புதின், ட்ரம்ப்பை போல்! சட்டையின்றி அமெரிக்க அதிபர் ஜோ பைடன்! கசிந்த போட்டோக்கள்! பின்னணியே வேற!
வாஷிங்டன்: ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின், அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் போல் தற்போதைய அமெரிக்க அதிபரான ஜோ பைடன் சட்டையின்றி பீச்சில் இருக்கும் போட்டோக்கள் தற்போது வெளியாகி இணையதளங்களில் வேகமாக பரவி வருகிறது.
அமெரிக்க அதிபராக ஜோ பைடன் உள்ளார். இவருக்கு வயது 80. இவர் ஜனநாயக கட்சியை சேர்ந்தவர். இவரது அதிபர் பதவிக்காலம் அடுத்த ஆண்டு முடிவுக்கு வர உள்ளது. இருப்பினும் மீண்டும் அமெரிக்க அதிபர் தேர்தலில் போட்டியிடும் முனைப்பில் ஜோ பைடன் உள்ளார்.

இருப்பினும் அவருக்கு தேர்தலில் போட்டியிட ஜனநாயக கட்சி சார்பில் வாய்ப்பு கிடைக்குமா? என்பதில் சந்தேகம் தான் என கூறப்படுகிறது. இதற்கு முக்கிய காரணமாக அவரது வயது உள்ளது. தற்போது 80 வயது நிரம்பிய ஜோ பைடன் வரும் காலத்தில் வயது முதிர்வால் ஆக்டிவ்வாக செயல்பட முடியாமல் போகலாம் என ஜனநாயக கட்சி கருதுகிறது.
இருப்பினும் அரசியலில் எது வேண்டுமானாலும் நடக்கலாம் என்பதால் அடுத்த ஆண்டு நடக்கும் அதிபர் தேர்தலில் ஜனநாயக கட்சி ஜோபைடனுக்கு வாய்ப்பு வழங்குகிறதா? இல்லாவிட்டால் வேறு தலைவருக்கு வாய்ப்பு வழங்குகிறதா? என்பதை நாம் பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும். இத்தகைய சூழலில் தான் தற்போது ஜோ பைடன் சட்டையின்றி நிற்கும் போட்டோக்கள் இணையதளங்களில் வெளியாகி வேகமாக பரவி வருகிறது.
அதாவது அமெரிக்காவில் டெலாவேர் பகுதியில் ஜோ பைடனுக்கு ரெஹோபோத் என்ற விடுமுறை கால சொகுசு பங்களா உள்ளது. இந்த பங்களாவின் அருகே கடற்கரை அமைந்துள்ளது. இந்த கடற்கரைக்கு சென்ற ஜோபைடன் சட்டையின்றி நின்றார். பீச்சில் பெண்கள் இருந்த நிலையில் ஜோ பைடன் சட்டையின்றி நீலநிற ஷார்ட், கருப்பு நிற தொப்பி, சன்கிளாஸ் அணிந்து நின்றார். இதுபற்றி விசாரித்தபோது, ஜோபைடன் தனது உடலில் சூரியக்கதிர்கள் படும் வகையில் பீச்சில் சட்டையின்றி நின்றது தெரியவந்தது. இதற்கிடையே தான் ஜோபைடன் சட்டையின்றி இருக்கும் போட்டோக்கள் இணையதளங்களில் வேகமாக பரவி வருகிறது.

முன்னதாக ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் சட்டையின்றி குதிரையில் பயணித்த போட்டோ இணையதளத்தில் கசிந்தது. தான் இன்னும் வலிமையாகவே உள்ளதாவும். வயதானாலும் தனது உடல்நலத்துடன் உள்ளதாவும். அதோடு உடல் கட்டுக்கோப்புடன் தான் உள்ளேன் என்பதை மக்களிடம் வெளிக்காட்டும் வகையில் விளாடிமிர் புதின் தரப்பில் இந்த போட்டோ கசிய விடப்பட்டதாக கூறப்பட்டது. அதேபோல் அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்ட் ட்ரம்ப் தனது சில்வெஸ்டர் ஸ்டாலோன் உடலில் தனது முகத்தையொட்டி போட்டோ வெளியிட்டு விவாதத்தை கிளப்பினார்.
அந்த வரிசையில் தான் தற்போது அமெரிக்க அதிபர் ஜோபைடன் சட்டையின்றி இருக்கும் போட்டோ வெளியாகி உள்ளது. இருப்பினும் இது விளாடிமிர் புதின், டொனால்ட் ட்ரம்ப் ஆகியோரை போல் அல்லாமல் ஜோபைடன் சூரியஒளியை பெறும் வகையில் சட்டையின்றி நின்றதும், அதனை பத்திரிகையாளர் ஒருவர் செல்போனில் போட்டோவாக எடுத்த நிலையில் இணையதளங்களில் பரவி வருவதும் குறிப்பிடத்தக்கது.
-
பேரழிவு வர போகுது.. ஈரானுக்கு நேரடியாக டிரம்ப் தந்த மரண வார்னிங்.. மீண்டும் வெடிக்கும் போர் -
"பதிலடி கொடுப்போம்.." நள்ளிரவில் ஈரானுக்கு டிரம்ப் கொடுத்த எச்சரிக்கை.. மீண்டும் வெடிக்க போகுது போர் -
அமெரிக்காவில் இந்திய தொழிலதிபர் குடியுரிமை பறிப்பு.! டிரம்ப் அரசு அதிரடி நடவடிக்கை.. பரபர பின்னணி -
தமிழ் பிழைகள் தமிழ்நாட்டையே வெட்கப்பட வைத்துள்ளது.. விஜய்யை விளாசிய வானதி சீனிவாசன்! -
முதல்வர் விஜய்யின் முதல் அரசு நிகழ்ச்சி.. ஒரே ஏஐ வீடியோவில் இத்தனை தமிழ்ப் பிழைகளா! -
மார்ட்டின் சொத்துகள் முடக்கம்: அமலாக்கத் துறை பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு -
பாஜகவுக்கு ஆதரவு தரும் திமுக? டெல்லியை அதிர வைக்க போகும் மாற்றம்.. ரெடியாகும் மாஸ்டர் பிளான் -
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
வெளிப்படையாக வார்னிங் கொடுத்த விஜய்.. சிங்கப்பெண் நிகழ்ச்சியில் நடந்த முக்கிய விஷயம்! -
விஜய் - மோடி சந்திப்புக்கு பின்பு நடந்த முக்கிய மாற்றம்! தரமான செயல்..! #தமிழ்த்தாய்வாழ்த்து -
HDFC வங்கியால் கடன் வாங்கிய அனைவருக்கும் ஷாக்.. உங்க EMI அதிகரிக்க போகிறது? -
கடைசியில் ட்விஸ்ட்.. பாஜக சொன்ன பாயிண்டு! காங்கிரஸ் வேட்பாளர் மீனாட்சி நடராஜன் வேட்புமனு நிராகரிப்பு












Click it and Unblock the Notifications