ப்ளூ டிக் வசதி.. ட்விட்டரை காப்பியடித்த மெட்டா நிறுவனம்.. பேஸ்புக், இன்ஸ்டாகிராம் பயனர்கள் அதிர்ச்சி
ப்ளூ டிக் வசதியை பெற டிவிட்டர் நிறுவனம் கட்டணம் விதித்தது போல தற்போது மெட்டா நிறுவனமும் ப்ளூ டிக் வசதி பெற கட்டணம் விதித்துள்ளது.
வாஷிங்டன்: ப்ளூ டிக் வசதியை பெற டிவிட்டர் நிறுவனம் கட்டணம் விதித்தது போல தற்போது மெட்டா நிறுவனமும் ப்ளூ டிக் வசதி பெற கட்டணம் விதித்துள்ளது. அதன்படி பேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராமில் இனி ப்ளூ டிக் பெற கட்டணம் விதிக்கப்படும் என்று மெட்டா நிறுவனம் அறிவித்துள்ளது. ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்தில் இந்த சேவை நடப்பு வாரத்தில் அறிமுகம் ஆக உள்ளதாம். விரைவில் பிற நாடுகளில் அறிமுகம் செய்ய மெட்டா நிறுவனம் திட்டமிட்டுள்ளதாம்.
உலக பெரும் பணக்கராரான எலான் மஸ்க் பிரபல சமூக வலைத்தள நிறுவனமான ட்விட்டரை கடந்த ஆண்டு விலைக்கு வாங்கினார்.
ட்விட்டரை வாங்கியதில் இருந்தே அந்த நிறுவனத்தில் பல்வேறு அதிரடி மாற்றங்களை எலான் மஸ்க் செய்து வருகிறார். ட்விட்டர் திவால் நிலைக்கு சென்று விடும் என்று கூறிய எலான் மஸ்க் பல்வேறு செலவு குறைப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டார்.

எலான் மஸ்கின் நடவடிக்கைகள்
செலவீன குறைப்பு நடவடிக்கைகள் என்ற பெயரில் ஆட்குறைப்பு, பல கிளை அலுவலங்களை மூடுவது என பல நடவடிக்கைகளை எலான் மஸ்க் எடுத்தார். எலான் மஸ்க்கின் இந்த நடவடிக்கை ட்விட்டர் ஊழியர்களுக்கு கடும் அதிர்ச்சி அளிப்பதாக இருந்தது. அதற்கு அடுத்தபடியாக வருவாயை பெருக்கும் விதமாக ட்விட்டரில் சில சேவைகளுக்கு கட்டணம் விதித்தார். அதாவது புளு டிக் வசதியை பெற கட்டணம் செலுத்த வேண்டும் என்ற திட்டத்தை எலான் மஸ்க் அறிமுகப்படுத்தினார்.

ப்ளூ டிக் வசதி பெற கட்டணம்
சமூக வலைத்தளங்களில் பிரபலமானவர்களின் பெயரில் போலி கணக்குகளையும் பலரும் தொடங்கி விடுகிறார்கள். இதனால், சம்பந்தப்பட்ட நபரின் அதிகாரப்பூர்வ அக்கவுண்ட்தான் என்பதை உறுதிப்படுத்தும் விதமாக ட்விட்டர், பேஸ்புக்,உள்ளிட்ட சமூக வலைத்தள நிறுவனங்கள் புளு டிக் வசதியை அளித்து வருகின்றன. அரசியல் தலைவர்கள், சமூகத்தில் பிரபலமாக உள்ள நபர்கள் மற்றும் நிறுவனங்களின் அதிகாரப்பூர்வ கணக்கு என்பதை இதன் மூலம் நெட்டிசன்கள் உறுதி செய்து கொள்ள முடியும் நிலை இருந்தது.

பேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராமிலும்..
இந்த நிலையில், ப்ளு டிக் வசதியை கட்டணம் செலுத்தி ட்விட்டர் பயனாளர்கள் அனைவரும் பெற்றுக்கொள்ளலாம் என்று அறிவித்தார். மொபைல்களில் ட்விட்டர் புளு வசதியை பெற ரூ.900 ஆயிரம் கட்டணம் செலுத்த வேண்டும் என்று ட்விட்டர் அறிவித்தது. ட்விட்டரின் இந்த நடவடிக்கைக்கு நெட்டிசன்கள் மத்தியில் எதிர்ப்புகளும் கிளம்பாமல் இல்லை. இந்த நிலையில், ட்விட்டரை அப்படியே காப்பியடித்த மெடா நிறுவனம் பேஸ்புக், இன்ஸ்டாகிராமிலும் புளு டிக் வசதியை பெற கட்டணம் செலுத்த வேண்டும் என்ற அறிவிப்பை வெளியிட்டு இருக்கிறது.

நம்பகத்தன்மையை கொடுக்கும் விதமாக
பேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராமில் புளு டிக் வசதியை பெற ஆண்ட்ராய்டு பயனாளர்கள் 11.99 டாலரும் ஐ.ஓ.எஸ் பயனாளர்கள் 14.99 டாலரும் கட்டணமாக செலுத்த வேண்டும் என்று மெட்டா நிறுவனம் அறிவித்துள்ளது. இது தொடர்பாக மெட்டா நிறுவனத்தின் தலைவர் மார்க் சூகர் பெர்க் கூறுகையில், "நடப்பு வாரத்தில் பயனர்கள் தங்கள் கணக்குகளை வெரிபைட் கணக்குகளாக மாற்றும் வசதியை அறிமுகப்படுத்த உள்ளது. நம்பகத்தன்மையும் பாதுகாப்பு வசதியும் கொடுக்கும் வகையில் இந்த சேவை இருக்கும்.

நெட்டிசன்கள் விமர்சனம்
அரசு அளித்த அடையாள ஐடியை அளித்து ப்ளு பேட்ஜ் வசதியை கட்டணம் செலுத்தி பெற்றுக்கொள்ளலாம்" என்று பதிவிட்டுள்ளார். ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்தில் இந்த சேவை நடப்பு வாரத்தில் அறிமுகம் ஆக உள்ளதாம். விரைவில் பிற நாடுகளில் அறிமுகம் செய்ய மெட்டா நிறுவனம் திட்டமிட்டுள்ளதாம். இதற்கிடையே, மெட்டா நிறுவனத்தின் இந்த அறிவிப்பை நெட்டிசன்களில் ஒரு தரப்பினர் விமர்சித்தும் வருகின்றனர்.
-
வேளச்சேரி - பரங்கிமலை MTRS.. 80 நிமிடப் பயணம் வெறும் 15 நிமிடம்.. எஸ்ஜி சூர்யாவின் நிஜ அனுபவம் -
சர்க்கரை அட்டைதாரர்களுக்கு சூப்பர் வசதி… ரேஷன் கடைக்கு போறீங்களா? தமிழக அரசின் திடீர் உத்தரவு -
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
3 அமைச்சர்களை எதிர்க்கும் தமாக! அதிமுக – பாஜக வழங்கிய தொகுதியை கவனிச்சீங்களா.. 5 தொகுதியும் கடினம் -
கரண்ட் பில் இலவசம்? இனி கட்ட வேண்டாமா? மத்திய அரசு ₹78,000 மானியம்! உங்க வீட்டிற்கு எப்படி வாங்குவது -
பிடுங்கப்படும் டிரம்பின் பவர்! அதிபர் பதவியிலேயே இருந்தாலும் அதிகாரம் இருக்காது.. நிலைமை மோசம்! -
நல்ல காலம் பொறக்குது.. தங்கம், வெள்ளியை முடிஞ்ச அளவு வாங்குங்க! ‘கோல்டுமேன்’ அடுக்கும் காரணங்கள்! -
மருமகள் உள்ளே, சீனியர் வெளியே? 55 கால சாம்ராஜ்ஜியத்திற்கு செக்! காட்பாடி திருப்பத்தின் பின்னணி என்ன -
இரட்டை இலையை விட்டுவிட்டு.. தாமரைக்கு தாவும் கூட்டணி கட்சிகள்! எங்கேயோ இடிக்குதே!












Click it and Unblock the Notifications