Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

அமெரிக்கா திரும்பி பார்த்த தமிழர்! ஒரே மணி நேரத்தில் பல கோடி நன்கொடை! கெத்து காட்டும் விவேக் ராமசாமி

Subscribe to Oneindia Tamil

வாஷிங்டன்: இந்திய வம்சாவளியைச் சேர்ந்த விவேக் ராமசாமி என்பவருக்குக் குடியரசு கட்சிக்கு மத்தியில் ஆதரவு எகிறி அடித்துள்ளது. விவாதம் முடிந்தவுடன் ஒரே மணி நேரத்தில் அவருக்கு இந்திய மதிப்பில் 3.72 கோடி நன்கொடையாகக் கிடைத்துள்ளது.

அமெரிக்காவில் அடுத்தாண்டு அதிபர் தேர்தல் நடைபெற உள்ளது. அமெரிக்காவைப் பொறுத்தவரை அங்கு வேட்பாளர் தேர்வே ரொம்பவே சுவாரசியமாக இருக்கும். குடியரசு கட்சி மற்றும் ஜனநாயக கட்சி மட்டுமே அங்கே முக்கிய கட்சியாக இருக்கிறது.

 After presidential debate Vivek Ramaswamy got huge support and gets $450,000 donations in an hour

அங்கு ஒருவரால் இரண்டு முறை மட்டுமே அதிபராக இருக்க முடியும் என்பதால், பெரும்பாலும் முதல்முறை அதிபராக இருக்கும் தலைவரே மீண்டும் அதிபர் தேர்தலில் போட்டியிடுவார். அதன்படி ஜனநாயக கட்சி சார்பில் இப்போது அதிபராக இருக்கும் பைடனே போட்டியிட வாய்ப்புகள் மிக அதிகம்.

அமெரிக்கா: இருப்பினும், குடியரசு கட்சியில் அப்படி இல்லை. டிரம்ப் தொடங்கி பலரும் தேர்தலில் போட்டியிட விருப்பம் தெரிவித்துள்ளனர். அமெரிக்காவைப் பொறுத்தவரைக் குறிப்பிட்ட கட்சி சார்பில் போட்டியிடப் பலரும் விருப்பம் தெரிவிப்பார்கள்.. அவர்களுக்குள் உட்கட்சி தேர்தல் நடத்தப்பட்டு, அதில் யாருக்குச் செல்வாக்கு அதிகம் இருக்கிறதோ.. அவர் வேட்பாளராக அறிவிக்கப்படுவார். குடியரசு கட்சி சார்பில் பலரும் போட்டியிட விருப்பம் தெரிவித்த போதிலும் அதில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த விவேக் ராமசாமி கவனிக்க வைக்கிறார்.

மேலும், அங்கு அதிபர் வேட்பாளர்களுக்கு மத்தியில் விவாதம் நடைபெறுவதும் வழக்கமான ஒன்று தான். அதன்படி சமீபத்தில் அங்குக் குடியரசு கட்சி சார்பில் போட்டியிட விருப்பம் தெரிவித்தோர் மத்தியில் விவாதம் நடைபெற்றது. இதில் இந்திய-அமெரிக்கத் தொழிலதிபரான விவேக் ராமசாமியின் பேச்சு அனைவரையும் கவர்ந்தது. இந்த ஒரு விவாதத்திற்குப் பின்பு மட்டும் அவரது செல்வாக்கும் நிதி திரட்டலும் பல மடங்கு அதிகரித்துள்ளது.

விவேக் ராமசாமி: 38 வயதான விவேக் ராமசாமிக்கு விவாதத்திற்குப் பிறகு முதல் ஒரு மணி நேரத்தில் மட்டும் $450,000 நன்கொடையாகக் கிடைத்துள்ளது. அதாவது ஒவ்வொரு நன்கொடையிலும் அவருக்குச் சராசரியாக $38 டாலர் நன்கொடை கிடைத்துள்ளது. அடுத்தாண்டு நடக்கும் அதிபர் தேர்தலில் விவேக் ராமசாமி எந்தளவுக்கு முக்கியமான வேட்பாளராக உருவாக வாய்ப்பு இருக்கிறது என்பதையே இது உணர்த்துகிறது.

குடியரசு கட்சி வேட்பாளர்களுக்கு மத்தியில் நடந்த முதல் விவாதமான இது முக்கியமானதாகப் பார்க்கப்படுகிறது. இந்த விவாதத்தில் குடியரசு கட்சியின் முக்கிய நபரான டிரம்ப் கலந்து கொள்ளாத நிலையில், விவேக் ராமசாமிக்கு ஆதரவு அதிகமாகவே இருந்தது. அவர் கூறிய பல கருத்துகள் பழமைவாதிகள் மற்றும் குடியரசு கட்சியினர் மத்தியில் அவரது செல்வாக்கை அதிகரித்தது.

எகிறும் ஆதரவு: இந்த விவாதத்திற்குப் பிறகு நடந்த கருத்துக்கணிப்பில், 504 பேரில் 28 சதவீதம் பேர் விவேக் ராமசாமியின் செயல்பாடு மிகவும் சிறப்பானது என்று கூறினர். அதேநேரம் 27 சதவீத ஆதரவுடன் புளோரிடாவைச் சேர்ந்த ரான் டிசாண்டிஸ் இரண்டாவது இடத்திற்கு வந்தார். டிரம்ப் அதிபராக இருந்த போது துணை அதிபராக இருந்த மைக் பென்ஸுக்கு 13 சதவீத ஆதரவு மட்டுமே இருந்தது. விவாதத்திற்குப் பிறகு, விவேக் ராமசாமி குறித்த கூகுள் சேர்ச்சுகளும் பல மடங்கு அதிகரித்தது.

இந்த விவாதம் விவேக் ராமசாமியை லைம்லைட்டில் வைப்பதாக அந்நாட்டு ஊடகங்கள் கூறுகின்றனர். வரும் காலத்தில் டிரம்பிற்கு விவேக் ராமசாமி தான் போட்டி கொடுப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. விவேக் ராமசாமி அமெரிக்காவில் பிறந்தவர் என்ற போதிலும், அவரது தந்தை ராமசாமி, தாய் கீதா ஆகியோர் இந்தியாவில் பிறந்தவர்கள்.. அவரது குடும்பத்தினர் கேரளாவைச் சேர்ந்த தமிழ் பேசும் பிராமணர்கள் ஆவர்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+