அமெரிக்காவின் பிரபல ஆபாச பட நடிகை மர்மமான முறையில் மரணம்! 3 மாதங்களில் 4 ஆபாச நடிகைகள் உயிரிழப்பு
வாஷிங்டன்: அமெரிக்காவைச் சேர்ந்த பிரபல ஆபாசப் பட நடிகை சோபியா லியோன் கடந்த சில நாட்களுக்கு முன்பு எதிர்பாராத விதமாக திடீரென உயிரிழந்துள்ளார்.
அமெரிக்காவைப் பொறுத்தவரை அங்கே ஆபாசப்பட துறை என்பது மிகப் பெரியது. பலரும் அங்கே ஆபாசப் படங்களில் நடித்து நல்ல வருமானத்தை ஈட்டுகிறார்கள். அதிலும் கொரோனா காலத்தில் பலரும் இதுபோன்ற ஆபாசப் படங்களில் நடிக்கத் தொடங்கியதாகக் கூறப்படுகிறது.

இருப்பினும், கடந்த சில மாதங்களாகவே ஆபாசப் பட நடிகைகள் மர்மமான முறையில் உயிரிழப்பது தொடர்கதையாகி வருகிறது. அதுபோன்ற ஒரு சம்பவம் தான் இப்போது நடந்துள்ளது.
ஆபாசப் பட நட்சத்திரம்: இதற்கிடையே அமெரிக்காவில் வசித்து வந்த பிரபல ஆபாசப் பட நட்சத்திரமான சோபியா லியோன் இந்த மாத தொடக்கத்தில் தனது வீட்டில் மயக்கமடைந்த நிலையில், மீட்கப்பட்டுள்ளார். அவருக்குத் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்ட போதிலும் அவரை காப்பாற்ற முடியவில்லை என்றும் அவர் உயிரிழந்ததாகவும் அவரது வளர்ப்புத் தந்தை மைக் ரோமெரோ அறிவித்துள்ளார். உயிரிழந்த சோபியா லியோனுக்கு வயது வெறும் 26 ஆகும்.
கடந்த மார்ச் 1ஆம் தேதி சோபியா அமெரிக்காவில் உள்ள அவரது குடியிருப்பில் மயக்கமடைந்துள்ளார். அவரது அவரது குடும்பத்தினர் தான் அவரை முதலில் கண்டறிந்துள்ளனர். இந்தச் சூழலில் தான் அவர் உயிரிழந்துவிட்டதாக அவரது தந்தை மைக் ரோமெரோ அறிவித்துள்ளார். மேலும், சோபியாவின் இறுதிச் சடங்கிற்கு நிதி கேட்டும் அவர் ஆன்லைனில் முறையிட்டுள்ளார்.
உயிரிழப்பு: இது குறித்து அவர் கூறுகையில், "அவரது தாய் மற்றும் குடும்பத்தினர் சார்பாக, எங்கள் அன்பான சோபியாவின் காலமான செய்தியை நான் கனத்த இதயத்துடன் தெரிவித்துக் கொள்கிறேன். சோபியாவின் திடீர் இழப்பு அவரது குடும்பத்தினருக்கும் நண்பர்களுக்கும் பேரிழப்பாகும். சோபியா இப்படி எதிர்பாராத உயிரிழப்பார் என்று நாங்கள் நினைக்கவில்லை. இதனால் அவரது குடும்பத்தினர் கடுமையான நிதிச்சுமையை எதிர்கொண்டுள்ளனர். மரணத்திற்கான காரணம் குறித்து போலீசார் விசாரித்து வருகிறார்கள்" என்றார்.
அவரது மாடலிங் நிறுவனமான 101 மாடலிங் என்ற நிறுவனமும் அவர் உயிரிழந்துள்ளதை உறுதி செய்துள்ளது. இது தொடர்பாக அவர்கள் வெளியிட்டுள்ள அறிவிப்பில், "சோபியா லியோன் உயிரிழந்த செய்தி எங்கள் இதயத்தை உடைத்துவிட்டது. அவர் நல்ல நபர். அவரது குடும்பத்தினர் நிதி திரட்டி வருகிறார்கள். உங்களால் முடிந்த நிதியை நீங்கள் அளிக்கலாம்" என்று கூறப்பட்டுள்ளார்.
என்ன நடந்தது: அவர் தற்கொலை செய்து கொள்ளவில்லை என்று என்பதை அவரது மாலடிங்க நிறுவனம் உறுதி செய்துள்ளது. அதேநேரம் வெளியே இருந்து வந்து யாராவது அவரை கொலை செய்து இருக்கலாம் என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். போலீசார் தரப்பில் இதுவரை இந்த குற்றச்சம்பவம் குறித்து எந்தவொரு தகவலும் இல்லை. கடந்த 1997 ஜூன் 10ஆம் தேதி பிறந்த சோபியா லியோன், தனது 18 வயதில் ஆபாசப் படங்களில் நடிக்கத் தொடங்கினார்.
அமெரிக்காவில் கடந்த சில மாதங்களாகவே ஆபாசப் பட நடிகைகள் மர்மமான முறையில் உயிரிழப்பது தொடர்கதையாகி வருகிறது. கடந்த 3 மாதங்களில் உயிரிழக்கும் 4ஆவது ஆபாசப் பட நடிகை இவர் ஆவர். காக்னி லின் கார்ட்டர், ஜெஸ்ஸி ஜேன் மற்றும் தைனா ஃபீல்ட்ஸ் ஆகியோர் ஏற்கனவே சில வாரங்களில் மர்மமான முறையில் உயிரிழந்துள்ளது குறிப்பிடத்தக்கது. இப்படி ஆபாசப் பட நட்சத்திரங்கள் தொடர்ந்து உயிரிழப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
-
அமெரிக்காவின் புதிய வரி.. இந்தியாவுக்கு சுத்தி சுத்தி ஏகப்பட்ட 'அடி'.. திருப்பூர் மட்டும் எஸ்கேப்! -
இந்தியா மீது 12.5% கூடுதல் வரி விதிக்கும் டிரம்ப்.. பூதாகரமாக வெடிக்கும் Section 301 பிரச்சனை! -
அமெரிக்காவில் ஹைதராபாத் இளைஞர் ஜாலி சுற்றுலா.. 3 பேரை காப்பாற்றியவருக்கு கனவிலும் நினைக்காத சம்பவம் -
இந்தியர்களுக்கு நிம்மதி! இனி அமெரிக்காவை விட்டு வெளியேற தேவையில்லை! கிரீன் கார்டு விதிகளில் விளக்கம் -
கதறும் கராச்சி.. குடிநீர், மின்சாரம், கேஸ் எதுவும் இல்லை.. சிந்து நதியை நிறுத்தியதால் நிலைமை மோசம் -
ஜப்பானில் பாகிஸ்தான் கட்டிய மசூதி.. இடிக்க அதிரடியாக உத்தரவிட்ட அதிகாரிகள்.. என்ன காரணம்? -
மீண்டும் வெடிக்கும் போர்.. இரவோடு இரவாக பாய்ந்த ஏவுகணைகள்! அமெரிக்க தளங்களை குறிவைத்து தூக்கிய ஈரான் -
அமெரிக்காவில் 30 இந்தியர்கள் கைது.. உடனடியாக நாடுகடத்த உத்தரவு "Operation Checkmate".. என்ன நடந்தது? -
அந்தர் பல்டி அடிக்கும் டிரம்ப்.. 25% வரி 15 சதவீதமாக குறைப்பு.. வழிக்கு வந்த அமெரிக்கா! -
இனி சீனாவுக்கு தெரியாமல் அணுவும் அசையாது.. எதிர்காலத்தை கணிக்கும் AI சாப்ட்வேர்.. திக்திக் ஆய்வு -
95% கொசுக்கள் காலி.. கூகுள் உருவாக்கிய புது வகை கொசுக்கள்! உலகை வியக்க வைக்கும் சீக்ரெட் திட்டம் -
"டார்க்" பாதை.. ஹார்முஸ் ஜலசந்தி வழியாக சீக்ரெட்டாக போன 70+ கப்பல்கள்.. இது எப்படி சாத்தியம்?












Click it and Unblock the Notifications