Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

அமெரிக்க அதிபர் தேர்தலில் சட்டென மாறிய காட்சிகள்.. டிரம்பை முந்திய கமலா ஹாரிஸ்.. கணிப்பில் தகவல்

Subscribe to Oneindia Tamil

வாஷிங்டன்: அமெரிக்க அதிபர் தேர்தல் ரேஸில், குடியரசுக் கட்சி சார்பில் போட்டியிடும் டொனால்டு டிரம்பை விட , ஜனநாயக கட்சி சார்பில் போட்டியிடும் கமலா ஹாரிஸ் முன்னிலையில் உள்ளதாக ராய்ட்டர்ஸ் கருத்து கணிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அமெரிக்க அதிபர் தேர்தல் இந்த ஆண்டு நவம்பர் 5-ம் தேதி நடைபெற போகிறது. இதில், குடியரசுக் கட்சி சார்பில் முன்னாள் அதிபர் டொனால்டு ட்ரம்ப் போட்டியிடுகிறார். ஜனநாயக கட்சி சார்பில் தற்போதைய அதிபர் ஜோ பைடன் போட்டியில் இருந்தார். ஆனால் பலரும் உடல்நிலையை காரணம் காட்டி எதிர்ப்பு தெரிவித்ததால், திடீரென போட்டியிலிருந்து விலகுவதாக பைடன் கடந்த ஜூலை 21-ம் தேதி அறிவித்தார்.

us election Kamala Harris Donald Trump

அதேநேரம் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள ஜோ பைடன் வீட்டில் தன்னை தனிமைப்படுத்திக் கொண்ட நிலையில், ஜனநாயக கட்சி சார்பில் போட்டியிட துணை அதிபர் கமலா ஹாரிஸுக்கு அவர் ஆதரவு தெரிவித்தார். இது குறித்து எக்ஸ் தளத்தில் அவர் வெளியிட்ட பதிவில், 'அதிபர் தேர்தலில் மீண்டும் போட்டியிட வேண்டும் என்பதே என்னுடைய நோக்கம். ஆனால், ஜனநாயக கட்சியின் நலன், நாட்டின் நலன் ஆகியவற்றை கருத்தில் கொண்டு, அதிபர் தேர்தலிலிருந்து விலகுகிறேன். எனது முடிவு தொடர்பாக நாட்டு மக்களிடையே விரைவில் உரையாற்றுவேன்' என்று குறிப்பிட்டிருந்தார்.

எனினும் ஜனநாயக கட்சியின் விதிகள்படி, போட்டியிலிருந்து விலகும் ஜோ பைடனால், அடுத்த அதிபர் வேட்பாளராக யார் இருப்பார் என்பதைக் கூற முடியாது. எனவே, அடுத்த வேட்பாளர் யார் என்பதை முடிவு செய்வதற்கு ஆகஸ்ட் 19 முதல் 22-ம் தேதிவரை சிகாகோவில் நடைபெறும் கட்சி நிர்வாகிகள் கூட்டத்தில் முடிவு செய்யப்படும் என்று தெரிகிறது .

தற்போதைய நிலையில், 27 மாகாணங்களில் உள்ள பிரதிநிதிகள் தங்களின் ஒருமித்த ஆதரவை கமலா ஹாரிஸுக்கு வழங்குவதாக அறிக்கை வெளியிட்டிருந்தனர். அதேபோல் பைடன் விலகுவதாக அறிவிப்பு வெளியிட்ட சூழலில், லட்சக்கணக்கான டாலர்கள் கமலா ஹாரிஸின் பரப்புரைக்கு நன்கொடையாக வந்து குவிந்தது.

இந்நிலையில் கமலா ஹாரிஸ் அதிகாரப்பூர்வமாக ஜனநாயக கட்சி சார்பில் வேட்பாளராக அறிவிக்கப்படவில்லை என்றாலும், அவர் தான் ரேஸில் முன்னிலையில் இருக்கிறார். அதிபர் ஜோ பைடன் போட்டியில் இருந்து விலகிய பின்னர், குடியரசுக் கட்சியின் டொனால்ட் டிரம்பை விட துணை அதிபர் கமலா ஹாரிஸ் இரண்டு சதவீதம் அதிகமான புள்ளிகள் முன்னிலை பெற்றுள்ளதாக ராய்ட்டர்ஸ்/இப்சோஸ் கருத்துக் கணிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக கடந்த வார வாக்கெடுப்பில் டிரம்பிற்கு எதிராக போட்டியில் பைடன் இரண்டு-புள்ளி குறைவாக இருந்தார். இப்போது அதே பாணியில் கமலா ஹாரிஸ் உடன் ஒப்பிடும் டிரம்ப் இரண்டு புள்ளிகள் குறைவாக இருக்கிறார். திங்கள் மற்றும் செவ்வாய்கிழமைகளில் ராய்ட்டர்ஸ்/இப்சோஸ் ஆல் நடத்தப்பட்ட புதிய கருத்துக் கணிப்பில் இந்த விவரம் தெரியவந்துள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+