"குறி தப்பாது.." மிரட்டிய ஈரான்.. நடுவானில் யூடர்ன் போட்ட அமெரிக்க விமானம்! டிரம்ப்பிற்கு என்னாச்சு?

Subscribe to Oneindia Tamil

வாஷிங்டன்: சுவிட்சர்லாந்தில் நடைபெறும் உலக பொருளாதார மன்ற கூட்டத்தில் கலந்து கொள்ளச் சென்ற டிரம்பின் விமானம் நடுவானில் யூடர்ன் போட்டு மீண்டும் அமெரிக்கா திரும்பியது. சுவிட்சர்லாந்து செல்ல வேண்டிய விமானம் திடீரென வாஷிங்டனுக்கு திரும்பியதால் குழப்பம் நிலவியது. சிறிது நேரத்திற்குப் பிறகு விமானம் திரும்பியதற்கான காரணம் தெரிய வந்தது.

சுவிட்சர்லாந்தில் உள்ள டாவோஸில் இப்போது உலகப் பொருளாதார மன்ற கூட்டம் நடைபெறுகிறது.. இதில் பங்கேற்க உலகின் பல்வேறு நாடுகளில் இருந்தும் சர்வதேச தலைவர்கள் திரண்டுள்ளனர். இந்தக் கூட்டத்தில் கலந்து கொள்ள அமெரிக்க அதிபர் டிரம்பும் கிளம்பினார். அவர் அமெரிக்க அதிபருக்கான ஏர் ஃபோர்ஸ் ஒன் விமானத்தில் புறப்பட்டார்.

Air Force One Turns Around Donald Trump s Europe trip interrupted due to Minor Electrical Issue

திரும்பிய விமானம்

இருப்பினும், புறப்பட்ட கொஞ்ச நேரத்திலேயே விமானம் மீண்டும் அமெரிக்கத் தலைநகர் வாஷிங்டனுக்கு திரும்பியது. ஏர் ஃபோர்ஸ் ஒன் நடுவழியில் யூ-டர்ன் போட்டு மீண்டும் அமெரிக்கா திரும்பியுள்ளது. இதை அமெரிக்க விமான அதிகாரிகள் உறுதி செய்துள்ளனர். விமானம் எதிர்பாராத விதமாகத் திரும்பி வந்ததால், அதிபர் டிரம்பின் வாகனப் பாதுகாப்பு கான்வாய் அவசர அவசரமாக வாஷிங்டனுக்கு அருகே உள்ள ஜாயின்ட் பேஸ் ஆண்ட்ரூஸ் தளத்தை நோக்கி விரைந்தன. இது தொடர்பான வீடியோக்கலும் சமூக வலைத்தளங்களில் வேகமாகப் பரவி வருகிறது. முதலில் டிரம்ப் விமானம் ஏன் மீண்டும் அமெரிக்கா திரும்பியது என்பதில் குழப்பம் நிலவியது.

என்ன காரணம்

சிறிது நேரத்திற்கு பிறகே டிரம்ப் விமானம் திரும்ப காரணம் தெரிந்தது. விமானத்தில் எதிர்பாராத விதமாக ஒரு சிறிய எல்டிரிக்கல் கோளாறு ஏற்பட்டதாகவும் இதன் காரணமாகவே விமானம் திரும்பியதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து ஒரு மூத்த வெள்ளை மாளிகை அதிகாரி கூறுகையில், "விமானம் புறப்பட்ட பிறகு, ஏர் ஃபோர்ஸ் ஒன் குழுவினர் ஒரு சிறிய மின்சாரக் கோளாறைக் கண்டறிந்தனர். இதையடுத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, ஏர் ஃபோர்ஸ் ஒன் மீண்டும் அமெரிக்கா திரும்பியது.. அதிபரும் அவரது குழுவும் வேறு விமானத்தில் சுவிட்சர்லாந்துக்குச் சென்றனர்" என்று தெரிவித்தார்.

அச்சம் ஏன்

அதிபர் டிரம்ப் வேறு விமானத்தில் டாவோஸ் பயணிக்கிறார் என்பதால், அவர் பாதுகாப்பாகவே இருப்பதாகக் கருதப்படுகிறது. இருப்பினும், ஏர் ஃபோர்ஸ் ஒன் விமானம் திடீரெனத் திரும்பிச் சென்ற செய்தி அறிந்ததும் பலரும் அதிபரின் பாதுகாப்பு குறித்துக் கவலை தெரிவித்தனர். விமானம் அட்லாண்டிக் பெருங்கடலுக்கு மேல் சென்றபோதே மீண்டும் திரும்பியுள்ளது. அப்போது சில ராணுவ ஜெட் விமானங்களும் உடன் சென்றுள்ளது..

சமீபத்தில் தான் அமெரிக்க அதிபருக்குக் கொலை மிரட்டல் விடுக்கும் வகையில் ஈரான் அரசியல்வாதிகள் சில சர்ச்சை கருத்துகளைக் கூறியிருந்தனர். அது நடந்து கொஞ்ச நேரத்திலேயே டிரம்ப்பின் விமானமும் யூடர்ன் போட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. இதன் காரணமாகவே டிரம்ப் ஆதரவாளர்கள் பலரும் கவலையடைந்தனர். அதன் பிறகு தொழில்நுட்பக் கோளாறே விமானம் திரும்பி வர காரணம் என்று விளக்கமளிக்கப்பட்டது.

முக்கியம்

மேலும், டிரம்ப்பின் இந்த ஐரோப்பியப் பயனும் உலகளவில் கவனிக்கும் விஷயமாக மாறி வருகிறது. அவர் அமெரிக்காவுக்கு கிரீன்லாந்து தேவை எனச் சொல்லி வரும் நிலையில், இப்போது ஐரோப்பாவுக்குச் செல்கிறார். அங்கு அவர் என்ன பேசப் போகிறார்.. கிரீன்லாந்து விவகாரத்தை மீண்டும் எழுப்புவாரா என்பதே இப்போது பேசுபொருளாகியுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+