மாய மானை துரத்தும் நிறுவனங்கள்.. AI இப்படித்தான் காலியாகும்.. நிபுணர்கள் கணிப்பு!
சென்னை: செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் (AI) ஒரு குமிழ் போல வளர்ந்து வருகிறது என்றும், அது விரைவில் வெடிக்கும், இதிலிருந்து எந்த நிறுவனமும் தப்ப முடியாது என்று சுந்தர் பிச்சை தொடங்கி பலரும் கூறி வருகின்றனர். இந்த தோல்வி எப்படி ஏற்படும்? ஏஐ உண்மையில் மாய பிம்பமா? யாரெல்லாம் உஷாராக வேண்டும் என்பது குறித்து நிபுணர்கள் விளக்கமளித்துள்ளனர்.
கடந்த 2008ம் ஆண்டு உலக மந்த நிலை ஏற்பட்டது. இது அமெரிக்காவிலிருந்துதான் தொடங்கியது. ஏராளமானோர் வேலையை இழந்தனர், வருமானம் கிடையாது, கடன் கிடையாது, சொத்துக்கள் தேங்கின. மொத்த உலகமும் ஒரு நிமிடம் நின்று பின்னர் சுழல தொடங்கியது போல இருந்தது. இப்படி ஒரு ஆபத்து வரும் என்று கணித்தவர்களில் ஒருவர்தான் முதலீட்டளர் மைக்கேல் பர்ரி.

வெடிக்கப்போகும் ஏஐ
இவர் தற்போது ஏஐ வளர்ச்சியை கண்காணித்து வருகிறார். விரைவில் ஏஐ பெரியதாக வெடிக்கும் என்றும் அதற்கான காரணத்தையும் அடுக்கியுள்ளார்.
ஜெமினி, டீப் சீக், சாட் ஜிபிடி போன்றவை உண்மையான வளர்ச்சி. இவைகள் மனித அறிவுக்கு ஈடு கொடுத்து வேலை செய்கின்றன. தொழில்நுட்ப உலகில் நாம் ஓரடி முன்னேறியுள்ளோம் என்பதை மறுக்க முடியாது.
ஆனால் இந்த வளர்ச்சியை சுற்றி உருவாக்கப்பட்டிருக்கும் 'நிதிசார்' முறையில்தான் பிரச்சனை இருக்கிறது. அதாவது இந்த ஏஐ தோழில்நுட்பத்தை காசாக, வருமானமாக, அதீத லாபமாக மாற்ற மேற்கொள்ளப்பட்டிருக்கும் முயற்சியைதான் 'நிதிசார்' முறை என்று சொல்கிறார். இதில்தான் தற்போது பிரச்சனை இருக்கிறது.
பலவீனமான 4 தூண்கள்
ஏஐ தொழில்நுட்பத்தை வைத்து காசு பார்க்கும் முயற்சி பலவீனமான இருக்கிறது. அதாவது ஏஐ சிறப்பாக செயல்பட வேண்டும் எனில், அதற்கு மிகப்பெரிய மின்சார கட்டமைப்பு, டேட்டா சென்டர்கள், சிப்கள் உள்ளிட்டவை தேவை. இதற்காக பெரிய அளவில் காசை வாரி இறைக்க வேண்டும். 2028க்குள் மைக்ரோசாப்ட், அமேசான் போன்ற நிறுவனங்கள் சுமார் 3 லட்சம் டாலர்களை ஏஐ-க்காக செலவு செய்ய திட்டமிட்டிருக்கிறார்கள். இப்படி காசை இறைப்பது முதல் பலவீனம். இறைத்த காசை எப்படி மீண்டும் எடுக்க மேற்கொள்ளப்படும் முயற்சிகள் இரண்டாவது பலவீனம்.
போலி கணக்கு
ஏற்கெனவே காசை கண்மூடித்தனமாக செலவு செய்த நிறுவனங்கள், தங்கள் நிறுவனத்தை நம்பி முதலீடு செய்தவர்களுக்கு லாப கணக்கு காட்ட வேண்டும். லாபம் இல்லாத நிறுவனங்கள் அமெரிக்க சந்தையில் நிற்க முடியாது. எனவே, போலியாக அக்கவுண்ட்டை மெயின்டெயின் செய்து வருகிறார்கள்.
உதாரணத்திற்கு ஒரு நிறுவனம் சிப்களை வாங்குகிறது. ஒரு சிப்பின் விலை ரூ. 1 லட்சம் என்றும், ஒவ்வொரு சிப்பும் சுமார் 4 ஆண்டுகள் வரை உழைக்கும் எனவும் வைத்துக்கொள்வோம். அப்படியெனில் ஆண்டுக்கு ரூ.25,000 செலவு என்று கணக்கு வரும். ஆனால், சில நிறுவனங்கள் சிப் 7 ஆண்டுகள் வரை உழைக்கும் என்று கூறி கணக்கு எழுதுகின்றன. அப்படியெனில் ரூ.1 லட்சத்தை 4 ஆண்டுகளுக்கு பதில் 7 ஆண்டுகளுக்கு செலவு செய்ய முடியும். மீதமுள்ள 3 ஆண்டுகளுக்கு எந்த எக்ஸ்ட்ரா செலவும் இல்லை. இது லாபம்தானே என்று கணக்கில் காட்டுகிறது.
உண்மையான பிரச்சனை
பிரச்சனை என்னவெனில், 4 ஆண்டுகளுக்கு பிறகு சிப்கள் வேலை செய்யவில்லை எனில், மீண்டும் ரூ.1 லட்சம் செலவழிக்க வேண்டும். அப்போது இந்த ஏமாற்று வேலை மொத்தமாக பெரியதாக வெளியில் தெரிந்துவிடும். இருப்பினும், "நாங்கதான் ஏஐ தொழில்நுட்பத்தில் ராஜா. எனவே எங்களை நம்பி நிறுவனத்துல காசு போடுங்க" என்று முதலீட்டாளர்களை ஏமாற்ற ஏஐ நிறுவனங்கள் இப்படி போலி கணக்குகளை எழுதுகின்றன.
உள்ளுக்குள் சுழலும் பணம்
மூன்றாவது பலவீனமான விஷயம். சுழற்சி முறையில் மோசடி. என்விடியா(Nvidia) நிறுவனம் தனது சிப்களை ஒரு ஸ்டார்ட் அப் நிறுவனத்திற்கு விற்கிறது. இதன் மூலம் பணம் பார்க்கிறது. நிறைய விற்பனை ஆவதால், "பாருங்க எங்க சிப் செம்மையா சேல் ஆகுது" என்று வெளியில் காட்டிக்கொள்கிறது. இதன் மூலம் இந்நிறுவனத்தின் பங்கு மதிப்பு அதிகரிக்கிறது. முதலீடுகளும் உயர்கின்றன.
பிரச்சனை என்னவெனில், என்விடியாவிடம் சிப்களை வாங்கிய ஸ்டார்ட் அப் நிறுவனத்தில், முதலீடு செய்திருப்பது என்விடியாவின் ஒரு கிளை நிறுவனமாகத்தான் இருக்கும். இதன் மூலம் காசு உள்ளுக்குள் சுற்றிக்கொண்டே இருக்கும். வெளியிலிருந்து பார்ப்பவர்களுக்கு அடடே என்விடியா சிப்கள் படு பயங்கரமாக சேல் ஆகிறதே! என்று ஆச்சர்யப்பட வைக்கும். இப்போது இந்த ஸ்டார்ட் அப் நிறுவனம் தோல்வியடைந்தால், மொத்தமும் காலி.
தோல்வியால் வெளிப்படும் உண்மை
நான்காவது பலவீனமான விஷயம் கடன் சுமை. ஏஐ நிறுவனங்கள் நியாமான வளர்ச்சியை காட்டி, முதலீட்டாளர்களிடமிருந்து பணத்தை வாங்க வேண்டும். ஏஐ வளர்ச்சி போதுமானதாக இல்லை என்பதால் ஓரளவுதான் முதலீட்டாளர்கள் காசு கொடுப்பார்கள். எனவே, வெளியில் அதிக வட்டிக்கு கடன் வாங்கி ஏஐ பற்றி இல்லாதது பொல்லாததை சொல்லவும், இப்படி சொன்னதை செய்து காட்டவும் நிறுவனம் பணம் செலவழிக்கிறது. இதில் தோல்வி ஏற்படும்போது வாங்கிய கடனை கொடுக்க முடியாமல் மொத்த சொத்தையும் விற்றுவிடுகிறது.
மனிதனையே மிஞ்சும் அறிவு ஏஐ தொழில்நுட்பத்தில் இருக்கிறது கூறி, இல்லாத மாயமானை கார்ப்பரேட் நிறுவனங்கள் துரத்திக்கொண்டிருக்கின்றன. ஒரு கட்டத்தில் உண்மை வெளியாகும் போது ஏஐ எனும் பிம்பம் உடையும் என்று மைக்கெல் பர்ரி கூறியுள்ளார்.
-
80 பிளஸ் ஏஐ டூல்ஸ்.. நீங்கள் ஒரு மாதத்தில் செய்யும் வேலைகளை.. சில நிமிடங்களில் செய்யும் -
பகலை விற்று வாங்கிய நள்ளிரவுப் பணம்! அமெரிக்க ஷிஃப்ட் வேலையின் உண்மையை உடைத்த புனே இளைஞர் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்!












Click it and Unblock the Notifications