Video: வாங்க வாஷிங்டன் வரை வாக்கிங் போய்ட்டு வரலாம்.. பயணங்கள் முடிவதில்லை!
வாஷிங்டன்: மெட்ராஸை சுத்திப் பார்க்கப் போறேன்.. நிற்க நிற்க.. வாஷிங்டனை சுற்றிப் பார்க்கப் போறேன்.,. இப்படித்தான் மாற்றிப் பாட வேண்டும். அப்படி ஒரு அற்புத நகரம் வாஷிங்டன்.
வாசிங்டன் டி. சி. (வாஷிங்டன் டி. சி Washington, D.C.), முழுப்பெயர் வாஷிங்டன், கொலம்பியா மாவட்டம் (Washington, District of Columbia) அமெரிக்காவின் தலைநகரமாகும். இப் பெயர் அந்நாட்டில் ஏற்பட்ட அமெரிக்கப் புரட்சியைத் தலைமையேற்று நடத்திய ராணுவத் தலைவர் ஜார்ஜ் வாசிங்டன் நினைவாக இடப்பட்டது.

அமெரிக்காவில் பல நகரங்கள் வாஷிங்டன் என பெயரிடப்பட்டுள்ளதால் இதனைக் குறிக்க இந்த நகரத்தின் முந்தையப் பெயரான கொலம்பியா மாவட்டம் (District Of Columbia) என்பதன் சுருக்க வடிவமாக (DC - டிசி) என்ற ஒட்டுடன் அறியப்படுகிறது.
பயணங்கள் முடிவதில்லை பகுதியில் நம்ம அமெரிக்கா அதிபர் டிரம்ப் இருக்கும் இடமான வாஷிங்டன் இல் உள்ள வெள்ளை மாளிகையை சுற்றி பார்த்து விட்டோம். வாஷிங்டனில் சிறப்பு வாய்ந்த இடம் வெள்ளை மாளிகை என்பது உண்மை என்றாலும் அதையும் தாண்டி வாஷிங்டனில் சுற்றி பார்க்க இன்னும் நிறைய அற்புதமான இடங்கள் வெள்ளை மாளிகை அருகில் இருக்கின்றன. அதை பார்க்கலாம் இந்த வாரம் .
வாஷிங்டனில் சிறப்பு வாய்ந்த டைடல் நதி வெகு அழகாக இருக்கிறது . அந்த நதியை சுற்றிலும் இருக்கும் செர்ரி மரங்களை இன்னும் இன்னும் அழகாக்கி கொண்டிருக்கின்றன. அந்த நதியை சுற்றி அந்த நாட்டை ஆண்ட அதிபர்கள் பலருக்கு நினவான்கள் எழுப்பி இருக்கிறார்கள். அதில் சிறப்பு வாய்ந்தது ஆபிரகாம் லிஙகன் நினைவகம், ஜெபர்சன் நினைவகம், பிராங்கிளின் ரூஸ்வெல்ட் நினைவகம் , மார்ட்டின் லூதர் கிங் என்று நீண்டு கொண்டு போகிறது வரிசை.
அது மட்டுமா பிரமாண்டமாய் உயர்ந்து நிற்கிற வாஷிங்டன் மோமென்டம், இரண்டாம் உலகப் போர் நினைவு கட்டடம் என்று வெகு பிரமாண்டமாய் இருக்கிறது வாஷிங்டன் நகரம் . சரி ரொம்ப பரபரப்பா இருக்கிற வாஷிங்டன் தெருவில் நடைபோடும் அனுபவம் பெற அந்த அழகிய இடங்களை சுற்றி பார்க்க இந்த விடியோவை பாருங்க.
- Inkpena சஹாயா
-
ஈரானின் முதுகெலும்பில் தாக்கிய CENTCOM.. டிரம்ப் போட்டுக்கொடுத்த பிளான்..? கச்சிதமாக முடித்த US Army! -
Kuwait மீது திடீர் தாக்குதல் நடத்திய ஈரான்.. திரும்பும் பக்கமெல்லாம் ஏவுகணை சந்தம்.. பீதியில் மக்கள்! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல்












Click it and Unblock the Notifications