அமெரிக்க சுற்றுப்பயணம் நிறைவு.. 'முதல் முறை' எகிப்து புறப்பட்டு சென்றார் பிரதமர் மோடி
வாஷிங்டன்: எகிப்து அதிபரின் அழைப்பை ஏற்று இரண்டு நாட்கள் பயணமாக பிரதமர் மோடி அந்நாட்டிற்கு செல்கிறார். 1997- ஆம் ஆண்டுக்கு பிறகு இந்திய பிரதமர் ஒருவர் எகிப்து செல்வது இதுதான் முதல் தடவையாகும்.
3 நாள் அரசு முறைப்பயணமாக பிரதமர் மோடி அமெரிக்கா சுற்றுப்பயணம் மேற்கொண்டார். அமெரிக்காவில் பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. நியூயார்க் நகரில் ஐ.நா. தலைமையகத்தில் சர்வதேச யோகா தின கொண்டாட்டத்தில் பங்கேற்றார். அதன்பிறகு, தலைநகர் வாஷிங்டனுக்கு சென்றார்.

வெள்ளை மாளிகையில் அதிபர் ஜோ பைடனும், அவருடைய மனைவி ஜில் பைடனும் மோடிக்கு சிறப்பு விருந்து அளித்தனர். ஜில் பைடன் ஏற்பாட்டில் ஒரு அறக்கட்டளை நிகழ்ச்சியிலும் பிரதமர் பங்கேற்றார். அதுமட்டும் இன்றி அமெரிக்க அதிபர் ஜோ பைடனும், அவரது மனைவி ஜில் பைடனும் தனிப்பட்ட முறையில் இரவு விருந்து அளித்து கவுரவித்தனர்.
இதே போன்று அமெரிக்க அரசின் சார்பில், பிரதமர் மோடிக்கு நேற்று முன்தினம் இரவு விருந்து அளிக்கப்பட்டது. தொடர்ந்து பல்வேறு நிகழ்ச்சிகளில் பிரதமர் மோடி பங்கேற்றார். அமெரிக்க நாடாளுமன்ற கூட்டுக் கூட்டத்தில் பங்கேற்ற பிரதமர் மோடி அங்கு உரையாற்றினார். தொடர்ந்து வாஷிங்டன்னில் இந்திய சமூகத்தினர் மத்தியில் பிரதமர் மோடி உரையாற்றினார்.
பின்னர் மூன்று நாள் அமெரிக்க சுற்றுப்பயணத்தை நிறைவு செய்த பிரதமர் மோடி எகிப்து புறப்பட்டு சென்றார். எகிப்தில் சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் பிரதமர் மோடி அந்நாட்டு அதிபர் அப்தெல் ஃபதாவை சந்தித்து பேசுகிறார். இந்த சந்திப்பின் போது பல்வேறு முக்கிய விவகாரங்கள் குறித்து ஆலோசிக்கப்படும் என தெரிகிறது. 1997- ஆம் ஆண்டுக்கு பிறகு இந்திய பிரதமர் ஒருவர் எகிப்து செல்வது இதுதான் முதல் தடவையாகும். பிரதமர் மோடி எகிப்து சுற்றுப்பயணம் மேற்கொள்வது இதுவே முதல் முறையாகும்.
-
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்?












Click it and Unblock the Notifications