அமெரிக்காவை விட.. ஆப்பிரிக்காதான் பெருசு! ஐநாவில் நிறைவேறிய தீர்மானம்.. டிரம்ப் கடும் கோபம்!

Subscribe to Oneindia Tamil

வாஷிங்டன்: உலக வரைப்படத்தை பார்க்கும்போது, ஆப்பிரிக்கா கண்டம் அமெரிக்காவை விட சிறியதாக, கிரீன்லாந்தை விட குட்டியாக இருக்கும். ஆனால், அதன் உண்மையான சைஸ் பிரமாண்டமானது. தற்போது இது தொடர்பான தீர்மானம் ஒன்று ஐநா பொது சபையில் நிறைவேறியிருக்கிறது. இதற்கு அமெரிக்கா கடும் கண்டனம் தெரிவித்திருக்கிறது.

யோசித்து பாருங்கள்.. ஆப்பிரிக்காவில் வளரும் குழந்தைகள், சிறு வயதிலிருந்தே தங்களது கண்டத்தை பார்த்து வளரும் போது.. அட ஆமாம் நம்ம நாடுகள் ரொம்பவும் சின்னதா இருக்கு.. அமெரிக்காவும், ஐரோப்பிய நாடுகளும்தான் பெருசு! அதனால.. அவங்கதான் ஆதிக்கம் செலுத்துவது சரி என்கிற உளவியலில்தான் வளர்வார்கள்.

Africa

உண்மை என்னவெனில், ஆப்பிரிக்கா கிரீன்லாந்தை விட 14 மடங்கு பெரியது. அமெரிக்கா, இந்தியா, சீனா, ஐரோப்பாவின் அனைத்து நாடுகளையும் இந்த ஆப்பிரிக்க கண்டத்தில் அடக்கிவிட முடியும். அவ்வளவு பெரிய கண்டத்தை.. 450 ஆண்டுகளாக சிறியதாக காட்சிப்படுத்தியிருக்கிறார்கள். அது இப்போது வரை தொடர்கிறது. இது உளவியல் தாக்குதல்தான். எனவே, டோகோ எனும் நாடு.. ஆப்பிரிக்க கண்டத்தை திருத்தும் பிரச்சாரத்தை ஐநாவிடம் கொண்டு சென்றது. இதை ஏற்ற ஐநா சபை சரிசமமான பூமி என்கிற புதிய உலக மேப்பை வெளியிட்டது.

இந்த மேப்பில் கண்டங்களின் உண்மையான நிலப்பரப்பு அளவு துல்லியமாக காட்சிப்படுத்தப்பட்டிருக்கும். ஆப்பிரிக்கா, லத்தீன் அமெரிக்கா மற்றும் ஆசிய பகுதிகள் அதன் உண்மையான அளவில் காட்டப்பட்டிருக்கும். வட அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகள் அளவில் சிறியதாக தெரியும். இது தொடர்பான தீர்மானம் வாக்கெடுப்புக்கு வந்தபோது, 164 நாடுகள் ஆதரவாக வாக்களித்தன. எதிராக ஒரே ஒரு நாடு மட்டும்தான் வாக்களித்தது. வேற யாரு? அமெரிக்காதான்.

அமெரிக்காவின் ஐநா பிரதிநிதி யாரினா ஃபெரென்செவிச் பேசுகையில், "16ம் நூற்றாண்டை சேர்ந்த ஒரு வரைபடத்தை மாற்றுவது குறித்து விவாதிப்பது ஐநாவின் நேரத்தை வீணடிக்கும் செயல். இதுபோன்ற விவாதங்கள்தான் ஐநா சபை உலக அளவில் தனது நம்பகத்தன்மையை இழந்து வருகிறது. தற்போதைய சூழலில் உலகம் எதிர்கொள்ளும் உண்மையான மற்றும் கடுமையான சவால்களுக்கு தீர்வு காண்பதை விடுத்து ஐநா சபை வரைபடத்தை மாற்றும் பணிகளில் கவனம் செலுத்துவது முக்கிய பிரச்சனைகளை திசை திரும்பும் செயல் என்று பேசியிருக்கிறார்.

இந்த வரைபட மாற்றம் வெறும் புவியில் சார்ந்தது மட்டுமல்லாது.. அதன் பின்னணியில் 'காலனித்துவ கால இழப்பீடுகள்' மற்றும் அறிவாற்றல் நீதி போன்ற சித்தாந்த ஆதிக்க அரசியல் இருக்கிறது என்று நாங்கள் கருதுகிறோம்" என பேசியிருக்கிறார். அப்படியெனில், இந்த மேப்-ஐ மாற்றுவதன் மூலம் இத்தனை ஆண்டுகள் பெரிய தவறு நடந்திருக்கிறது என்பதை வெட்ட வெளிச்சமாக காட்டுகிறார்கள். இதையெல்லாம் எதுக்கு செய்யனும் என்று அமெரிக்கா கடுப்பாகியிருக்கிறது.

காலங்காலமாக ஒடுக்கப்பட்டு சுரண்டப்பட்டு வந்த ஆப்பிரிக்க நாடுகளுக்கு இந்த மேப் திருத்தம் பெரிய நிவாரணத்தை கொடுக்காது. ஆனால், நாங்கள் அளவில் கூட உங்களை விட குறைந்தவர்கள் கிடையாது என்பதை ஆப்பிரிக்கா உரக்க சொல்லியிருக்கிறது. இனியாவது பெரியவன், சின்னவன் சண்டையை அமெரிக்கா கிளப்பாமல் இருக்குமா என்பதை பொருத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+