ரன்வீருக்கு ஆதரவு?.. சூப்பர் மார்க்கெட்டில் உடம்பில் ஒட்டுத் துணியில்லாமல் சுற்றிய பிரபல நடிகை

Subscribe to Oneindia Tamil

வாஷிங்டன்: பாலிவுட் நடிகர் ரன்வீர் சிங்கிற்கு ஆதரவு அளிக்கும் வகையில் ஹாலிவுட்டை சேர்ந்த மாடல் அழகி அமண்டா செர்னி சூப்பர் மார்க்கெட் ஒன்றில் ஆடைகளை நீக்கிவிட்டு நிர்வாணமாக சுற்றி வந்த வீடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கேரளாவில் சில வாரங்களுக்கு முன்பு பள்ளி குழந்தைகள் முன்பு பேன்ட்டை நீக்கி தவறான சமிக்ஞை செய்ததாக மலையாள நடிகர் ஸ்ரீஜித் ரவியை போலீஸார் கைது செய்தனர். மேலும் அவர் தனக்கு ஒரு மன நோய் இருப்பதால் அவ்வாறு செய்ததாக தெரிவித்திருந்தார்.

இதையடுத்து அவர் நீதிமன்றத்தில் ஜாமீன் பெற்று வெளியே உள்ளார். இந்த நிலையில் அண்மைக்காலமாக சில நடிகர்கள் நிர்வாண போஸ் கொடுத்து புகைப்படங்களை எடுத்து சமூகவலைதளங்களில் வெளியிட்டு வருகிறார்கள்.

நடிகர் ரன்வீர் சிங்

நடிகர் ரன்வீர் சிங்

அந்த வகையில் ஹிந்தி நடிகர் ரன்வீர் சிங் ஆடை இல்லாமல் நிர்வாணமாக போஸ் கொடுத்து புகைப்படங்களை சமூகவலைதளங்களில் வெளியிட்டிருந்தார். இந்த புகைப்படங்கள் பெரும் சர்ச்சையானது. பெண்கள் மனதை ரன்வீர் புண்படுத்தி தவறான முன்னுதாரணமாக விளங்கி விட்டார் என அவர் மீது போலீஸில் புகார்கள் எழுந்தன.

 ரன்வீருக்கு ஆடைகள் அனுப்பும் போராட்டம்

ரன்வீருக்கு ஆடைகள் அனுப்பும் போராட்டம்

இந்த நிலையில் ரன்வீருக்கு ஆடைகள் அனுப்பும் போராட்டங்களும் நடந்தன. ரன்வீர் சிங்கின் போட்டோ ஷூட்டை அலியா பட், வித்யா பாலன், ஜான்வி கபூர் உள்ளிட்டோர் ஆதரவு தெரிவித்திருந்தனர். இவரை போல் விஷ்ணு விஷாலும் நிர்வாண புகைப்படத்தை போட்டு ரன்வீருக்கு ஆதரவு என்ற தோற்றத்தை உருவாக்கிவிட்டார்.

விஜய் தேவரகொண்டா

விஜய் தேவரகொண்டா

அது போல் நடிகர் விஜய் தேவரகொண்டாவும் தான் நிர்வாணமாக நடிக்க தயாராக இருப்பதாகவும் தெரிவித்திருந்தார். இந்த நிலையில் நிறைய பேர் ரன்வீர் சிங்கின் நிர்வாண போட்டோ ஷூட் தவறில்லை என்பதை போல் பேசி வருகிறார்கள். அந்த வகையில் அமெரிக்காவின் மாடல் அழகி ஒருவரும் ரன்பீருக்கு ஆதரவாக ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளார்.

மாடல் அழகி

மாடல் அழகி

மாடல் அழகி அமண்டா செர்னி ஒரு சூப்பர் மார்க்கெட்டில் இருக்கிறார். அப்போது அவருக்கு ஒரு போன் வருகிறது. உடனே கோபமடையும் அவர் தனது ஆடைகளை கழற்றி நிர்வாணமாக அந்த சூப்பர் மார்க்கெட்டில் வலம் வருகிறார். ஜூஸ் இருக்கும் செக்ஷன், கேக் விற்பனையகம் என நிர்வாணமாக நிற்கிறார். கண்ணாடியின் உள்பக்கமாக நின்றும் உடம்பில் ஒட்டுத்துணியில்லாமல் போஸ் கொடுத்துள்ளார். இதை வீடியோவாக எடுத்து தனது ட்விட்டரிலும் அமண்டா போட்டுள்ளார். இதை பார்த்துவிட்டு பலர் அந்த நடிகைக்கு கண்டனம் தெரிவிக்கிறார்கள். மேலும் ரன்வீருக்கு நீதி வேண்டும் என கூறி கேள்விக்குறியையும் அந்த நடிகை போட்டுள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+