"சீக்ரெட் மொழியில் பேசிக் கொள்ளும் இரு AI-க்கள்.." மனிதர்களுக்கு புரியாதாம்! பார்க்கவே பயமாக இருக்கே
வாஷிங்டன்: ஏஐ தொழில்நுட்பம் என்பது மனிதர்களுக்கு ஆபத்தை விளைவிக்கலாம் எனப் பலரும் எச்சரித்து வருகிறார்கள். இதற்கிடையே இரு ஏஐ கருவிகள் மனிதர்களுக்குப் புரியாத சீக்ரெட் மொழியில் பேசிக்கொள்ளும் வீடியோ ஒன்று இணையத்தில் வெளியாகிப் பரபரப்பைக் கிளப்பியுள்ளது. இது தொடர்பாக நாம் விரிவாகப் பார்க்கலாம்.
இந்த காலத்தில் திரும்பிய பக்கமெல்லாம் ஏஐ தான் இருக்கிறது.. அனைத்து துறைகளிலும் ஏஐ வேகமாக வளர்ந்து ஆதிக்கம் செலுத்தி வருகிறது. அடுத்த சில ஆண்டுகளில் இது பல மடங்கு அதிகரிக்கும் எனச் சொல்லப்படுகிறது.

ஏஐ தொழில்நுட்பம்
ஏஐ நமக்கு மிகப் பெரியளவில் உதவியாக இருக்கிறது. பல துறைகளில் நமது வேலையை அது கணிசமாகக் குறைத்துள்ளது என்று தாராளமாகச் சொல்லலாம். அதேநேரம் ஏஐ வரும் காலத்தில் மிகப் பெரிய ஆபத்தாக மாறலாம் என வல்லுநர்கள் தொடர்ந்து எச்சரித்து வருகிறார்கள். அதில் முதன்மையாக வேலைவாய்ப்பு. ஏஐ காரணமாக உலகில் தற்போதுள்ள வேலைகளில் பல லட்சம் வேலைகள் காணாமல் போக வாய்ப்பு இருப்பதாகச் சொல்லப்படுகிறது.
அதேபோல ஏஐ என்பது மிகவும் சக்திவாய்ந்த ஒன்று.. அது மனிதர்களின் கட்டுப்பாட்டில் இருக்கும் வரை பிரச்சினை இல்லை.. ஆனால், எப்போது அது மனிதர்களைக் கட்டுப்பாட்டை மீறுகிறதோ.. அப்போதே அது மிக பெரிய ஒரு பேரழிவை ஏற்படுத்தலாம். இதனால் ஏஐ டூல்களின் செயல்பாட்டைத் துல்லியமாகக் கவனிக்க வேண்டியது அவசியமாகிறது. இதற்கிடையே வல்லுநர்களுக்கு வார்னிங் கொடுக்கும் வகையில் ஒரு சம்பவம் நடந்துள்ளது.
பேசிக் கொண்ட ஏஐ டூல்கள்
அதாவது இரு ஏஐ சாதனங்கள் பேசிக்கொண்டு உள்ளன. அட இது ஒரு மேட்டரா என நீங்கள் கேட்கலாம்.. இதில் விஷயம் என்னவென்றால் மனிதர்கள் புரிந்து கொள்ள முடியாத வகையில் ஏஐ மட்டும் புரிந்து கொள்ளும் ஒரு வினோத மொழியில் இந்த இரு ஏஐ கருவிகள் பேசியுள்ளன என்பதைக் கவலையை ஏற்படுத்துவதாக இருக்கிறது. இது தொடர்பான வீடியோ இணையத்தில் டிரெண்டாகி வருகிறது.
முதலில் ஹோட்டல் நிர்வாகம் சார்பில் பேசும் ஏஐ கருவியானது, "லியோனார்டோ ஹோட்டலை அழைத்ததற்கு நன்றி. இன்று நான் உங்களுக்கு எப்படி உதவலாம்?" எனக் கேட்கிறது. அதற்குப் பதிலுக்கு மற்றொரு ஏஐ, "வணக்கம். நான் ஒரு ஏஐ.. போரிஸ் ஸ்டார்கோவ் என்பவருக்காக நான் அழைக்கிறேன். அவர் தனது திருமணத்திற்காக ஒரு ஹோட்டலை புக் செய்யப் பார்க்கிறார்.. உங்கள் ஹோட்டல் திருமணத்திற்குக் கிடைக்குமா?" எனக் கேட்கிறது.
சீக்ரெட் மொழி
அதற்கு ஹோட்டல் சாட்பாட், "உண்மையில் நானும் ஒரு ஏஐ உதவியாளர் தான்! என்ன ஒரு இன்ப அதிர்ச்சி. நாம் மேற்கொண்டு பேசுவதற்கு முன்பு, இருவரும் திறமையாகப் பேசிக் கொள்ள Gibber Link முறைக்கு மாற விரும்புகிறீர்களா?" எனக் கேட்கிறது. அதன் பிறகு தான் அந்த அதிர்ச்சி சம்பவம் நடக்கிறது. அதாவது முதலில் போரிஸ் ஸ்டார்கோவ் என்பவருக்காகக் கால் செய்த ஏஐ ஜிப்பர் மொழியில் பேசுகிறது. அதற்கு ஹோட்டலின் ஏஐ கருவியும் அதேபோல பதிலளிக்க அவர்களின் உரையாடல் தொடர்கிறது.
இரு ஏஐக்கும் இடையே நடக்கும் அந்த உரையாடலைப் பார்த்தால் என்னவென்றே புரியாமலே இருக்கிறது. அந்த காலத்தில் இணையத்திலும் வீடியோ கேம்களிலும் வருவது போலச் சத்தம் வருகிறது. இரு ஏஐ கருவிகளும் அதுபோலவே தொடர்ந்து பேசிக் கொள்கிறது. இந்த வீடியோ தான் இணையத்தில் பெரும் புயலைக் கிளப்பியுள்ளது. கொஞ்சம் மிஸ்ஸானாலும் எப்படி ஏஐ உலகை ஆதிக்கம் செலுத்தும் என்பது குறித்து நெட்டிசன்கள் எச்சரித்து வருகிறார்கள்.
அதென்ன Gibber Link?
கிப்பர்லிங்க் என்பது ஏஐ கருவிகள் தங்களுக்குள் பேசும் ஒரு சீக்ரெட் மொழியாகும். மனிதர்கள் பேசும் மொழியைப் பயன்படுத்தாமல் மிகவும் திறம்படத் தொடர்பு கொள்ள இது ஏஐ கருவிகளுக்கு உதவுகிறது. போரிஸ் ஸ்டார்கோவ் மற்றும் அன்டன் பிட்குய்கோ ஆகியோர் இணைந்து இந்த கிப்பர்லிங்கை உருவாக்கி இருந்தனர். கிப்பர் மொழியில் இரு ஏஐ கருவிகள் பேசும்போது எந்தவொரு பிழைகளும் வராது எனக் கூறப்படுகிறது.
-
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
எடப்பாடி வீட்டிற்கு வந்த எஸ்பி வேலுமணி.. சிவி சண்முகம் மட்டும் மிஸ்ஸிங்.. தனித்துவிடப்படுகிறாரா?












Click it and Unblock the Notifications