ரஷ்ய சேனலில் டிரம்ப் மனைவி மெலனியாவின் நிர்வாண போட்டோக்கள்! "அநாகரிக செயல்!" கொந்தளித்த நெட்டிசன்கள்

Subscribe to Oneindia Tamil

வாஷிங்டன்: அமெரிக்க அதிபர் தேர்தலில் கமலா ஹாரிஸை வீழ்த்தி டிரம்ப் வெற்றி பெற்றுள்ளார். இதை அவரது ஆதரவாளர்கள் கொண்டாடி வருகிறார்கள். இந்தச் சூழலில் ரஷ்யாவுக்கு சொந்தமான செய்தி நிறுவனம் ஒன்று டிரம்ப் வெற்றி செய்தியுடன் அவரது மனைவி மெலனியாவின் நிர்வாண படங்களையும் ஒளிபரப்பி இருக்கிறது. இது இணையத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

உலகமே எதிர்பார்த்த அமெரிக்க அதிபர் தேர்தல் சமீபத்தில் தான் நடந்து முடிந்தது. இதில் ஜனநாயக கட்சியின் கமலா ஹாரிஸை டிரம்ப் மிக எளிதாக வீழ்த்தி இருந்தார்.

russia donald trump

இதன் மூலம் அமெரிக்காவின் 47வது அதிபராக அவர் ஆகியுள்ளார். டிரம்ப் ஏற்கனவே 2016- 2020 வரை அதிபராகி இருந்த நிலையில், இரண்டாவது முறையாக இப்போது அதிபர் பதவிக்கு வந்துள்ளார். அவர் ஜன. 20ம் தேதி அதிகாரப்பூர்வமாக அமெரிக்க அதிபராகப் பதவியேற்க உள்ளார்.

ரஷ்ய சேனல்: இதற்கிடையே டிரம்ப் வென்ற தகவல் கிடைத்தவுடன் ரஷ்ய அரசுக்குச் சொந்தமான சேனல், டிரம்பின் மனைவி மெலனியாவின் நிர்வாண படங்களை ஒளிபரப்பியதாகத் தகவல் வெளியாகியுள்ளது. ரஷ்யா-1 நெட்வொர்க் சேனலில் சுமார் ஒரு மணி நேரம் வரை இதுபோல ஆபாச போட்டோக்கள் ஒளிபரப்பப்பட்டதாக ரஷ்யா மீடியா மானிட்டர் அமைப்பின் நிறுவனர் ஜூலியா டேவிஸ் தெரிவித்துள்ளார்.

டிரம்பின் வெற்றி தொடர்பான செய்திகளில் அவரது மனைவி மெலனியாவின் இந்த ஆபாசப் படங்கள் ஒளிபரப்பப்பட்டு இருக்கிறது. இது தொடர்பான வீடியோ ஒன்றும் இணையத்தில் வேகமாகப் பரவி வருகிறது. அதில் ரஷ்ய செய்தி வாசிப்பாளர் ஒவருர், டிரம்பின் வெற்றி குறித்துப் பேசுகிறார். பிறகு டிரம்பின் மனைவி மெலனியா 2000ம் ஆண்டு எப்படி இருந்தார் என்பது குறித்து நாம் பார்க்கலாம் எனச் சொல்கிறார். அதைத் தொடர்ந்து இந்த நிர்வாண போட்டோக்கள் ஒளிபரப்பாகிறது.

பின்னணி என்ன: கடந்த 2000ம் ஆண்டு பிரபல ஜீக்யூ இதழுக்கு மெலனியா நிர்வாண போட்டோஷூட் நடத்தியிருந்தார். அந்த படங்களையே ரஷ்யா இப்போது ஒளிபரப்பியதாகத் தெரிகிறது. அப்போது அந்த செய்தி வாசிப்பாளர் பல மோசமான கருத்துகளைச் சொல்வதும் தெளிவாக இருக்கிறது. இந்த வீடியோ தான் இப்போது இணையத்திலும் வேகமாகப் பரவி வருகிறது.

ரஷ்யாவின் இந்தச் செயலுக்கு நெட்டிசன்கள் மிகக் கடுமையாக எதிர்வினையாற்றி வருகிறார்கள். டிரம்ப் வெற்றிக்கும் இதற்கும் என்ன தொடர்பு.. இதை இப்போது ஏன் ஒளிபரப்ப வேண்டும் என்றும் பலரும் கேள்வி எழுப்பி வருகின்றனர். இன்னும் சிலர் ரஷ்ய அரசின் மோசமான மனநிலையையே இது காட்டுவதாக இருப்பதாகவும் சாடியுள்ளனர்.

மெலனியா திட்டவட்டம்: முன்னதாக கடந்த செப். மாதம் அதிபர் தேர்தலுக்கு முன்னதாகவே மெலனியாவின் நிர்வாண படங்களைச் சிவ விஷமிகள் இணையத்தில் பரப்பினர். அதற்குப் பதிலடி கொடுத்த மெலனியா, "நான் ஒரு காலத்தில் நிர்வாண மாடலிங் செய்தேன். அது குறித்து நான் பெருமைப்படவே செய்கிறேன். அதை மனித உடலின் கொண்டாட்டமாகவே நான் பார்க்கிறேன். எனது பேஷன் போட்டோஷூட் குறித்து ஏன் ஊடகங்கள் ஏன் இப்போது கேள்வி எழுப்ப வேண்டும் என்பதே இப்போது எழுந்துள்ள முக்கிய கேள்வி" என்று அவர் கடுமையாக விமர்சித்து இருந்தது குறிப்பிடத்தக்கது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+