படைத்த ஒவ்வொரு படைப்புகளும் அழகுதான். அது ஈ, எறும்புகளில் ஆரம்பித்து மனிதன் வரை எல்லாமே ஒவ்வொரு விதத்தில் அழகுதான். நம் மனம் நன்றாக இருந்தால் முகத்தில் அழகு தெரியும். அதுதான் அகத்தின் அழகு முகத்தில் தெரியும்.
அப்படிப்பட்ட அழகையே ஆபரேஷன் செய்து மாற்றும் செயல் அண்மைக்காலமாக நடந்து வருகிறது. அதாவது முகத்தை சீரமைப்பது, பற்களை சீரமைத்தல், மூக்கை ஆபரேஷன் செய்து சரி செய்தல், இப்படியாக அறுவை சிகிச்சை மூலம் சில சீரமைப்புகள் செய்யப்படுகின்றன.

இவையெல்லாம் பலனளிக்கிறதா என்றால் அதை செய்து கொண்டவர்கள் ஆஹா ஓஹோ என்பார்கள். தோலை வெண்மையாக்கும் சிகிச்சை. வழுக்கை தலையில் முடி வளர வைக்கும் சிகிச்சை. சிலர் மார்பகங்களை பெரிதாக்கும் முயற்சியையும் செய்கிறார்கள். உடலை கட்டுக்கோப்பாக வைத்திருக்க ஸ்டீராய்டுகள் எடுத்துக் கொள்ளப்படுகின்றன. இந்த மருந்துகள் எடுத்துக் கொள்வது ஆபத்திலும் ஆபத்து.
அது போல் உடலில் ஆங்காங்கே தொங்கும் சதைகளை சீரமைக்கிறேன் என்ற பெயரில் ஒரு அறுவை சிகிச்சையை செய்து அதில் உயிரிழப்புகள் வரை ஏற்படுகிறது. உடற்பயிற்சிகளை செய்து உடலை குறைப்பதற்கு கஷ்டப்பட்டு கொண்டு சில மணி நேரங்களில் உடலில் தங்கியுள்ள கொழுப்புகளை நீக்கும் சிகிச்சை மேற்கொள்ளப்படுகிறது.
இந்த சிகிச்சைகளால் பயனடைந்தவர்களை விட பாதிக்கப்பட்டவர்கள் குறைந்த விகிதம் இருந்தாலும் பாதிப்பு பாதிப்புதானே! அந்த வகையில் உதட்டை அழகுப்படுத்த கூட ஊசி வந்துவிட்டதாம். உதட்டில் ஸ்டீராய்டு கொண்டு ஊசியை செலுத்தினால் உதடு அழகாகவும் கவர்ச்சியாகவும் இருக்கிறதாம். உடல் பாகங்களில் வெளியே தெரிவதில் கவர்ச்சியான உறுப்பு உதடுகள்தான்.

அதில் ஒருவர் ஊசியை செலுத்தி என்ன பாடுபட்டுள்ளார் என்பதை பாருங்கள். அமெரிக்காவை சேர்ந்தவர் ஜெசிக்கா புர்கோ. இவர் சமூக ஊடகவியலாளர், மாடல் அழகியாகவும் உள்ளார். இவர் உதட்டை அழகாக்குவதற்காக லிப் ஃபில்லர் எனப்படும் சிகிச்சையை ஒரு மையத்தில் எடுத்துள்ளார். இதுவரை அவர் 6 முறை அந்த சிகிச்சையை எடுத்துள்ளார்.
இதனால் அவருக்கு மருத்துவர் போன் செய்து தற்போது மார்க்கெட்டில் புதிதாக லிப் பில்லர் வந்துள்ளது. அதை உங்களுக்கு இலவசமாக தருகிறேன், வாருங்கள் என கூறியுள்ளார், ஜெசிக்காவும் கூடுதல் அழகை பெறலாம் என்ற ஆசையுடன் மருத்துவமனைக்கு சென்றுள்ளார். அங்கு அந்த மருத்துவர் ஜெசிகாவுக்கு லிப் பில்லரை செலுத்தியுள்ளார்.
அவ்வாறு லிப் பில்லர் செலுத்திய சில மணித்துளிகளில் உதடுகள் வீங்கத் தொடங்கிவிட்டன. லேசாக வீங்கிய போது ஏதோ அலர்ஜி ஏற்பட்டுவிட்டது என்றுதான் நினைத்தாராம். ஆனால் நேரம் ஆக நேரம் ஆக திடீரென அளவுக்கு அதிகமாக பெரிதாகிவிட்டது. இதனால் அதிர்ச்சி அடைந்த ஜெசிகா வீடியோ வெளியிட்டு தனது மனக்குமுறலை கொட்டி தீர்த்துள்ளார்.

மேலும் இது போல் உதடு வீங்கியதுமே அந்த ஸ்டீராய்டு ஊசியை உதட்டில் செலுத்தவதை நிறுத்திக் கொண்டாராம். இதனால் உதடுகள் இயல்புநிலைக்கு திரும்பியது. ஜெசிகா தனக்கு ஏற்பட்ட அனுபவங்களை வெளியிட்டுள்ளார். இந்த வீடியோ 8 மில்லியன் பார்வைகளை பெற்றுள்ளது. மேலும் யாராவது இலவசம் என சொன்னால் தயவு செய்து யாரும் அதை நம்பி சிகிச்சை எடுத்துக் கொள்ள வேண்டாம் என அறிவுறுத்தியுள்ளார்.
ஒரு அழகு கலை சிகிச்சையை செய்வதற்கு முன்பு அதுகுறித்து முழுமையான விஷயங்களை தெரிந்து கொள்ளுங்கள் என்றும் தெரிவித்துள்ளார். மேலும் அவரது வீடியோவை பார்த்த நெட்டிசன்கள் கார்ட்டூன் கேரக்டரில் வருவது போல் இருப்பதாக கிண்டல் செய்துள்ளனர். சிலர் இது போன்ற சிகிச்சைகளை மேற்கொள்ள வேண்டாம் என்றும் அறிவுறுத்தியுள்ளனர். மேலும் இந்த சம்பவத்திற்கு யார் காரணமாக இருந்தாலும் அவர்களுக்கு தண்டனை பெற்று தர கோரிக்கைகள் எழுந்துள்ளன.
-
"5 vs 20.." விட்டு கொடுக்காத ஈரான்.. விடாப்பிடியாக இழுக்கும் அமெரிக்கா.. அடுத்து என்ன நடக்கும்? -
ஈரான் போர் ஆரம்பித்த பின் முதல் முறை நல்ல சம்பவம்.. ஹார்முஸை கடந்த 2 அமெரிக்க போர்க்கப்பல்கள் -
அமெரிக்காவின் 'ஹார்முஸ்' முற்றுகையில் இங்கிலாந்து பங்கேற்காது.. ட்ரம்ப்புக்கு 'நோ' சொன்ன பிரிட்டன் -
அமெரிக்கா vs ஈரான்.. இஸ்லாமாபாத்தில் நடக்கும் 'மைண்ட் கேம்'. மிரட்டிய ட்ரம்ப்! பேச்சுவார்த்தை தோல்வி -
போரால் முடியாததை பேச்சுவார்த்தையில் கேட்குது அமெரிக்கா.. எப்படி சம்மதிக்க முடியும்.. ஈரான் விளக்கம் -
டிரம்ப்பிற்கு பதிலடி கொடுக்க வரும் புதின்? அமெரிக்காவுக்கு ‘செக்’ வைத்த ரஷ்யா! உலக போர் ஆபத்து? -
கிளைமாக்ஸ் இல்லாத இஸ்லாமாபாத் ‘த்ரில்லர்’: ரிட்டர்ன் ஆன ஜே.டி. வேன்ஸ்.. ஈரான் போர் முடியாது? -
ஈரான் -அமெரிக்கா பேச்சுவார்த்தை! டெல்லிக்குக் கிடைக்காத பவர் பிளே! பாகிஸ்தான் தட்டி சென்றது எப்படி -
அதிபர் பதவியை இழக்கும் டிரம்ப்? களத்தில் இறங்கிய அந்த 70 பேர் + மாஜி அமெரிக்க உளவு துறை தலைவர்! -
இஸ்லாமாபாத் டூ இஸ்ரேல்! இடையே வந்த அந்த ஒரு போன் கால்! ஈரான்-அமெரிக்கா பேச்சுவார்த்தை பெயிலானது ஏன்? -
ஹார்முஸ் ஜலசந்தியில்.. அமெரிக்கப் படை முற்றுகை.. ட்ரம்ப்பின் அதிரடி அறிவிப்பு.. உலகளவில் பதற்றம்! -
ஈரான் பிடிவாதம்.. விடாமல் காய் நகர்த்திய டிரம்ப்.. உலகையே உலுக்கிய அந்த 20 மணி நேரம்.. நடந்தது என்ன?












Click it and Unblock the Notifications