வாஷிங்டன் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

’எட்டு டாலர்’ எலான் மஸ்க்கின் சேட்டை! இயேசு கிறிஸ்துவுக்கு ட்விட்டரில் ப்ளூ டிக்! கோடான கோடி நன்றி!

Google Oneindia Tamil News

வாஷிங்டன் : நீண்ட இழுபறி பரபரப்புகளுக்குப் பிறகு ட்விட்டரை வாங்கி உள்ள டெஸ்லா நிறுவனத்தின் நிறுவனரும், அமெரிக்காவின் பெரும் பணக்காரருமான எலான் மஸ்க் ட்விட்டரில் அதிகாரப்பூர்வ கணக்குகளுக்கு வழங்கப்படும் புளூ டிக்கிற்கு எட்டு டாலர் கட்டணம் வசூலிக்கப்படும் என அறிவித்த நிலையில் இயேசு கிறிஸ்துவின் பெயரில் ஒருவர் ப்ளூ டிக் பெற்றிருக்கிறார்.

ட்விட்டர் நிறுவனம் மக்களின் கருத்துக்கு மதிப்பளிப்பது இல்லை எனவும் அதனை வாங்கப் போவதாகவும் ஸ்பேஸ் எக்ஸ், டெஸ்லா நிறுவனங்களின் தலைவரும் உலக அளவில் மிக பெரும் பணக்காரருமான எலான் மஸ்க் கூறி இருந்தார்.

ட்விட்டரில் கருத்து சுதந்திரத்திற்கு வாய்ப்பு கிடைக்கும் எனவும், எலான் மஸ்க் ட்விட்டரை வாங்குவது மிகப் பெரிய அளவில் மாற்றத்தை ஏற்படுத்தும் என பலரும் கூறி வந்தனர். ஆனால் இது உடனடியாக நடக்கவில்லை. நீண்ட இழுபறிக்குப் பிறகே இது நடந்தது.

உச்சக்கட்ட போட்டி.. தமிழகம் வரும் பிரதமர் மோடி.. ட்விட்டர் டிரெண்டில் #GoBackModi, #VanakkamModi..உச்சக்கட்ட போட்டி.. தமிழகம் வரும் பிரதமர் மோடி.. ட்விட்டர் டிரெண்டில் #GoBackModi, #VanakkamModi..

எலான் மஸ்க்

எலான் மஸ்க்

இன்று போய் நாளை வா கதையாக இன்றைக்கு நாளைக்கு என இழுத்துக் கொண்டிருந்த விவகாரத்தை முடித்து வைத்தார் எலான் மஸ்க். ட்விட்டரை வாங்க முடியாது என அவர் கூற, அந்நிறுவனம் நீதிமன்ற வழக்கு வரை சென்ற நிலையில் ஒரு வழியாக கடந்த சில தினங்களுக்கு முன்பு ட்விட்டரை வாங்கினார். மேலும் ட்விட்டர் நிறுவனத்தை கைப்பற்றிய கையோடு ட்விட்டரின் தலைமை செயல் அதிகாரி பாரக் அகர்வால், தலைமை நிதி அதிகாரி நெட் செகல், சட்ட அதிகாரி விஜயா கட்டே ஆகியோரை பணி நீக்கம் செய்தார்.

அதிரடி அறிவிப்பு

அதிரடி அறிவிப்பு

மேலும் ஒட்டுமொத்தமாக நிர்வாக குழுவையும் மாற்றியமைத்தார். அதோடு ஆயிரக்கணக்கான ஊழியர்களை பணி நீக்கம் செய்தது உலக அளவில் கடும் கண்டனங்களை பெற்றுக் கொடுத்தது. எலான் மஸ்க் அடுத்ததாக என்ன செய்யப்போகிறார் என அனைவரும் எதிர்பார்த்துக் கொண்டிருந்த நிலையில், அந்த அறிவிப்பு வந்தது.

ப்ளூ டிக் வசதி

ப்ளூ டிக் வசதி

ட்விட்டரில் அதிகாரப்பூர்வ கணக்குகளாக அடையாளப்படுத்த ப்ளூ டிக் வசதி வழங்கப்பட்டு வருகிறது. கடந்த காலங்களில் பிரபலம் மற்றும் ஃபாலோயர்களின் எண்ணிக்கை அடிப்படையில் வழங்கப்பட்ட நிலையில் தற்போது மாதம் 8 டாலர் கட்டணம் செலுத்துபவர்களுக்கு மட்டுமே ப்ளூ டிக் வசதி வழங்கப்படும் என எலான் மஸ்க் அதிரடியாக அறிவித்தார். இதற்கு உலக அளவில் கடும் கண்டனங்கள் எழுந்த நிலையில் வழக்கம்போல் அதனை கண்டு கொள்ளாத அவர் அதனை செயல்படுத்தியும் உள்ளார்.

இயேசு கிறிஸ்து

இயேசு கிறிஸ்து

அதே நேரத்தில் போலிக் கணக்குகளும் ப்ளூ டிக் உடன் இருப்பதாக புகார் எழுந்துள்ளது. ஏற்கனவே அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப்பின் பெயரில் போலி கணக்கு ஒன்று துவக்கப்பட்டுள்ள நிலையில் தற்போது இயேசு கிறிஸ்துவின் பெயரிலும் ப்ளூ டிக் கணக்கு ஒன்று தொடங்கப்பட்டிருக்கிறது. எட்டு டாலர் பணம் செலுத்திய நிலையில் அதற்கு ப்ளூ டிக் அங்கீகாரமும் வழங்கப்பட்டுள்ளது. அதில் மேலும், கார்பெண்டர், ஹீலர், கடவுள், இஸ்ரேல் என உள்ள அந்த கணக்குக்கு ப்ளூ டிக் வழங்கப்பட்டுள்ளது. இதனால் பல பிரச்சினைகள் வரும் என எலான் மஸ்க்கை விமர்சித்து வருகின்றனர் நெட்டிசன்கள்

English summary
America's richest man Elon Musk has announced on Twitter that an eight dollar fee will be charged for Blue Ticks issued to official accounts, one person has received a Blue Tick in the name of Jesus Christ.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X